Showing posts with label தெய்வ துதி. Show all posts
Showing posts with label தெய்வ துதி. Show all posts

Friday, February 17, 2017

பாமாலை 11 - மகா அதிசயங்களை

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    மகா அதிசயங்களைச்
செய்தென்னைப் பூரிப்பித்து,
உபத்திரவத்தின் பாரத்தை
இரக்கமாய்க் கழித்து,
ரட்சிக்கிற தயாபரர்
இஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

2.    கர்த்தாதி கர்த்தா, தேவரீர்
யாவற்றையும் நன்றாக
சிஷ்டித்துத் திட்டம் பண்ணினீர்
என்றும்மைப் பணிவாக
விண் மண் கடல் ஆகாசத்து
சேனைத் திரள்கள் போற்றுது;
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

3.    ஆ, கேளும் என்தன் துன்பத்தில்
கர்த்தாவைக் கெஞ்சிவந்தேன்
அப்போது ஏற்ற வேளையில்
மகா ரட்சிப்பைக் கண்டேன்,
இதற்கென் நாவே, கீதம்சொல்
என்னோடெல்லோரும் பாடுங்கள்,
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

4.    நான் தேவரீரை என்றைக்கும்
மகிழ்ச்சியாய்த் துதிப்பேன்;
நான் உம்மை நித்தநித்தமும்
புகழ்ந்து ஸ்தோத்திரிப்பேன்,
என் ஆத்துமமும் தேகமும்,
கர்த்தாவே, உம்மைப் போற்றவும்;
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

5.    மெய்மார்க்கத்தாரே, கர்த்தரை
துதித்துக் கொண்டிருங்கள்,
அவருடைய நாமத்தை
எந்நேரமும் தொழுங்கள்.
பொய்த் தேவர் செவிடூமையர்,
கர்த்தா கர்த்தாவே ஆண்டவர்,
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

6.    நாம் தெய்வ சன்னிதியிலே
மகா மகிழ்ச்சியாக
வந்துன்னத கர்த்தாவையே
வணக்கம் செய்வோமாக
பராபரனைப் போலே யார்,
யாவற்றையும் நன்றாக்கினார்
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி.

Post Comment

Tuesday, February 10, 2015

பாமாலை 3 - உன்னதம் ஆழம் எங்கேயும் (Tune- Gerontius)

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.
 
2.    பாவம் நிறைந்த பூமிக்கு
இரண்டாம் ஆதாமே
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே!
 
3.    முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர்தாம்
ஜெயிக்கத் துணையாயினார்
ஆ ஞான அன்பிதாம்
 
4.    மானிடர் சுபாவம் மாறவே
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்
 
5.    மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே
 
6.    கெத்செமெனேயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர்போன்றே சகித்து
மரிக்கக் கற்பித்தார்
 
7.    உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்
அவரின் வார்த்தை; செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

Post Comment

Sunday, August 31, 2014

பாமாலை 1 - ஆத்மமே உன் ஆண்டவரின் (Regent Square)

பாமாலை 1 – ஆத்மமே உன் ஆண்டவரின்
Praise my soul, the King of heaven
Tune : Regent Square

’என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்’ சங்கீதம் 30 : 12

கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதும் கடவுளைத் துதிக்க ஏவப்படுகிறோம். பொதுவாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மைகளுக்காக அவரைத் துதிக்கிறோம்.  ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லாதிருக்கும்போது அவரைத் துதிக்கிறோமா? நம்மில் அநேகருக்கு வாழ்க்கையில் கஷ்டங்களும், துன்பங்களும் அடிக்கடி நேர்ந்ததில்லை.  ஆயினும் இதை முன்னிட்டு நாம் கடவுளைத் துதிக்கிறோமா? ஆகவே எந்நிலையிலும் நாம் கடவுளைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறவாதிருப்போமாக.  நமது ஆலய ஆராதனைகளில் முதல் பகுதி எப்போதும் தெய்வ ஸ்துதியாகவே இருக்கும்.  இப்பகுதியில் பாடப்படும் பாடல்கள், வாசிக்கப்படும் திருமறைப்பக்குதிகள், ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் எல்லாம் தெய்வ ஸ்துதியே.  நமது பாட்டுப்புத்தகங்களிலும் முதல் பகுதியில் தெய்வஸ்துதி பாடல்களே வைக்கப்பட்டிருக்கின்றன.  பாமாலையின் முதல் பாடலாகிய இப்பாடல், 103ம் சங்கீதத்தைத் தழுவி எழுதப்பட்ட ஒரு துதிப்பாடலாகும்.

Henry Francis Lyte
1834ம் ஆண்டு ஹென்ரி லைட் போதகர் (Henry Francis Lyte), இங்கிலாந்தில் ப்ரிக்ஸ்ஹம் நகரில் திருப்பணியாற்றிவந்தார்.  ப்ரிக்ஸ்ஹம் ஒரு கடற்கரைப் பட்டிணம்.  இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடிப்பவர்கள்.  இம்மக்கள் அலைமிகுந்த கடலில் அதிக தைரியத்துடனும், துணிவுடனும் தங்கள் படகுகளை ஓட்டிச்சென்று வருவர்.  போதகர் அடிக்கடி கடற்கரையில் நின்று, மீன்படகுகள் கடுமையான அலைகள் மத்தியிலும் பத்திரமாகக் கரை சேருவதைக் கவனிப்பது வழக்கம்.  எந்த ஆபத்திலும் கடவுள் ஒரு தந்தைபோல் அவர்களைப் பராமரித்து வருகிறார் என்னும் உண்மையைப் போதகர் உணர்ந்து, அவர்கள் கடவுளைத் துதித்துப் பாடுவதற்கேற்ற ஒரு பாடல் எழுத எண்ணங்கொண்டார்.  இதற்கு ஆதாரமாக அவர் 103ம் சங்கீதத்தைத் தெரிந்தெடுத்து, அதை ஒரு செய்யுளாக எழுதி இப்பாடலை உருவாக்கினார்.  எந்நிலையிலும் கடவுளின் கரம் நம்மைத் தாங்கிக்காப்பதால் நாம் அவரைத் துதித்தல் ஏற்றது என்பதை இப்பாடலின்மூலம் உணர்த்துகிறார்.  மேலும், சர்வ சிருஷ்டிகளும் கடவுளைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளன என்பதை இப்பாடலின் கடைசிக்கவியில் எடுத்துரைக்கிறார்.

ஹென்ரி பிரான்ஸிஸ் லைட் போதகர் 1793ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி ஸ்காட்லாண்ட் நாட்டில் எட்னம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளமையில் மிகவும் எளிமையான நிலைமைகளை அவர் அனுபவிக்கவேண்டியிருந்தது.  ஆரம்பக்கல்வியைப் பிறந்த ஊரிலேயே முடித்து, குருத்துவ ஊழியப் பயிற்சியை டப்ளின் நகரில் பெற்றார்.  அவரது கல்லூரி வாழ்க்கையில் ஆங்கிலச் செய்யுள்கள் எழுதுவதில் மூன்றுமுறை முதல் பரிசு பெற்றார்.  பயிற்சியை முடித்தவுடன் 1815ல் அயர்லாந்தில் வெக்ஸ்ஃபோர்ட் சபையில் போதகராக அபிஷேகம் பெற்றார்.  ஐந்து ஆண்டுகளுக்குப்பின் லிமிங்டன் சபையிலும், கடைசியாக 1823 முதல் ப்ரிக்ஸ்ஹம் என்னும் மீன்பிடிக்கும் கடற்கரைப் பட்டிணத்திலும் போதகராகப் பணியாற்றினார்.

அவர் பணியாற்ற ஆரம்பித்தபோது அவரது பணி, கடமைப் பணியாக மட்டுமே இருந்தது.  மேலும் அவரது கவித்திறன், பொதுவான விஷயங்களைக்குறித்த கவிகள் எழுதுவதிலேயே செலவிடப்பட்டது.  ஆனால் அவர் இருபத்தைந்து வயதாயிருக்கையில், அவரது நண்பரான ஒரு போதகர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.  அவரது மரணப்படுக்கையினருகில் நிற்கும்போது அவர் கூறிய இறுதிவார்த்தைகளையும், தம் பாவங்களுக்கு நிவாரணமான ஒருவர் உண்டு என்னும் அவரது நம்பிக்கையையும் கவனித்த லைட் போதகரின் வாழ்க்கையில் அன்று முதல் ஒரு புதுதிருப்பம் உண்டானது.  இதன்பின்பு அவர் எழுதிய கவிகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை அளிப்பதற்காக எழுதப்பட்டது.

ப்ரிக்ஸ்ஹம் நகரில் திருப்பணியாற்றும்போதுதான் அவர் ஏராளமான பாடல்கள் எழுதினார்.  1847ம் ஆண்டு அவர் 54 வயதாயிருக்கையில் காசநோயினால் பீடிக்கப்பட்டு, குளிர் காலத்தை உஷ்ணமான இத்தாலிநாட்டில் கழிக்கத் தீர்மானித்தார்.  பிரயாணத்திற்கு முன் அவர் அநேக ஆண்டுகளாக முடிக்காமல் வைத்திருந்த, ‘என்னோடிரும் மா நேச கர்த்தரே’ என்னும் பாடலையும் எழுதி முடித்தார்.  பின்பு இத்தாலி நாட்டுக்கு பயணமானார்.  வியாதி கடுமையாயிருந்தபடியால், 1847ம் ஆண்டு நவம்பர் மாதம், 20ம் தேதி, இத்தாலி நாட்டிலுள்ள நைஸ் நகரத்தில் அவர் காலமானார்.

‘ஆத்மமே உன் ஆண்டவரின்’ என்னும் பாடல் முன் கூறியபடி ப்ரிக்ஸ்ஹம் நகரிலுள்ள மீனவர்களுக்காக எழுதப்பட்டது.  லைட் போதகர் இறந்த நூற்றாண்டு தினமான 1947 நவம்பர் மாதம் 20ம் தேதி, எலிசபெத் மகாராணியாருக்கும், எடின்பரோ பிரபுவுக்கும் நடந்த திருமண ஆராதனையில் மகாராணியின் விருப்பப்படி இப்பாடல் பாடப்பட்டது.  அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

v  ’என்னோடிரும் மா நேச கர்த்தரே (பாமாலை 36)
v  சிலுவை சுமந்தோனாக (பாமாலை 311)

v  ஆண்டவா! மேலோகில் உம்’ (பாமாலை 220)
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து
மீட்பு சுகம் ஜீவன் அருள்
பெற்றதாலே துதித்து
அல்லேலூயா என்றென்றைக்கும்
நித்திய நாதரைப் போற்று.

2.    நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி
அல்லேலூயா, அவர் உண்மை
மா மகிமையாம், துதி.

3.    தந்தைபோல் மா தயை உள்ளோர்
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலூயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.

4.    என்றும் நின்றவர் சமூகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே
அல்லேலூயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.

Post Comment

Sunday, July 13, 2014

பாமாலை 3 - உன்னதம் ஆழம் எங்கேயும் (Tune - St. Magnus)

 SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.
 
2.    பாவம் நிறைந்த பூமிக்கு
இரண்டாம் ஆதாமே
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே!
 
3.    முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர்தாம்
ஜெயிக்கத் துணையாயினார்
ஆ ஞான அன்பிதாம்
 
4.    மானிடர் சுபாவம் மாறவே
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்
 
5.    மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே
 
6.    கெத்செமெனேயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர்போன்றே சகித்து
மரிக்கக் கற்பித்தார்
 
7.    உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்
அவரின் வார்த்தை; செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

Post Comment

Sunday, July 6, 2014

பாமாலை 7 - கர்த்தாவைப் போற்றிப் பாடு

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    கர்த்தாவைப் போற்றிப் பாடு,
என் ஆவியே என் உள்ளமே
தெய்வன்பை நீ கொண்டாடு
அதை மறக்கலாகாதே
உன் பாவத்தை மன்னித்தார்,
உன் கேட்டை நீக்கினார்
உன் பிராணனை ரட்சித்தார்
குணம் அளிக்கிறார்
மகா இரக்கமான
சகாயர் ஆண்டவர்
ஒடுங்குண்டோருக்கான
துணை தயாபரர்.

2.    தாம் ஆளும் நியாயத்தாலே
முன்னாள் முதல் வெளிப்பட்டார்
உருக்க தயவாலே
அவர் நிறைந்திருக்கிறார்.
சினத்தை என்றென்றைக்கும்
வைக்கார்; மகா தயை
தாழ்ந்தோருக்குக் கிடைக்கும்,
அது விண்ணத்தனை
உயர்ந்ததாயிருக்கும்;
கிழக்கு மேற்குக்கு
இருக்கும் தூரத்துக்கும்
மீறுதல் நீங்கிற்று.

3.    தம் மைந்தருக்கன்புள்ள
பிதா இரங்கும்போல் அவர்
தமக்குப் பயமுள்ள
சன்மார்க்கருங்கிரங்குவார்.
நாம் இன்ன உருவென்று
நன்றாக அறிவார்,
நாம் தூளும் மண்ணுமென்று
நினைத்திருக்கிறார்’
நாம் புல்லைப்போல் வளர்ந்து
பூப்போலே பூக்கிறோம்
காற்றதின்மேல் கடந்து
போனால், உலர்ந்துபோம்.

4.    ஆனால் தாம் நிர்ணயித்த
உடன்படிக்கைக் கேற்றதாய்
நடந்து, தாம் கற்பித்த
படியே தெய்வ பயமாய்
செய்தோர்மேல் என்றென்றைக்கும்
கர்த்தாவின் கிருபை
நீங்காததாய் நிலைக்கும்
அவர்கள் நன்மையை
விசாரிக்கச் சமர்த்தர்
பரத்தில் ஆள்பவர்,
யாவற்றின்மேலும் கர்த்தர்
உயர்ந்த அரசர்.

5.    உற்சாக வேகமாக
பண்செய்யும் தேவதூதரே,
கர்த்தாவை நேர்த்தியாக
துதிப்பதுங்கள் வேலையே
விண்மண்ணில் எங்குமுள்ள
மா சேனையாகிய
எச் சிருஷ்டியும் அன்புள்ள
கர்த்தாவைச் சகல
வித வகையுமாக
துதிப்பதாகவே;
கர்த்தாவைப் பக்தியாக
துதி, என் ஆவியே.

Post Comment

Friday, July 4, 2014

பாமாலை 6 - என் நெஞ்சமே நீ மோட்சத்தை (Innsbruck)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    என் நெஞ்சமே நீ மோட்சத்தை
விரும்பித் தேடி கர்த்தரை
வணக்கத்துடனே
துதித்துப் பாடி என்றைக்கும்
புகழ்ந்து போற்று நித்தமும்
மகிழ்ச்சியாகவே.

2.    நட்சத்திரங்கள், சந்திரன்,
வெம் காந்தி வீசும் சூரியன்,
ஆகாச சேனைகள்,
மின் மேகம் காற்று மாரியே,
வானங்களின் வானங்களே,
ஒன்றாகப் பாடுங்கள்.

3.    விஸ்தாரமான பூமியே,
நீயும் எழுந்து வாழ்த்தல் செய்,
யெகோவா நல்லவர்
சராசரங்கள் அனைத்தும்
அவர் சொற்படி நடக்கும்
அவரே ஆண்டவர்.

4.    பரத்திலுள்ள சேனையே
புவியிலுள்ள மாந்தரே
வணங்க வாருங்கள்
யெகோவாதாம் தயாபரர்
எல்லாவற்றிற்கும் காரணர்
அவரைப் போற்றுங்கள்.

Post Comment

Friday, February 14, 2014

பாமாலை 9 - பூலோகத்தாரே யாவரும் (Old Hundredth)

பாமாலை 9 – பூலோகத்தாரே யாவரும்
(All people that on earth do dwell)

மிகவும் எளிமையான அதே நேரம் மிக அற்புதமான வடிவத்தில் அமையப்பெற்றிருக்கும் இப்பாடலானது ஆங்கிலத்தில் வெளிவந்த பாடல்களுள் மிகவும் பழமையான பாடலாகும். சங்கீதம் 100ன் பொழிப்புரையாய் அமையப்பெற்றுள்ள பாரம்பரியமிக்க இப்பாடல் இன்றளவும் நம் ஆலய ஆராதனைகளில் பாடப்பட்டு வருவது இதன் சிறப்பாகும்.  சீர்திருத்தத் திருச்சபை உருவான காலகட்டத்தில் பாடல் வடிவில் எழுதப்பட்ட முதல் சங்கீதம் இதுவே.

”பரிசுத்த வேதாகமத்தின் சங்கீதங்களின் அடிப்படையில் எழுதப்படும் பாடல்களே ஆலய ஆராதனைகளுக்கு உகந்தவை” என்ற கருத்தைக் கொண்டிருந்த ஜான் கால்வின் (John Calvin) எனும் பெயர்கொண்ட சீர்திருத்தவாதியின் வழி வந்த கவிஞர்கள் இத்தகைய பாடல்களை அக்காலத்தில் அதிகமாக எழுதி வந்தனர்.  15ம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து எல்லையில் வசித்துவந்த வில்லியம் கேத் (William Kethe) என்பவரால் இப்பாடல் எழுதப்பட்டது.  வில்லியம் முதலில் ஃப்ராங்க்ஃபர்ட் எனும் நகரத்திலும், பின்னர் ஜான் கேல்வின் வசித்த ஜெனீவாவிற்கும் சென்று பரிசுத்த வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும், சங்கீதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடல்களைப் புத்தகமாகத் தொகுப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

