Sunday, March 13, 2016

பாமாலை 107 - துக்கம் கொண்டாட (St. Cross)

பாமாலை 107 - துக்கம் கொண்டாட 
Tune : St. