Showing posts with label பரிசுத்தமாகுதல். Show all posts
Showing posts with label பரிசுத்தமாகுதல். Show all posts

Tuesday, February 21, 2023

பாமாலை 304 - சுத்த இருதயத்தை நீர் (Hamburg)

பாமாலை 304 - சுத்த இருதயத்தை நீர்
Cor Mundum Crea In Me
Tune : Hamburg

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







1.  சுத்த இருதயத்தை நீர்,
கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்,
திட ஆவியை, தேவரீர்,
என் உள்ளத்தில் புதுப்பியும்.

2.  ஆ, உம்முடைய முகத்தை
விட்டென்னை நீர் தள்ளாமலும்,
என்னிடத்தில் தெய்வாவியை
பேர்த் தெடுக்காமலுமிரும்.

3.  மீண்டும் உமதிரட்சிப்பின்
சந்தோஷத்தைத் தந்தருளும்,
இனிப் புதிய ஆவியின்
உற்சாகம் என்னைத் தாங்கவும்.

Post Comment

Tuesday, February 7, 2023

பாமாலை 298 - ஆராய்ந்து பாரும் (Dundee)

பாமாலை 298 - ஆராய்ந்து பாரும் கர்த்தரே
Search me O God my actions try
Tune : Dundee


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.         ஆராய்ந்து பாரும், கர்த்தரே;
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும்.
 
2.         ஆராயும் எந்தன் உள்ளத்தை,
நீர் சோதித்தறிவீர்;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்
 
3.         ஆராயும் சுடரொளியால்
துராசை தோன்றவும்;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும்.
 
4.         ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும்
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.
 
5.         ஆராயும் மறைவிடத்தை
உம் தூயக் கண்ணினால்;
அரோசிப்பேன் என் பாவத்தை
உம் பேரருளினால்.
 
6.         இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன்;
உம் சரணார விந்தத்தில்
பணிந்து போற்றுவேன்.

Post Comment

Wednesday, August 3, 2022

பாமாலை 305 - தீயோர் சொல்வதை (Deerhurst)

பாமாலை 305 - தீயோர் சொல்வதை 
Tune : Deerhurst

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
 
2.  நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.
 
3.  தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.

Post Comment

Sunday, January 16, 2022

பாமாலை 310 - வல்ல இயேசு கிறிஸ்து (St. Andrew)

பாமாலை 310 - வல்ல இயேசு கிறிஸ்து 
Long in darkness we have waited
Tune : St. Andrew
8. 7. 8. 7.


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1. வல்ல இயேசு கிறிஸ்து நாதா,
நல்ல நேச மீட்பர் நீர்;
பற்று, பாசம் கட்டு முற்றும்
அற்றுப் போகப் பண்ணுவீர்.

2. அருள் ஜோதி தோன்றிடாமல்,
இருள் மூடிக் கிடந்தோம்;
திக்கில்லாமல் பாவப் பற்றில்
சிக்கிக் கொண்டே இருந்தோம்.

3. பக்தி ஒன்றுமில்லை, பாரும்
சக்தியற்றுப் போயினோம்;
ஜீவ பாதை சென்றிடாமல்
பாவப் பாதை நடந்தோம்.

4. இயேசு நாதரே, இப்போது
நேசமாக நிற்கிறீர்;
 “என்னை நம்பு, பாவம் நீக்கி
உன்னைக் காப்பேன்” என்கிறீர்.

5. நம்பி வந்து, பாவ நாசா,
உந்தன் பாதம் அண்டினோம்;
தூய ரத்தம் பாயக் கண்டு,
தீய செய்கை வெறுத்தோம்.

6. பாவச் சேற்றிலே விழாமல்
தேவரீரே காத்திடும்;
வல்ல ஆவியாலே என்றும்
வெல்லச் செய்து ரட்சியும்.

Post Comment

Saturday, January 15, 2022

பாமாலை 309 - மாசில்லாமல் தூயதான (Wachet auf)

பாமாலை 309 - மாசில்லாமல் தூயதான 
Heiligster Jesu Heil’gungs quelle
Tune : Wachet auf

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1. மாசில்லாமல் தூயதான
பளிங்கிலேயும் தெளிவான
சுத்தாங்க ஊற்றே, இயேசுவே;
கேரூபீன்கள் தூய சீரின்
பிரகாசம் யாவுந் தேவரீரின்
முன்பாக மங்கிப்போகுதே;
என் பாவத்தின் இருள்
அனைத்தும் உமக்குள்
தொலையட்டும்;
ஆ, இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாய் சுத்தாங்கமாகவும்.

2. மனசார சாவுமட்டும்
“பிதாவின் சித்தமே ஆகட்டும்”
என்றீர், அமர்ந்த இயேசுவே;
என் மனமும், “தெய்வ சித்தம்
என் நன்மை,” என்றதற்கு நித்தம்
கீழ்ப்பட்டடங்க, உம்மையே
பின்பற்ற, தேவரீர்
சகாயம்பண்ணுவீர்;
எந்நோவிலும்,
என் இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாய் அமர்ந்திருக்கவும்.

3. ராப்பகல் உறக்கமற்று
நல்மேய்ப்பராய்ப் பிரயாசப்பட்டு
நன்றாய் விழித்தீர், இயேசுவே;
நித்தம் நித்தமும் போதித்தீர்,
ஜெபத்தில் ராவிலும் தரித்தீர்,
மங்கா வெளிச்சக் கண்ணனே
விழித்துக் கெஞ்சவே,
நான் உம்மிடத்திலே
படிக்கட்டும்;
ஆ, இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாய் விழித்திருக்கவும்.

(2-ஆம் பாகம்)

1. நீர் நிறைந்த நேசமுள்ளோர்,
எல்லாரின் மேலும் தயவுள்ளோர்,
மகா அன்புள்ள இயேசுவே;
உம்மால் தீயோர் பேரிலேயும்
பகல் உதிக்கும், மாரிபெய்யும்,
பெரிய உபகாரியே,
ஆ, இந்த உமது
குணம் என் மனது
அடையட்டும்;
என் இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாய் அன்பாய் இருக்கவும்.

2. குற்றமின்றி குரோதமற்று,
எல்லா இகழ்ச்சியையும் பட்டு
மன்னித்தீர், சாந்த இயேசுவே;
தெய்வ வீட்டுக்காய் அல்லாமல்
நீர் வேறெரிச்சலைக் காட்டாமல்
இருந்தீர், ஆட்டுக்குட்டியே,
நான் அந்தப் பக்தியாய்
மிகுந்த சாதுவாய்
இருக்கட்டும்;
ஆ, இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாக சாந்தமாகவும்.

3. சுய மேன்மையைத் தேடாமல்,
ஓர் மேட்டிமையையும் காட்டாமல்,
மாதாழ்மையானீர் இயேசுவே;
வேலைக்காரன்போல் திரிந்தீர்,
எல்லாரிலும் நீரே பணிந்தீர்,
மகா பெரிய கர்த்தரே,
ஆ, என்னை உம்முட
அடிகளில் வர
படிப்பியும்;
என் இயேசுவே, நான் உமக்கே
ஒப்பாகத் தாழ்மையாகவும்.

4. தேவரீருட பிரிய
தெய்வீக சாயலை அணிய
வாஞ்சிக்கிறேன், என் ஜீவனே;
அதுக்குமதாவியாலும்
பலத்த சத்துவத்தினாலும்
சகாயம் செய்யும், இயேசுவே,
நான் உமக்கேற்கிற
கனிகளைத் தர
எக்காலமும்;
நான் உம்மிலே நிலைக்கவே
சகாயம் கட்டளையிடும்.

Post Comment

Wednesday, January 12, 2022

பாமாலை 304 - சுத்த இருதயத்தை நீர்

பாமாலை 304 - சுத்த இருதயத்தை நீர்
Cor Mundum Crea In Me
Bavarian 102  L.M.


 SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  சுத்த இருதயத்தை நீர்,
கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்,
திட ஆவியை, தேவரீர்,
என் உள்ளத்தில் புதுப்பியும்.

2.  ஆ, உம்முடைய முகத்தை
விட்டென்னை நீர் தள்ளாமலும்,
என்னிடத்தில் தெய்வாவியை
பேர்த் தெடுக்காமலுமிரும்.

3.  மீண்டும் உமதிரட்சிப்பின்
சந்தோஷத்தைத் தந்தருளும்,
இனிப் புதிய ஆவியின்
உற்சாகம் என்னைத் தாங்கவும்.

Post Comment

Monday, January 10, 2022

பாமாலை 303 - கர்த்தாவை நம்புவோரை (Ewing)

பாமாலை 303 - கர்த்தாவை நம்புவோரை 
Tune : Ewing (Bavarian 77)
Keinen hat Gott verlassen

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1. கர்த்தாவை நம்புவோரை
ஓர்க்காலும் கைவிடார்,
பொல்லாரின் சீறுமாற்றை
வீணாக்கிப் போடுவார்;
சன்மார்க்கரைப் பலத்த
கையால் தயாபரர்
ரட்சித்துத் தாழ்ச்சியற்ற
அன்பாய் விசாரிப்பார்.

2. கர்த்தாவின் சித்தத்துக்கு
கீழ்ப்பட்டடங்குவேன்;
அப்போ நான் ஜீவனுக்கு
நேரே நடக்கிறேன்;
லௌகீக வாழ்வின் பாதை
வேண்டாம், நான் இயேசுவை
பின்பற்றி, இங்கே வாதை
சகித்தால், மா நன்மை.

3. என் மேலே பாரமாக
வரும் இக்கட்டிலே
பராபரன் அன்பாக
என்னோடிருப்பாரே;
பொறுக்கிற வரத்தை
அவரிடம் கேட்பேன்,
அவ்விதமாய் இக்கட்டை
சகித்து வெல்லுவேன்.

4. கசப்பும் கர்த்தராலே
வரும், நான் பின்வாங்கேன்;
ஜெபத்தில் ஆசையோடே
விண்ணப்பம் பண்ணுவேன்,
அப்போது தயவாக
காப்பாரே, கைவிடார்;
இக்கட்டு பெரிதாக
போம்போது தேற்றுவார்.

5. அநேகர் ஆசைகொள்ளும்
பொருளை வாஞ்சியேன்;
கர்த்தாவின் வார்த்தை சொல்லும்
மெய்ப் பொருள் நாடுவேன்;
என் பொக்கிஷம், என் செல்வம்,
என் ஆஸ்தி கிறிஸ்துவே;
என் பாக்கியம், பேரின்பம்,
எல்லாம் என் மீட்பரே.

6. என் இயேசுவை நான் பற்றி
தொடர்வேன் ஆவலாய்;
என் சாபத்தை அகற்றி
ரட்சித்தார் நேசமாய்;
நான் தப்ப எனக்காக
தம் ரத்தம் சிந்தினார்;
எனக்கு ஜீவனாக
ஜெயித்தழும்பினார்.

7. இஸ்தோத்திரம் செலுத்த
மிகுந்த நியாயமாம்;
ஏன், ஜீவனைக் கொடுத்த
என் கர்த்தருக்கெல்லாம்
ஆதீனமாவதாக;
அவருக்கென்றைக்கும்
பணிந்த பக்தியாக
நான் கீழ்ப்படியவும்.


Post Comment

Sunday, January 9, 2022

பாமாலை 301 - என் நெஞ்சை ஸ்வாமி உமக்கே (St Flavian)

பாமாலை 301 - என் நெஞ்சை ஸ்வாமி உமக்கே 
Mein Gott das Herz ich bringe
Tune : St Flavian ((Bavarian 110)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. என் நெஞ்சை, ஸ்வாமி, உமக்கே
ஈவாய்ப் படைக்கிறேன்;
நீர் இந்தக் காணிக்கையையே
கேட்டீர் என்றறிவேன்.

2. "என் மகனே, உன் நெஞ்சைத்தா,
நீ இக்கடனைத் தீர்;
வேறெங்கும் நீ சுகப்பட
மாட்டாயே" என்கிறீர்.

3. அப்பா, நீர் அதைத் தயவாய்
அங்கீகரிக்கவும்,
நான் அதை உள்ளவண்ணமாய்
தந்தேன், அன்பாயிரும்.

4. மெய்தானே, அது தூய்மையும்
நற்சீரு மற்றது;
அழுக்குத் தீட்டும் மாய்கையும்
அதில் நிரம்பிற்று.

5. நான் உண்மையாய்க் குணப்பட
அதை நொறுக்குமேன்;
இத் தயவை நீர் காண்பிக்க
பணிந்து கேட்கிறேன்.

6. ஆ, என் கல்நெஞ்சை நீர் நன்றாய்
உருக்கி, முழுதும்
புலம்பலும் கண்ணீருமாய்க்
கரையப் பண்ணவும்.

7. நீர் என்னைக் கிறிஸ்தின் சாயலாய்
எல்லாரிடத்திலும்
மென்மேல் புறம்பும் உள்ளுமாய்
நற்சாந்தமாக்கவும்.

8. நீர் என்னைக் கிறிஸ்துமார்க்கத்தின்
மேற்பூச்சும் மாயமும்
இல்லாதோனாக்கி, அவரில்
நல்லுண்மையாக்கவும்.

9. என் முழுநெஞ்சையும் அன்பாய்
நீர், ஸ்வாமி, என்றைக்கும்
அகமும் ஆலயமுமாய்
படைத்துக்கொண்டிரும்.

10. நீர் அதை ஆளும், கர்த்தரே
அதால் நான் பாக்கியன்;
நான் உலகத்தானல்லவே,
நான் உம்முடையவன்.

11. போ, லோகமே; போ, பாவமே;
என் நெஞ்சை அடியேன்
எக்காலத்துக்கும், இயேசுவே,
கொடுத்திருக்கிறேன்.

ஆமென்


Post Comment

பாமாலை 300 - என் ஆவி ஆன்மா (Wigtown)

பாமாலை 300 - என் ஆவி ஆன்மா 
(My Spirit Soul and Body)
Tune : Wigtown

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1. என் ஆவி ஆன்மா தேகமும்
இதோ படைக்கிறேன்;
என்றும் உம் சொந்தமாகவும்
பிரதிஷ்டை செய்கிறேன்.

2. ஆ, இயேசு, வல்ல ரட்சகா
உம் நாமம் நம்புவேன்;
ரட்சிப்பீர், மா தயாபரா,
உம் வாக்கை வேண்டுவேன்.

3. எப்பாவம் நீங்க, உறுப்பு
தந்தேன் சமூலமாய்;
போராட்டம் வெற்றி சிறப்பு
படைக்கலங்களாய்.

4. நான் உம்மில் ஜீவித்தல் மகா
மேலான பாக்கியம்;
தெய்வ சுதா, என் ரட்சகா,
என் ஜீவனாயிரும்.

5. என் நாதா, திரு ரத்தத்தால்
சுத்தாங்கம் சொந்தமே;
ஆனேன்! உம் தூய ஆவியால்
பலி நான் உமக்கே.

ஆமென்

Post Comment

Friday, January 7, 2022

பாமாலை 296 - அற்ப வாழ்வை (Quem Pastores)

பாமாலை 296 - அற்ப வாழ்வை 
Seek ye first not earthly pleasure
Tune : Quem Pastores

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. அற்ப வாழ்வை வாஞ்சியாமல்
இன்பம் செல்வம் பின்பற்றாமல்
தெய்வ நேசத்தை ஓயாமல்
நாடுவாய், நாடுவாய்.

2. விரும்பாதே பேர்ப் பிரஸ்தாபம்,
லோக மகிமை பிரதாபம்;
ஆத்ம வாழ்வின் நித்திய லாபம்
நாடுவாய், நாடுவாய்.

3. நாடுவாய் தெய்வாசீர்வாதம்,
கர்த்தர் ஈயும் சற்பிரசாதம்;
பாவம் தீரத் திருப்பாதம்
நாடுவாய், நாடுவாய்.

4. மீட்பர்போல் சுத்தாங்கமாக
தாழ்மையோடு சாந்தமாகத்
தொண்டு செய்ய ஆவலாக,
நாடுவாய், நாடுவாய்.

5. பிறர் இயேசுவண்டை சேர,
அவராலே கடைத்தேற
தெய்வ சித்தம் நிறைவேற
நாடுவாய், நாடுவாய்.

6. அருள் நாதர் அரசாளும்
காலம் வந்து, சர்வத்ராளும்
மீட்பைக் காணவும், எந்நாளும்
நாடுவாய், நாடுவாய்.

Post Comment

Saturday, October 31, 2020

பாமாலை 305 - தீயோர் சொல்வதை (Tune - Nettleton)

 Unison

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
 
2.    நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.
 
3.    தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.


Post Comment

Thursday, March 9, 2017

பாமாலை 307 - நல் மீட்பரே உம்மேலே

பாமாலை 307 – நல் மீட்பரே, உம்மேலே
(I lay my sins on Jesus)

’இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’. யோவான் 1:29

இப்பாடலை எழுதிய ஹோரேஷியஸ் போனர் (Horatius Bonar) 1808ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 19ம் தேதி ஸ்காட்லண்ட் நாட்டில் எடின்பரோ நகரில் (Edinburgh, Scotland) பிறந்தார்.  அவரது முன்னோர்களில் பலர் போதகர்களாகப் பணியாற்றியவர்கள். அவரது தாயார் சிறந்த தெய்வபக்தியும் தூய்மையான வாழ்க்கையும் உள்ளவராதலால், அவர்களது மூன்று பிள்ளைகளான ஜான், ஹோரேஷியஸ், ஆன்ட்ரூ என்பவர்கள் கிறிஸ்தவ சன்மார்க்க நெறியில் வளர்க்கப்பட்டு, பிற்காலத்தில் போதகர்களாகப் பணியாற்றினர்.  ஹோரேஷியஸ், எடின்பரோ நகரிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் தாமஸ் சால்மர்ஸ் என்னும் புகழ்பெற்ற தலைமை ஆசிரியரின் கீழ் கல்வி பயின்றார். இவ்வாசிரியரின் மிகச்சிறந்த போதனை, ஹோரேஷியஸின் ஆத்தும வளர்ச்சிக்கு மிகவும் தூண்டுதலாயிருந்தது.  பின்னர், அவர் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, கல்லூரிப்படிப்பை முடித்து, லீத் நகரத்தில் தூய யோவான் ஆலயத்தில் தம் திருப்பணியை ஆரம்பித்தார்.  ஓய்வுநாட்பள்ளி ஊழியத்தில் விசேஷக் கவனம் செலுத்தி, சிறுவர்களுக்கேற்ற பாடல்கள் எழுதி, அவற்றை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 1837ல் தமது முப்பதாவது வயதில் குரு அபிஷேகம் பெற்று, கெல்ஸோ (Kelso) என்னுமிடத்தில் சபைக் குருவாகப் பணியாற்றினார். சுமார் முப்பது ஆண்டுகள் கெல்ஸோவில் பணியாற்றியபின், எடின்பரோ நகருக்கு மாற்றப்பட்டு, ஸ்காட்லாண்டிலுள்ள சுய ஆளுகைச் சபைகளின் (Free Church of Scotland) ஐக்கியத்திற்காக வெகுவாக உழைத்தார்.  இச்சேவைக்காக 1883ல் அவர் அச்சபையின் பிரதம குரு (Moderator) என்னும் உயர் பதவியைப் பெற்றார். அவரது வாழ்க்கையில் அவருக்குப் பல துன்பங்கள் நேர்ந்தன. அவரது பிள்ளைகளில் ஐந்துபேர் இளவயதிலேயே இறந்தனர்.  அவர் மரிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னமே அவரது மனைவியும் மறுமைக்குள் சென்றார்.