1561ம் ஆண்டு ஜெனீவாவில் முதன்முறையாக ‘All people that on earth” பாடல் வெளியிடப்பட்டது.  வில்லியம் கேத் இப்பாடலின் முதல் நான்கு பல்லவிகளை மட்டுமே எழுதினார். ஐந்தாவதாகப் பாடப்படும் ‘விண் மண்ணில் ஆட்சி செய்கிற’ என்கிற Doxology என்றழைக்கப்படும் பல்லவி மெத்தடிஸ்ட் சபை உருவான துவக்கத்தில் ’கடவுள் துதி’யாக இணைக்கப்பட்டு பாடப்பட்டது.  பெருவெள்ளம், புயல் போன்ற பேரழிவுகளின்பின்னரும் இந்த ஐந்தாம் பல்லவி, தம்மைப் பாதுகாத்தக் கடவுளுக்கு நன்றி சொல்லும் பாடலாகப் பாடப்பட்டது.  இச்சரணத்தை தாமஸ் கென் (Thomas Ken) (1637-1711) என்பவர் எழுதினார்.

“All people that on earth” பாடலின் இரண்டாவது பல்லவியின் மூன்றாவது வரியில் வரும் “We are his folk” என்பதைக் குறித்த ஒரு சுவாரசியத் தகவலை Ian Bradley எழுதியுள்ள ‘Book of Hymns” எனும் புத்தகத்தில் காண நேரிட்டது.  1561ல் இப்பாடல் வெளியிடப்பட்ட பின்னர் அநேக வருடங்களுக்கு இந்த மூன்றாவது வரி, “We are his flock” என்றே பாடப்பட்டு வந்தது. இதன் காரணம் முதன்முதலில் இந்தப்பாடல் அச்சிடப்பட்டபோது “folk” எனும் வார்த்தை பழைய ஆங்கில Spelling வழக்கத்தின்படி “folck” என்று அச்சிடப்பட்டது.

‘Flock” எனும் வார்த்தையே “Folck” என்று Spelling Mistake’உடன் தவறாக அச்சிடப்பட்டது என்ற ஒரு எண்ணத்தாலும், சங்கீதம் 100:3ம் வசனத்தில் வரும் ‘அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்’ என்ற வார்த்தைகளின் அடிப்படையில் ‘We are his flock” என்று எழுதப்பட்டுள்ளது என்ற எண்ணிய காரணத்தாலும், இப்பல்லவியின் மூன்றாவது வரி Flock என்ற வார்த்தையுடனேயே அச்சிடப்பட்டுத் திருச்சபையினர் பாடிவந்தனர்.  ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளாக அவ்வார்த்தையை Flock என்றே திருச்சபையினர் பாடிவந்தனர். அநேக ஆண்டுகளுக்குப் பின்னர் 1904ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Ancient and Modern’ பாடல் புத்தகத்தில், இப்படி ‘flock’ என்று தவறாகப் பாடப்பட்டு வந்த வார்த்தை ‘Folk” என்ற திருத்தத்துடன் வெளியிடப்பட்டது.

லூயி பர்காய்ஸ் (Louis Bourgeois) (1510-1560) என்பவர் இப்பாடல் பாடப்படும் “Old Hundredth” எனும் ராகத்தை அமைத்துள்ளார்.

பதிவு தகவல்கள் : The Daily Telegraph Book of Hymns by Ian Bradley

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களி கூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்திப் பாட வாருங்கள்.

2.    பராபரன் மெய்த் தெய்வமே
நாம் அல்ல அவர் சிஷ்டித்தார்
நாம் ஜனம், அவர் ராஜனே
நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

3.    கெம்பீரித்தவர் வாசலை
கடந்து உள்ளே செல்லுங்கள்
சிறந்த அவர் நாமத்தை
கொண்டாடி, துதி செய்யுங்கள்

4.    கர்த்தர் தயாளர், இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே

5.    விண் மண்ணில் ஆட்சி செய்கிற
திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும்
சதா ஸ்துதி உண்டாகவும்.

All people that on Earth do dwell

Post Comment

Sunday, February 2, 2014

பாமாலை 5 - எல்லாம் சிஷ்டித்த (Frankfort)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

***************

1. எல்லாம் சிஷ்டித்த நமது
தயாபர பிதாவுக்கு
அநந்த காலமாக
அல்லேலூயா! மகத்துவம்,
பலம், புகழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக
பார்ப்பார், காப்பார்
வல்லமையும் கிருபையும்
அன்பும் எங்கும்
அவர் செய்கையால் விளங்கும்.

2. மண் நீசருக்கு மீட்பரும்
கர்த்தாவுமாம் சுதனுக்கும்
ரட்சிப்பின் அன்புக்காக
அல்லேலூயா! புகழ்ச்சியும்
அநந்த ராஜரீகமும்
உண்டாய் இருப்பதாக
பாவம், சாபம்
எந்தத் தீங்கும் அதால் நீங்கும்,
என்றென்றைக்கும்
பாக்கியம் எல்லாம் கிடைக்கும்.

3. மனந்திருப்பி எங்களை
பர்த்தாவாம் இயேசுவண்டையே
அழைத்து, நேர்த்தியாக
சிங்காரிக்கும் தேவாவிக்கும்,
அல்லேலூயா! புகழ்ச்சியும்
வணக்கமும் உண்டாக
வான, ஞான
வாழ்வினாலும் செல்வத்தாலும்
தேற்றிவாறார்
அதின் முன் ருசியைத் தாறார்.

4. எல்லா சிஷ்டிகளாலேயும்
பிதா குமாரன் ஆவிக்கும்
அநந்த காலமாக
அல்லேலூயா! மகத்துவம்
பலம், புகழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக
ஆமேன், ஆமேன்!
நீர் அநந்தம், ஆதியந்தம், 
பரிசுத்தம்
பரிசுத்தம், பரிசுத்தம்.

Post Comment

Monday, January 27, 2014

பாமாலை 3 - உன்னதம் ஆழம் (Tune : Richmond)

பாமாலை 3 - உன்னதம் ஆழம் 
Praise to the Holiest in the height
Tune : Richmond

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

2. பாவம் நிறைந்த பூமிக்கு
இரண்டாம் ஆதாமே
போரில் சகாயராய் வந்தார்
ஆ, நேச ஞானமே!

3. முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர்தாம்
ஜெயிக்கத் துணையாயினார்
ஆ ஞான அன்பிதாம்

4. மானிடர் சுபாவம் மாறவே
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்

5. மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே

6. கெத்செமெனேயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர்போன்றே சகித்து
மரிக்கக் கற்பித்தார்

7. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்
அவரின் வார்த்தை; செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

Post Comment

Friday, January 24, 2014

பாமாலை 2 - உம்மைத் துதிக்கிறோம்

பாமாலை 2 – உம்மைத் துதிக்கிறோம்
Laudamus te
Lobe den Herren
14, 14, 4, 7, 8

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்,
வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி
ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.

2.    கிறிஸ்துவே, இரங்கும் சுதனே,
கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிடும்
தெய்வாட்டுக்குட்டி
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்.

3.    நித்திய பிதாவின் மகிமையில்
இயேசுவே நீரே
பரிசுத்தாவியோடேகமாய்
ஆளுகிறீரே
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே, ஆமேன்.

Post Comment

பாமாலை 4 - உன்னதரே நீர் மகிமை (Frankfort)

பாமாலை 4 - உன்னதரே நீர் மகிமை 
Gloria in Excelsis Deo
Tune : Frankfort

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1. உன்னதரே நீர் மகிமை,
இந்நிலம் சமாதானத்தை
அடைய அன்பு ஓங்க
பராபரனார் கர்த்தாவே
பரம ராஜா பர்த்தாவே
வல்லமை தந்தாய், வாழ்க!
தாழ்ந்து வீழ்ந்து,
போற்றுவோமே புகழ்வோமே
தொழுவோமே
மாட்சி மேன்மைக்கென்றும் ஸ்தோத்ரம்.

2. பிதாவின் ஒரே மைந்தனே,
சுதாவே கர்த்தா ராஜரே,
தெய்வாட்டுக்குட்டி நீரே
பார் மாந்தர் பாவம் போக்கிடும்
மா தந்தை பக்கல் ஆண்டிடும்
மகத்துவ கிறிஸ்து நீரே;
கேட்பீர் ஏற்பீர்
ஏழை நீசர் எங்கள் ஜேபம்
தாழ்வாம் வேண்டல்
இரங்குவீர் தயவோடே.

3. நீர் தூயர் தூயர் தூயரே,
நீர் கர்த்தர் கர்த்தர் கர்த்தரே
என்றென்றும் ஆள்வீர் நீரே
பிதாவின் ஆசனத்திலே
மேதையாய் வீற்றுப் பாங்கினில்
கர்த்தாவாம் ஆவியோடே
இன்றும் என்றும்
ஏக மாண்பு ஏக மாட்சி
ஏக மேன்மை
தாங்கி ஆள்வீர் தேவரீரே.

Post Comment

Sunday, October 20, 2013

பாமாலை 1 - ஆத்மமே உன் ஆண்டவரின் (Praise my Soul)

பாமாலை 1 – ஆத்மமே உன் ஆண்டவரின்
Praise my soul, the King of heaven

’என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்’ சங்கீதம் 30 : 12

கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதும் கடவுளைத் துதிக்க ஏவப்படுகிறோம். பொதுவாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மைகளுக்காக அவரைத் துதிக்கிறோம்.  ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லாதிருக்கும்போது அவரைத் துதிக்கிறோமா? நம்மில் அநேகருக்கு வாழ்க்கையில் கஷ்டங்களும், துன்பங்களும் அடிக்கடி நேர்ந்ததில்லை.  ஆயினும் இதை முன்னிட்டு நாம் கடவுளைத் துதிக்கிறோமா? ஆகவே எந்நிலையிலும் நாம் கடவுளைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறவாதிருப்போமாக.  நமது ஆலய ஆராதனைகளில் முதல் பகுதி எப்போதும் தெய்வ ஸ்துதியாகவே இருக்கும்.  இப்பகுதியில் பாடப்படும் பாடல்கள், வாசிக்கப்படும் திருமறைப்பக்குதிகள், ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் எல்லாம் தெய்வ ஸ்துதியே.  நமது பாட்டுப்புத்தகங்களிலும் முதல் பகுதியில் தெய்வஸ்துதி பாடல்களே வைக்கப்பட்டிருக்கின்றன.  பாமாலையின் முதல் பாடலாகிய இப்பாடல், 103ம் சங்கீதத்தைத் தழுவி எழுதப்பட்ட ஒரு துதிப்பாடலாகும்.

1834ம் ஆண்டு ஹென்ரி லைட் போதகர் (Henry Francis Lyte), இங்கிலாந்தில் ப்ரிக்ஸ்ஹம் நகரில் திருப்பணியாற்றிவந்தார்.  ப்ரிக்ஸ்ஹம் ஒரு கடற்கரைப் பட்டிணம்.  இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடிப்பவர்கள்.  இம்மக்கள் அலைமிகுந்த கடலில் அதிக தைரியத்துடனும், துணிவுடனும் தங்கள் படகுகளை ஓட்டிச்சென்று வருவர்.  போதகர் அடிக்கடி கடற்கரையில் நின்று, மீன்படகுகள் கடுமையான அலைகள் மத்தியிலும் பத்திரமாகக் கரை சேருவதைக் கவனிப்பது வழக்கம்.  எந்த ஆபத்திலும் கடவுள் ஒரு தந்தைபோல் அவர்களைப் பராமரித்து வருகிறார் என்னும் உண்மையைப் போதகர் உணர்ந்து, அவர்கள் கடவுளைத் துதித்துப் பாடுவதற்கேற்ற ஒரு பாடல் எழுத எண்ணங்கொண்டார்.  இதற்கு ஆதாரமாக அவர் 103ம் சங்கீதத்தைத் தெரிந்தெடுத்து, அதை ஒரு செய்யுளாக எழுதி இப்பாடலை உருவாக்கினார்.  எந்நிலையிலும் கடவுளின் கரம் நம்மைத் தாங்கிக்காப்பதால் நாம் அவரைத் துதித்தல் ஏற்றது என்பதை இப்பாடலின்மூலம் உணர்த்துகிறார்.  மேலும், சர்வ சிருஷ்டிகளும் கடவுளைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளன என்பதை இப்பாடலின் கடைசிக்கவியில் எடுத்துரைக்கிறார்.

