Showing posts with label மாலை. Show all posts
Showing posts with label மாலை. Show all posts

Sunday, February 19, 2023

பாமாலை 34 - இவ்வந்தி நேரத்தில் (Montgomery)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. இவ்வந்தி நேரத்தில் எங்கே
போய்த் தங்குவீர் என் இயேசுவே
என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்
மா பாக்கியத்தை அருளும்.

2. ஆ, நேசரே நீர் அடியேன்
விண்ணப்பத்துக்கிணங்குமேன்
என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்
ஒருவரே என்றறிவீர்.

3. பொழுது சாய்ந்துபோயிற்று
இரா நெருங்கி வந்தது
மெய்ப்பொழுதே, இராவிலும்
இவ்வேழையை விடாதேயும்.

4. ஆ, என்னைப் பாவ ராத்திரி
பிடித்துக் கெடுக்காதினி
நீர் ஒளி வீசியருளும்
ரட்சிப்பின் பாதை காண்பியும்.

5. நீர் என் கடை இக்கட்டிலும்
என்னோடிருந்து ரட்சியும்
உம்மைப் பிடித்துப் பற்றினேன்
நீர் போய்விடீர் என்றறிவேன்.


Post Comment

Thursday, February 19, 2015

பாமாலை 41 - வியாதியஸ்தர் மாலையில்

பாமாலை 41 – வியாதியஸ்தர் மாலையில்
(At even ere the sun was set)

’சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்’. மாற்கு 1:32

Rev. Canon Henry Twells
லண்டன் மாநகரின் பெரும் கல்விச்சாலை ஒன்றின் தலைமை ஆசிரியராயிருந்த கனோன் ட்வெல்ஸ் (Rev. Canon Henry Twells) என்பவர் ஒருநாள் பள்ளி மாணவருக்குப் பரீட்சை நடத்திக்கொண்டிருந்தார்.  மாணவர்கள் வரிசையாக ஆசனங்களில் அமர்ந்து அமைதியாக எழுதிக்கொண்டிருந்தனர். ஆசிரியர் ஒருமுறை அறையைச்சுற்றி மேற்பார்வை இட்டபின், தமது ஆசனத்தில் அமர்ந்தார்.  தலைமையாசிரியராக இருந்தபடியால் அவருக்கு எப்போதும் அதிக வேலையிருந்தது.  ஆனால் இப்போது பரீட்சை அறையில் வேறு வேலை செய்ய இயலாமையால், பல நிறக் கண்ணாடிகள் பதித்திருந்த ஒரு ஜன்னல் வழியாக வெளியிலிருந்த இயற்கைக் காட்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்.  மாலைநேரம் நெருங்கும்போது, சூரிய ஒளியையும், செவ்வானத்தில் மேகங்களில் காணப்பட்ட பலவித வர்ணங்களையும் கண்டுகளித்தார்.  சூரியன் அஸ்தமிக்கும் நேரம் சமீபித்தபோது, அன்று காலையில் அவர் வேதத்தில் வாசித்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.  இதைப் போலொத்த ஒரு மாலை வேளையில் (மாற்கு 1:32) வியாதியஸ்தர் ஆண்டவரிடம் கொண்டுவரப்பட்டு குணமாக்கப்பட்டதை நினைத்தார்.

     இதை ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கையில் தமது நண்பரான ஸர். ஹென்றி பேக்கர் சில தினங்களுக்குமுன் அவரிடத்தில் செய்த ஒரு வேண்டுகோள் ஞாபகத்துக்கு வந்தது.  ஆங்கிலச் சபைகளில் உபயோகப்பட்டுவரும், ‘Hymns Ancient and Modern’ என்னும் பாட்டுப்புத்தகம் அப்போது புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.  இதைப் புதுப்பிக்கும் குழுவில் ஸர் ஹென்றி பேக்கரும் ஒருவர். இவர் தமது நண்பரான கனோன் ட்வெல்ஸை சில பாடல்கள் எழுதித்தரும்படி கேட்டிருந்தார்.  இவ்வேண்டுகோள் ஞாபகத்துக்கு வரவே, அவர் மாலை வேளையில் வியாதியஸ்தர் ஆண்டவரிடம் கொண்டுவரப்பட்ட சம்பவத்தை வைத்து, ‘வியாதியஸ்தர் மாலையில்’ என்னும் பாடலையும் எழுதி முடித்தார்.  இப்பாடலுக்கு சங்கீத நிபுணரான ஜியார்ஜ் ஜோசப் அமைத்த, ‘Angelus’ என்னும் ராகம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

     ஆங்கிலத்தில் இப்பாடலின் முதல் வரியான, ‘At even ere the sun was set’ என்பதைக் குறித்து பிற்காலத்தில் அபிப்பிராய பேதங்கள் உண்டாயின. ‘ere the sun was set’ என்பது, ‘சூரியன் அஸ்தமிக்குமுன்’ எனப்பொருள்படும்.  ஆனால் வேதப்பகுதி (மாற்கு 1:32, லூக்கா 4:40) ‘சூரியன் அஸ்தமித்தபோது’ என்றிருக்கிறது. இச்சம்பவம் ஓய்வுநாள் மாலையில் நடந்தது.  ஓய்வுநாள் மாலையில் சூரியன் அஸ்தமித்தபின்னரே யூதர் வேலை செய்வார்கள்.  ஆகையால் சில பாட்டுப்புத்தகங்களில், ‘When the sun was set’ எனத் திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்மொழிபெயர்ப்பில், ‘மாலையில்’ என்றிருக்கிறது.

     இப்பாடலை எழுதிய கனோன் ஹென்றி ட்வெல்ஸ் என்பவர் 1825ம் ஆண்டு பிறந்தார். சிறந்த கல்லூரிப் பயிற்சிக்குப் பின், அவர் 1856 முதல் பதினான்கு ஆண்டுகள் லண்டன் மாநகரிலுள்ள புகழ்பெற்ற, ‘கோடோல்பின் ஹாமர்ஸ்மித்’ உயர்நிலைப்பள்ளியின் (Godolphin School, Hammersmith, London) தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.  அச்சமயத்தில்தான், 1868ல் இப்பாடலை எழுதினார்.  அவர் வேறு அநேக பாடல்கள் எழுதியபோதிலும், இந்த ஒரே பாடல் வாயிலாகவே நினைவுகூரப்படுகிறார்.  பின்னர் பீட்டர்பரோ பேராலயத்தின் பிரதமகுருவாகச் (Honorary Canon of Peterborough Cathedral) சிலகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றார்.  அவர் 1900ம் ஆண்டு தமது 77ம் வயதில் காலமானார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            வியாதியஸ்தர் மாலையில்
அவஸ்தையோடு வந்தனர்;
தயாபரா, உம்மண்டையில்
சர்வாங்க சுகம் பெற்றனர்.

2.            பற்பல துன்பம் உள்ளோராய்
இப்போதும் பாதம் அண்டினோம்
பிரசன்னமாகித் தயவாய்
கண்ணோக்குவீரென்றறிவோம்

3.            விசாரம் சஞ்சலத்தினால்
அநேகர் கிலேசப்பட்டனர்;
மெய்பக்தி அன்பின் குறைவால்
அநேகர் சோர்வடைந்தனர்.

4.            உலகம் வீண் என்றறிந்தும்
பற்றாசை பலர் கொண்டாரே;
உற்றாரால் பலர் நொந்தாலும்,
மெய்நேசர் உம்மைத்தேடாரே.

5.            மாசற்ற தூய தன்மையை
பூரணமாய்ப் பெறாமையால்,
எல்லோரும் சால துக்கத்தை
அடைந்தோம் பாவப் பாசத்தால்.

6.            ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய்
மா துன்பம் நீரும் அடைந்தீர்;
எப்பாடும் பாவமும் அன்பாய்
ஆராய்ந்து பார்த்து அறிவீர்.

7.            உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;
நீர் தொட்டால் சொஸ்தம் ஆவோமே,
ஆரோக்கியம் எல்லாருக்கும்
இம்மாலை தாரும், இயேசுவே.

Post Comment

Tuesday, February 17, 2015

பாமாலை 40 - மெய் ஜோதியாம் நல்

பாமாலை 40 – மெய்ஜோதியாம் நல் மீட்பரே
(Sun of my soul, Thou Saviour dear)

நமதாண்டவர் உயிர்த்தெழுந்தபின், இரண்டு சீஷர்கள் எம்மாவு என்னும் கிராமத்துக்குச் செல்லும்போது, இயேசுவும் அவர்களுடனே கூடச் சேர்ந்து நடந்து போனார்.  கிராமத்தைச் சமீபித்தபோது, அவர்கள், ‘நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று’ (லூக்கா 24:29) என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்பாடல் எழுதப்பட்டது.  தனிமையாகச் செல்லும் ஒரு பிரயாணி, சூரியன் அஸ்தமித்தபின், இருளில் செல்லும்போது, கடவுள்பேரில் நம்பிக்கைவைத்து, தனக்குத் தேவையான பாதுகாப்பையும், ஒளியையும் அவரே அளிப்பார் என்னும் விசுவாசத்தில் செல்லுவதை இப்பாடல் குறிக்கிறது. மெய்ஜோதியான நம் மீட்பர் நம்மோடு தங்கினால், பயத்தை உண்டுபண்ணும் இரவு போன்ற நிலைமைகள் நமக்கு இல்லை என்பது, இப்பாடலின் மூலம் நமக்கு உணர்த்தப்படுகிறது.

John Keble
(Source Credits : Wikipedia)
இப்பாடலை எழுதிய ஜான் கெபிள் போதகர் (John Keble) ஆங்கிலச் சபையைச் சேர்ந்தவர்.  இவர் இங்கிலாந்தில் க்ளஸ்டர்ஷயர் (Gloucestershire) மாகாணத்தில், பேர்பீல்டு என்னுமிடத்தில் 1792ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி பிறந்தார்.  அவரது தந்தையும் ஓர் ஆங்கிலச் சபையில் குருவாகப் பணியாற்றி வந்தவர்.  இளவயதில் அவரது தந்தையே அவருக்குக் கல்வி கற்பித்தார்.  பதினைந்தாம் வயதில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், கார்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரியில் (Corpus Christi College, Oxford) சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஆங்கிலம், லத்தீன் மொழிகளில் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.  தமது பதினெட்டாம் வயதில் ஆக்ஸ்ஃபோர்டு ஓரியல் கல்லூரியில் முதல் மாணவனாக (Fellow of Oriel College) தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சிறந்த கவித்திறமையுள்ளவராதலால், அவர் பத்து ஆண்டுகள் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.  1815ல் குருத்துவப் பட்டம் பெற்று, தன் ஆயுள் முழுவதும் வின்செஸ்டர் (Winchester) நகருக்கருகிலிலுள்ள ஹர்ஸ்லி (Hursley) என்னும் ஒரு சிறிய கிராமச் சபையில் போதகராகப் பணியாற்றினார்.

அவர் கல்லூரியில் மாணவராக இருக்கும்போதே சிறந்த கவிஞராக விளங்கினார். போதகரானபின் குருத்துவப் பணியுடன், பல கட்டுரைகள், கிறிஸ்தவக் கவிகள், அருளுரைகள் முதலியன எழுதிவந்தார்.  அவரது மிகச்சிறந்த கிறிஸ்தவப் பணி, அவர் இயற்றிய ஒரு பாட்டுப்புத்தகமாகும்.  அவர் புகழை விரும்பாதவராதலால், தமது பெயரால் அந்தப் புத்தகத்தை அச்சிடாமல், “கிறிஸ்தவ ஆண்டு” (Christian Year) என்னும் தலைப்புடன் வெளியிட்டார்.  நாற்பது ஆண்டுகளுக்குள், இப்புத்தகத்தின் மூன்று லட்சம் பிரதிகள் விலையாகின.  ‘மெய் ஜோதியாம் நல் மீட்பரே’ என்னும் பாடலும் முதல்முறையாக இப்புத்தகத்தில்தான் வெளியானது.  இப்பாடலுக்கு உபயோகப்படும் ராகம், அவர் ஊழியம் செய்த கிராமத்தின் ஞாபகார்த்தமாக “Hursley” என்றழைக்கப்படுகிறது.  அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை,

‘நாம் நித்திரை செய்து விழித்தோம்’ – பாமாலை 32
‘ஏதேனில் ஆதிமணம்’ – பாமாலை 216

‘கிறிஸ்தவ ஆண்டு” என்னும் இப்புத்தகத்தை விற்றதில் கிடைத்த வருமானத்தை ஆலயங்கள் கட்டுவதற்கும், ஹர்ஸ்லி ஊரிலுள்ள ஆலயத்தைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தினார்.

ஜான்கெபிள் போதகர் 1866ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் தேதி போர்ன்மத் என்னும் ஊரில் காலமானார்.  மூன்று ஆண்டுகளுக்குப்பின், அவர் ஞாபகார்த்தமாக ஆக்ஸ்ஃபோர்டு நகரில் கெபிள் கல்லூரி (Keble College, Oxford) நிறுவப்பட்டது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    மெய்ஜோதியாம் நல் மீட்பரே
நீர் தங்கினால் ராவில்லையே
என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்
மேகம் வராமல் காத்திடும்.

2.    என்றைக்கும் மீட்பர் மார்பிலே
நான் சாய்வது பேரின்பமே
என்றாவலாய் நான் ராவிலும்
சிந்தித்துத் தூங்க அருளும்.

3.    என்னோடு தங்கும் பகலில்
சுகியேன் நீர் இராவிடில்
என்னோடே தங்கும் ராவிலும்
உம்மாலே அஞ்சேன் சாவிலும்.

4.    இன்றைக்குத் திவ்விய அழைப்பை
அசட்டை செய்த பாவியை
தள்ளாமல், வல்ல மீட்பரே
உம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே

5.    வியாதியஸ்தர், வறியோர்
ஆதரவற்ற சிறியோர்
புலம்புவோர் அல்லாரையும்
அன்பாய் விசாரித்தருளும்

6.    பேரன்பின் சாகரத்திலும்
நான் மூழ்கி வாழுமளவும்,
என் ஆயுள்காலம் முழுதும்
உம் அருள் தந்து காத்திடும்.

Sun of my Soul

Post Comment

Monday, February 16, 2015

பாமாலை 39 - முடிந்ததே இந்நாளும் (St. Anatolius)

பாமாலை 39 - முடிந்ததே இந்நாளும் 
The day is past and over
Tune : St. Anatolius


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. முடிந்ததே இந்நாளும்
உம்மையே துதிப்போம்
எத்தோஷம் இன்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
நாதா உம்மோடு வைத்திடும்
நீர் ராவில் எம்மைக் காத்திடும்.


2. முடிந்ததே உற்சாகம்;
உள்ளம் உயர்த்துவோம்
எப்பாவம் இன்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
ராவை ஒளியாய் மாற்றிடும்
நீர் ராவில் உம்மைக் காத்திடும்


3. முடிந்ததே எம் வேலை
களிப்பாய்ப் பாடுவோம்
எச்சேதமின்றி ராவும்
சென்றிடக் கெஞ்சுவோம்
நாதா உம்மோடு வைத்திடும்
நீர் ராவில் எம்மைக் காத்திடும்.