”நல் மீட்பரே, உம்மேலே” என்னும் இப்பாடல், நியாயத்தீர்ப்புநாளின்போது மட்டுமல்ல, மாறாக ஒவ்வொரு முறை நாம் பாவச்சேற்றில் சிக்கிக்கொள்ளும்போதும், ஆண்டவரிடம் நம் பாவங்களை அறிக்கையிட்டுச் சேர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.  அறுநூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதிய போனர், முதன்முதலில் எழுதியது ”நல் மீட்பரே, உம்மேலே” என்னும் இப்பாடல்தான் என்றும் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.  இந்தப் பாமாலைக்கு, ‘சபையின் அஸ்திபாரம்’ பாடலுக்கு வழங்கப்பட்ட Aurelia என்னும் ராகமும் பொருத்தமானது.  அநேக திருச்சபைகளில் Aurelia ராகத்திலும் இது பாடப்படுகிறது.

இப்பாடலைத் தவிர அவர், ஏராளமான பாடல்களும், ஆங்கிலச் செய்யுள்களும் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய இதர பாடல்களில் புகழ்பெற்றவை:

‘வா, பாவி, இளைப்பாற வா’ - பாமாலை 284
‘மயங்கும் தாசனை தேவா, நீர் நடத்தும்’ – பாமாலை 325
’நிரப்பும் என்னைத் துதியால்’ – பாமாலை 374

அவர் 1889ம் ஆண்டு, ஜூலை மாதம் 31ம் தேதி தமது 81வது வயதில் எடின்பரோ நகரில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    நல் மீட்பரே, உம்மேலே
என் பாவம் வைக்கிறேன்;
அன்புள்ள கையினாலே
என் பாரம் நீக்குமேன்;
நல் மீட்பரே, உம்மேலே
என் குற்றம் வைக்க, நீர்
உம் தூய ரத்தத்தாலே
விமோசனம் செய்வீர்

2.    நல் மீட்பரே, உம்மேலே
என் துக்கம் வைக்கிறேன்
இப்போதிம்மானுவேலே
எப்பாடும் நீக்குமேன்
நல் மீட்பரே, உம்மேலே
என் தீனம் வைக்க நீர்
உம் ஞானம் செல்வத்தாலே
பூரணமாக்குவீர்

3.    நல் மீட்பரே, உம்பேரில்
என் ஆத்மா சார, நீர்
சேர்த்து உம் திவ்விய மார்பில்
சோர்பெல்லாம் நீக்குவீர்;
நேசா! இம்மானுவேலே!
இயேசென்னும் நாமமும்
உகந்த தைலம்போலே
சுகந்தம் வீசிடும்

4.    நல் மீட்பரே, பாங்காக
அன்போடு சாந்தமும்
நீர் தந்தும் சாயலாக
சீராக்கி மாற்றிடும்;
நல் மீட்பரே, உம்மோடு
பின் விண்ணில் வாழுவேன்;
நீடூழி தூதர் பாட,
பாடின்றிப் பூரிப்பேன்

Post Comment

Thursday, August 4, 2016

பாமாலை 297 - ஆ இயேசுவே நான் பூமியில்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஆ இயேசுவே, நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே

2.    அவ்வாறென்னை இழுக்கையில்
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல்; பாவத்தை விடும்
அநந்த நன்மைக்குட்படும்.

3.    தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்
சகிப்பவன் சந்தோஷிப்பான்

4.    பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்.

Post Comment

Tuesday, August 19, 2014

பாமாலை 299 - உந்தன் சொந்தமாக்கினீர் (Newington)

பாமாலை 299 - உந்தன் சொந்தமாக்கினீர் 
Thine for ever God of Love
Tune : Newington

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    உந்தன் சொந்தமாக்கினீர்
அடியேனை நோக்குவீர்
பாதுகாரும் இயேசுவே
என்றும் தீங்கில்லாமலே

2.    நான் உம் சொந்தம், லோகத்தில்
மோட்ச யாத்திரை செய்கையில்
ஜீவன், சத்தியம், வழியும்
நீரே, ரட்சித்தாண்டிடும்

3.    நான் உம் சொந்தம் ரட்சியும்
மட்டில்லாத பாக்கியமும்
அருள் நாதா, நல்கினீர்
இன்னமும் காப்பாற்றுவீர்.