ஹென்ரி பிரான்ஸிஸ் லைட் போதகர் 1793ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி ஸ்காட்லாண்ட் நாட்டில் எட்னம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளமையில் மிகவும் எளிமையான நிலைமைகளை அவர் அனுபவிக்கவேண்டியிருந்தது.  ஆரம்பக்கல்வியைப் பிறந்த ஊரிலேயே முடித்து, குருத்துவ ஊழியப் பயிற்சியை டப்ளின் நகரில் பெற்றார்.  அவரது கல்லூரி வாழ்க்கையில் ஆங்கிலச் செய்யுள்கள் எழுதுவதில் மூன்றுமுறை முதல் பரிசு பெற்றார்.  பயிற்சியை முடித்தவுடன் 1815ல் அயர்லாந்தில் வெக்ஸ்ஃபோர்ட் சபையில் போதகராக அபிஷேகம் பெற்றார்.  ஐந்து ஆண்டுகளுக்குப்பின் லிமிங்டன் சபையிலும், கடைசியாக 1823 முதல் ப்ரிக்ஸ்ஹம் என்னும் மீன்பிடிக்கும் கடற்கரைப் பட்டிணத்திலும் போதகராகப் பணியாற்றினார்.

அவர் பணியாற்ற ஆரம்பித்தபோது அவரது பணி, கடமைப் பணியாக மட்டுமே இருந்தது.  மேலும் அவரது கவித்திறன், பொதுவான விஷயங்களைக்குறித்த கவிகள் எழுதுவதிலேயே செலவிடப்பட்டது.  ஆனால் அவர் இருபத்தைந்து வயதாயிருக்கையில், அவரது நண்பரான ஒரு போதகர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.  அவரது மரணப்படுக்கையினருகில் நிற்கும்போது அவர் கூறிய இறுதிவார்த்தைகளையும், தம் பாவங்களுக்கு நிவாரணமான ஒருவர் உண்டு என்னும் அவரது நம்பிக்கையையும் கவனித்த லைட் போதகரின் வாழ்க்கையில் அன்று முதல் ஒரு புதுதிருப்பம் உண்டானது.  இதன்பின்பு அவர் எழுதிய கவிகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை அளிப்பதற்காக எழுதப்பட்டது.

ப்ரிக்ஸ்ஹம் நகரில் திருப்பணியாற்றும்போதுதான் அவர் ஏராளமான பாடல்கள் எழுதினார்.  1847ம் ஆண்டு அவர் 54 வயதாயிருக்கையில் காசநோயினால் பீடிக்கப்பட்டு, குளிர் காலத்தை உஷ்ணமான இத்தாலிநாட்டில் கழிக்கத் தீர்மானித்தார்.  பிரயாணத்திற்கு முன் அவர் அநேக ஆண்டுகளாக முடிக்காமல் வைத்திருந்த, ‘என்னோடிரும் மா நேச கர்த்தரே’ என்னும் பாடலையும் எழுதி முடித்தார்.  பின்பு இத்தாலி நாட்டுக்கு பயணமானார்.  வியாதி கடுமையாயிருந்தபடியால், 1847ம் ஆண்டு நவம்பர் மாதம், 20ம் தேதி, இத்தாலி நாட்டிலுள்ள நைஸ் நகரத்தில் அவர் காலமானார்.

‘ஆத்மமே உன் ஆண்டவரின்’ என்னும் பாடல் முன் கூறியபடி ப்ரிக்ஸ்ஹம் நகரிலுள்ள மீனவர்களுக்காக எழுதப்பட்டது.  லைட் போதகர் இறந்த நூற்றாண்டு தினமான 1947 நவம்பர் மாதம் 20ம் தேதி, எலிசபெத் மகாராணியாருக்கும், எடின்பரோ பிரபுவுக்கும் நடந்த திருமண ஆராதனையில் மகாராணியின் விருப்பப்படி இப்பாடல் பாடப்பட்டது.  அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

v  ’என்னோடிரும் மா நேச கர்த்தரே (பாமாலை 36)
v  சிலுவை சுமந்தோனாக (பாமாலை 311)

v  ஆண்டவா! மேலோகில் உம்’ (பாமாலை 220)
*************************
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து
மீட்பு சுகம் ஜீவன் அருள்
பெற்றதாலே துதித்து
அல்லேலூயா என்றென்றைக்கும்
நித்திய நாதரைப் போற்று.

2.    நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி
அல்லேலூயா, அவர் உண்மை
மா மகிமையாம், துதி.

3.    தந்தைபோல் மா தயை உள்ளோர்
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலூயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.

4.    என்றும் நின்றவர் சமூகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே
அல்லேலூயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.
Praise my Soul the King of Heaven

Post Comment