4. காப்பீர் எம் ஆத்துமாவை
எம் பாதை நேரிடும்
எம்மோசம் சேதம் யாவும்
உமக்குத் தோன்றிடும்
மாந்தரின் நேசா, கேட்டிடும்
எத்தீங்குமின்றிக் காத்திடும்.

Post Comment

Thursday, February 12, 2015

பாமாலை 38 - நீர் தந்த நாளும் (St. Clement)

பாமாலை 38 - நீர் தந்த நாளும் 
The day Thou gavest Lord is ended
Tune : St. Clement

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    நீர் தந்த நாளும் ஓய்ந்ததே
கர்த்தாவே ராவும் வந்ததே
பகலில் உம்மைப் போற்றினோம்
துதித்து இளைப்பாறுவோம்.

2.    பகலோன் ஜோதி தோன்றவே
உம் சபை ஓய்வில்லாமலே
பூவெங்கும் பகல் ராவிலும்
தூங்காமல் உம்மைப் போற்றிடும்

3.    நாற்றிசையும் பூகோளத்தில்
ஓர் நாளின் அதிகாலையில்
துடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமே
ஓர் நேரம் ஓய்வில்லாததே

4.    கீழ்கோளத்தோர் இளைப்பாற
மேல்கோளத்தோர் எழும்பிட
உம் துதி சதா நேரமும்
பல் கோடி நாவால் எழும்பும்.

5.    ஆம், என்றும் ஆண்டவரே நீர்,
மாறாமல் ஆட்சி செய்குவீர்;
உம் ராஜ்யம் என்றும் ஓங்கிடும்
சமஸ்த சிருஷ்டி சேர்ந்திடும்.

Post Comment

Wednesday, February 11, 2015

பாமாலை 37 - ஞான நாதா வானம் (Ar Hyd Y Nos)

பாமாலை 37 - ஞான நாதா வானம் 
God that madest earth and heaven
Tune : Ar Hyd Y Nos


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. ஞான நாதா, வானம் பூமி
நீர் படைத்தீர்
ராவு பகல் ஓய்வு வேலை
நீர் அமைத்தீர்
வான தூதர் காக்க எம்மை,
ஊனமின்றி நாங்கள் தூங்க
ஞான எண்ணம் தூய கனா
நீர் அருள்வீர்.

2. பாவ பாரம் கோப மூர்க்கம்
நீர் தீர்த்திடும்
சாவின் பயம் ராவின் அச்சம்
நீர் நீக்கிடும்
காவலராய்க் காதலராய்
கூடத் தங்கி தூய்மையாக்கும்
ராவின் தூக்கம் நாளின் ஊக்கம்
நீர் ஆக்கிடும்.

3. நாளில் காரும் ராவில் காரும்
ஆயுள் எல்லாம்
வாழும் காலம் மா கரத்தால்
அமைதியாம்
சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து
ஆகிடவே தூதர் போன்று,
ஆண்டிடவே மாட்சியோடு
உம்மோடென்றும்.

Post Comment

Tuesday, February 10, 2015

பாமாலை 35 - எங்கள் ஊக்க வேண்டல் (Cairnbrook)

பாமாலை 35 - எங்கள் ஊக்க வேண்டல் 
(Holy Father in Thy mercy)
Tune : Cairnbrook

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1.    எங்கள் ஊக்க வேண்டல் கேளும்
தூய தந்தையே
தூரம் தங்கும் எங்கள் நேசர்
காருமே.

2.    மீட்பரே உம் பிரசன்னத்தால்
பாதை காட்டுவீர்
தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்
சோர்வில் நீர்.

3.    துன்பம் தோன்றித் துணையின்றி
மோசம் நேர்கையில்
அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்
சோகத்தில்!

4.    மீட்பின் மா மகிழ்ச்சி அவர்
பலம் திடனாய்
அன்போடும்மைப் போற்றச் செய்வீர்
நாளுமாய்.