4.    நான் உம் சொந்தம் நித்தமாய்
தாசனை நீர் சுகமாய்
தங்கச் செய்து, மேய்ப்பரே
காத்தும் மேய்த்தும் வாருமே.

5.    நான் உம் சொந்தம், தேவரீர்
வழி காட்டிப் போஷிப்பீர்
பாவம் நீங்கக் கழுவும்
ஆயுள் முற்றும் நடத்தும்.

Post Comment

Monday, March 3, 2014

பாமாலை 306 - தூய்மை பெற நாடு

பாமாலை 306 – தூய்மை பெற நாடு
(Take time to be holy)

’நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்’. லேவி 20 : 7

நமது வாழ்க்கை எப்போதும் நெருக்கடியான அலுவல்கள் நிறைந்தது.  காலையில் படுக்கையிலிருந்து எழுந்தபின், ஒன்றன்பின் ஒன்றாக அவசரநிலை உண்டாகிக்கொண்டேயிருக்கின்றன.  தாயார் உணவு தயாரிப்பதிலும், தந்தை தன் அலுவலகத்துக்குத் தேவையான காரியங்களை கவனிப்பதிலும் பிள்ளைகள் பள்ளிப்பாடங்களைப் படிப்பதிலும் அவசரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.  இவ்விதமான நெருக்கடியான நிலைமைகள் நாள்முழுவதும், இரவில் படுக்கைக்குச் செல்லும்வரையிலும் நம்மை நெருக்குகின்றன.  இதற்கிடையில் பரிசுத்த பிதாவுடன் தரித்திருந்து, நம்மை பரிசுத்தப்படுத்திக்கொள்ள நாம் நேரம் செலவிடுவதில்லை.  ஆடையலங்காரங்கள் செய்வதிலும், நண்பர்களுடன் உறவாடுவதிலும், விளையாட்டு அரங்கங்களிலும் நாம் எவ்வளவோ நேரத்தை செலவிடுகிறோம்.  ஆனால் ஆண்டவருடன் தரித்திருந்து, அவரைப்போலப் பரிசுத்தமடைவதற்காக நாம் செலவிடும் நேரம் எவ்வளவு என்பதை சிந்தித்துப் பார்ப்போமாக.  ஒருவேளை, அவசரமாக திருமறையைத் தட்டித் திறந்து, கண்ணில்படுகிற ஒரு வசனத்தை வாசித்து, அரை நிமிடத்தில் ஒரு ஜெபத்தைச் சொல்லிக் கடமையை முடிக்கவில்லையா?  தானியேல் தினம் மூன்றுவேளை தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் என்று வாசிக்கிறோம் (தானி 6:10).  இப்பாடலில் முதல்வரியில் (ஆங்கிலத்தில்) சொல்லியபடி, பரிசுத்தத்தை நாடுவதற்காக நேரம் செலவிட நாம் ஏவப்படுகிறோம்.

இங்கிலாந்து நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த வில்லியம் டன் லாங்ஸ்டார்ப் (William Dunn Longstaff) என்பவர் ஒரு சிறந்த பக்தன்.  ஒழுங்காக ஆலய ஆராதனைக்குச் செல்பவர்.  ஒவ்வொரு ஆராதனையிலும் ஆற்றப்படும் அருளுரையை மிகவும் நுட்பமாகக் கவனித்து, வீட்டுக்கு வந்தவுடன் அதைக்குறித்து வெகுநேரம் சிந்தனை செய்வார்.  ஒரு ஓய்வுநாள் காலை ஆராதனையில், ‘நான் பரிசுத்தர் ; ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக’ (லேவி 11:45) என்னும் வசனத்தில் செய்யப்பட்ட ஓர் அரிய அருளுரையைக் கேட்டு, வெகு நேரம் அதைக்குறித்துச் சிந்தனை செய்யவே, ‘தூய்மை பெற நாடு’ என்னும் செய்யுள் அவர் மனதில் உருவாயிற்று.  உடனே அவர் அதை எழுதிவைத்தார்.  இதை அவர் ஓர் பாடலாகக் கருதாமல், ஒரு சாதாரணச் செய்யுளாகவே கருதினார். பின்னர், இச்செய்யுள் சில கிறிஸ்தவ பத்திரிகைகளில் பிரசுரமானது.  மற்றவர்களும் இதை ஒரு முக்கியமான செய்யுளாகக் கருதவில்லை.  அமெரிக்காவில் ட்ரெமான்ட்டெம்பிள் (Tremont Temple) என்னுமிடத்திலுள்ள ஆலயத்தில் ஜியார்ஜ் ஸ்டெபின்ஸ் (George Stebbins) என்னும் சங்கீத நிபுணர் பாடகர் தலைவராயிருந்தார்.  இவர் பத்திரிகைகளில் பிரசுரமாகும் கிறிஸ்தவச் செய்யுள்களை வெட்டி எடுத்துச் சேர்த்துவைப்பது வழக்கம்.  லாங்ஸ்டார்ப் எழுதிய ‘தூய்மை பெற நாடு என்னும் செய்யுளும் அவரது சேகரிப்பில் இருந்தது.