5.    தூய ஆவி போதனையால்
தூய்மையாக்குவீர்
போரில் வெற்றிபெற அருள்
ஈகுவீர்

6.    பிதா மைந்தன் தூய ஆவி
விலகாதேயும்
அருள் அன்பு மீட்பு காவல்
ஈந்திடும்.

Post Comment

Monday, February 9, 2015

பாமாலை 34 - இவ்வந்தி நேரத்தில்

பாமாலை 34 - இவ்வந்தி நேரத்தில்


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. இவ்வந்தி நேரத்தில் எங்கே
போய்த் தங்குவீர் என் இயேசுவே
என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்
மா பாக்கியத்தை அருளும்.

2. ஆ, நேசரே நீர் அடியேன்
விண்ணப்பத்துக்கிணங்குமேன்
என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்
ஒருவரே என்றறிவீர்.

3. பொழுது சாய்ந்துபோயிற்று
இரா நெருங்கி வந்தது
மெய்ப்பொழுதே, இராவிலும்
இவ்வேழையை விடாதேயும்.

4. ஆ, என்னைப் பாவ ராத்திரி
பிடித்துக் கெடுக்காதினி
நீர் ஒளி வீசியருளும்
ரட்சிப்பின் பாதை காண்பியும்.

5. நீர் என் கடை இக்கட்டிலும்
என்னோடிருந்து ரட்சியும்
உம்மைப் பிடித்துப் பற்றினேன்
நீர் போய்விடீர் என்றறிவேன்.

Post Comment

பாமாலை 33 - இந்நாள் வரைக்கும் கர்த்தரே (Canon)

பாமாலை 33 - இந்நாள் வரைக்கும் கர்த்தரே 
Glory to Thee my God this night
Tune : Canon

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    இந்நாள் வரைக்கும் கர்த்தரே
என்னைத் தற்காத்து வந்தீரே
உமக்குத் துதி ஸ்தோத்திரம்
செய்கின்றதே என் ஆத்துமம்.

2.    ராஜாக்களுக்கு ராஜாவே,
உமது செட்டைகளிலே
என்னை அணைத்துச் சேர்த்திடும்
இரக்கமாகக் காத்திடும்.

3.    கர்த்தாவே, இயேசு மூலமாய்
உம்மோடு சமாதானமாய்
அமர்ந்து தூங்கும்படிக்கும்,
நான் செய்த பாவம் மன்னியும்.

4.    நான் புதுப் பலத்துடனே
எழுந்து உம்மைப் போற்றவே
அயர்ந்த துயில் அருளும்
என் ஆவியை நீர் தேற்றிடும்.

5.    நான் தூக்கமற்றிருக்கையில்,
அசுத்த எண்ணம் மனதில்
அகற்றி, திவ்விய சிந்தையே
எழுப்பிவிடும், கர்த்தரே,

6.    பிதாவே, என்றும் எனது
அடைக்கலம் நீர், உமது
முகத்தைக் காணும் காட்சியே
நித்தியானந்த முத்தியே.

7.    அருளின் ஊற்றாம் ஸ்வாமியை
பிதா குமாரன் ஆவியை
துதியும், வான சேனையே
துதியும், மாந்தர் கூட்டமே.

Post Comment

Tuesday, March 4, 2014

பாமாலை 36 - என்னோடிரும் மா நேச

‘நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று’. லூக்கா 24:29

‘இயேசுபெருமான் உயிர்த்தெழுந்த தினத்தன்று மாலையில், எம்மாவூருக்குச் சென்ற இரு சீஷர்கள் ஆண்டவரிடத்தில் சொன்ன இவ்வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பாடலே, ‘என்னோடிரும் மா நேச கர்த்தரே’ என்னும் பாடலாகும்.  எல்லாப் பாட்டுப் புத்தகங்களிலும் இது தவறாமல் காணப்படுகிறது. ஆண்டவர் நம்மோடு தங்கியிருந்தால், நம் வாழ்க்கையின் அந்தியகாலம்வரை நமக்கு ஒரு சஞ்சலமும் ஏற்படாது.

         இப்பாடலை எழுதியவர் ஹென்றி பிரான்ஸிஸ் லைட் (Henry Francis Lyte 1793 – 1847). லைட் போதகர் 27 வயதாயிருக்கையில், வியாதியாயிருந்த ஒரு நண்பரை அடிக்கடி பார்க்கச் சென்றார்  நோயாளி எப்போதும், “ஆண்டவரே என்னோடிரும்” என்று கூறுவார்.  சில நாட்களில், அவர் இறந்துபோகவே, போதகருக்கு, ‘என்னோடிரும்’ என ஆரம்பிக்கும் ஒரு பாடல் எழுதும் எண்ணம் உதித்தது. 1847ம் ஆண்டு, தமது 54ம் வயதில் லைட் போதகர் காச நோயினால் பீடிக்கப்பட்டு, குளிர்காலத்தை உஷ்ணமான இத்தாலி நாட்டில் கழிக்கத் தீர்மானித்தார்.  பிரயாணம் புறப்படுமுன், தமது சபையாருக்குப் பிரசங்கம் செய்யவேண்டுமென விரும்பினார்.  அவர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால் அவரது குடும்பத்தினர் அதை ஆட்சேபித்தனர்.  ஆயினும் அவர் ஆலயத்துக்குச்சென்று, நற்கருணையைக் குறித்த ஓர் அரிய பிரசங்கம் செய்து, நற்கருணை கொடுப்பதிலும் பங்கெடுத்துக்கொண்டார்.  ஆராதனைக்குப்பின் களைப்படைந்தவராகக் காணப்பட்டாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை.

     அன்று மாலையில் அவர் கடற்கரையில் உலாவிக்கொண்டிருக்கையில், பல ஆண்டுகளுக்குமுன் அவர் எழுத ஆரம்பித்த “என்னோடிரும்” என்னும் பாடலை எழுதி முடிப்பதைக்குறித்து தீவிரமாய் ஆலோசிக்கலானார். ஆனால் அதிகக் களைப்படைந்திருந்தமையால், இவ்வேலையை இத்தாலி சென்று திரும்பியபின் முடிக்கலாம் என எண்ணினார்.  ஆயினும் அதை உடனே முடிக்கும்படி மனதில் ஏவப்பட்டு, அதை எழுதி முடித்து, பாடலையும் அதற்குத் தாம் எழுதிய ஓர் ராகத்தையும் தம் இனத்தவர் ஒருவரிடம் கொடுத்தார்.  இது நாம் வழக்கமாகப் பாடும் ராகம் அல்ல.  பின்பு, முன் தீர்மானித்தபடியே, தம் குடும்பத்தாருடன் இத்தாலி நாட்டுக்குப் பயணமானார்.  சுமார் இரண்டு மாதங்களுக்குப்பின், நவம்பர் மாதம், 20ம் தேதி அவர் இத்தாலி நாட்டிலுள்ள நைஸ் நகரில் காலமானார்.  அவர் முதலில் எண்ணியபடி, இப்பாடலை முடிப்பதை ஒத்தி வைத்திருந்தால், இப்பாடலை கிறிஸ்தவ உலகம் இழந்திருக்கக்கூடும்.

     நமது பாட்டுப்புத்தகங்களில் இப்பாடல், மாலைக் கீதங்கள் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.  ஆனால் லைட் போதகர் வாழ்க்கையின் அந்தி நேரத்தைக் குறித்து எழுதினாரேயொழிய ஒரு நாளின் அந்தி நேரத்தைக் குறிக்கவில்லை என்பதை இப்பாடலின் இரண்டாவது கவியும், ஆறாவது கவியும் தெளிவாகக் காட்டும்.  மேலும் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தமையால், தன் வாழ்க்கையின் அந்திய காலம் நெருங்கி வருவதை எண்ணி இப்பாடலை எழுதலானார்.  அவர் எழுதிய இதர பாடல்களில் முக்கியமானவை:

·         பாமாலை 1 - ஆத்மமே உன் ஆண்டவரின்
·         பாமாலை 220 – ஆண்டவா ! மேலோகில் உம்
·         பாமாலை 311 – சிலுவை சுமந்தோனாக

‘என்னோடிரும் மா நேச கர்த்தரே’ பாடலுக்கான இசையை வில்லியம் ஹெச். மாங்க் (William H. Monk) என்பவர் எழுதி, ஹென்றியின் நினைவு ஸ்தோத்திர ஜெபக்கூட்டத்தில் இசைத்தார்.

அன்று முதல் இப்பாடல் பல கிறிஸ்தவ சபைகளில் பிரபலமாகத் துவங்கியது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், மகாத்மா காந்தியடிகள் ஆகியோருக்கும் இப்பாடல் மிகவும் விருப்பத்திற்குரிய பாடலாகும். ஆறாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் இரண்டாம் எலிசபெத் ராணி போன்ற அரச குடும்பத்தினரின் திருமணங்களிலும் இப்பாடல் பாடப்பட்டது. ஒவ்வொரு உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் துவக்கத்திலும் இப்பாடல் பாடப்படுகிறது.  மேலும், ஆஸ்திரியா, நியூஸிலாந்து, கனடா, இங்கிலாந்து தேசங்களின் பல்வேறு வருடாந்திர கொண்டாட்டங்களிலும் இப்பாடல் இசைக்கப்படுகிறது.

இப்பாடல் எழுதப்பட்டு, நூறு ஆண்டுகளுக்குப்பின், 1947ல் ஒரு பத்திரிக்கை நிருபர் லைட் போதகர் குடியிருந்த வீட்டுக்குச் சென்று, அவரது பேத்தியாகிய ஹாக் அம்மையாரைப் பேட்டிகண்டார்.  அவ்வம்மையார் தம் பாட்டனார் நூறு ஆண்டுகளுக்கு முன் வழக்கமாகப் படுக்கும் அறையிலேயே வியாதியாகப் படுத்திருந்தார்கள்.  அவர்கள் லைட் போதகர் தம் கையால் எழுதிய ‘என்னோடிரும்’ என்னும் பாடலின் முதல் பிரதியைக் காட்டினார்கள்.  போதகர் இப்பாடலுக்கு எட்டுக் கவிகள் எழுதி உள்ளார்.  ஆனால் நமது பாட்டுப் புத்தகங்களில் ஐந்து அல்லது ஆறு கவிகள்தான் காணப்படுகின்றன.  விடப்பட்ட கவிகளில் கடைசிக் கவியை பின்வருமாறு மொழிபெயர்க்கலாம்.

‘இளமையில் என்மேல் பிரகாசித்தீர்
பின் வீம்பு கொண்டும்மை விட்டோடினும்,
நீர் என்னைக் கைவிடாதிருக்கிறீர்
      முடிவு மட்டும் நீர் என்னோடிரும்’

     கடவுளின் மிகவும் எளிய ஊழியக்காரர் ஒருவர் எழுதிய பாடல் இன்று உலகெங்கும் ஒலிக்கிறதென்றால், அது, அவர் ஆண்டவரிடம் ஜெபித்து, தியானித்து பெற்ற பாடல் என்ற காரணமேயன்றி வேறென்ன!

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.            என்னோடிரும் மா நேச கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
மற்றோர் சகாயம் அற்ற போதிலும்
நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும்.

2.    நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்
மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும்.

3.    நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல், சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்
நீர் பாவி நேசரே, என்னோடிரும்.

4.    நீர் கூட நின்று அருள் புரியும்
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணைநீர், என் தஞ்சமாயிரும்
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.

5.    நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.

6.    நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும் சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.

Abide with me



Post Comment