George Stebbins
1890’ம் ஆண்டு, ஸ்டெபின்ஸ் இந்தியாவுக்கு வந்து, பல எழுப்புதல் கூட்டங்களில் கலந்துகொண்டார்.  ஒருமுறை ‘பரிசுத்தமாக்குதல்’ என்னும் பொருளில் அமைந்த ஒரு பாடல் தேவைப்பட்டது.  இப்பொருளில் லாங்ஸ்டார்ப் எழுதிய செய்யுள் தன்னிடத்தில் இருப்பது ஞாபகத்துக்கு வரவே, அதைத் தேடி எடுத்து, அதற்கேற்ற ஓர் ராகம் அமைத்தார்.  இது பலராலும் போற்றப்பட்டு, பல இடங்களுக்கும் பரவியது.  ஆகவே இப்பாடல் ஓர் ஆங்கிலேயரால் எழுதப்பட்டு, ஓர் அமெரிக்கரால் ராகம் அமைக்கப்பட்டு, இந்தியாவில்தான் முதன்முதலாகப் பாடப்பட்டது.

இப்பாடலை எழுதிய வில்லியம் டன் லாங்ஸ் டார்ப் என்பவரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய அதிகமான குறிப்புகள் எதுவும் இல்லை. அவர் 1822ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார்.  அவர் ஒரு சிறந்த கிறிஸ்தவ பக்தன்.  ஆழ்ந்த ஆத்தும அனுபவம் உள்ளவர்.  இந்த ஒரே பாடல் மூலம் அவர் புகழ் ஓங்கிற்று.  அவர் 1891’ம் ஆண்டு, தமது 72வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே
நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;
கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,
யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்.

2.    தூய்மை பெற நாடு; லோகக் கோஷ்டத்தில்
தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
யேசுவைப் போலாவாய் நோக்கின் அவரை
பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.

3.    தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த
என்ன நேரிட்டாலும், அவர் பின் செல்ல
இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை
நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை

4.    தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து
சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,
அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க,
முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.
Take Time to be Holy

Post Comment

Sunday, March 2, 2014

பாமாலை 305 - தீயோர் சொல்வதை (Austria)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.
 
2.  நதி ஓரத்தில் வாடாமல்
நடப்பட்டு வளர்ந்து,
கனி தந்து, உதிராமல்
இலை என்றும் பசந்து,
காற்றைத் தாங்கும் மரம்போல
அசைவின்றியே நிற்பான்;
அவன் செய்கை யாவும் வாய்க்க
ஆசீர்வாதம் பெறுவான்.
 
3.  தீயோர், பதர்போல் நில்லாமல்
தீர்ப்பு நாளில் விழுவார்;
நீதிமான்களோடிராமல்
நாணி நைந்து அழிவார்;
இங்கே பாவி மகிழ்ந்தாலும்
பாவ பலன் நாசந்தான்;
நீதிமான் இங்கழுதாலும்
கர்த்தர் வீட்டில் வாழுவான்.

Post Comment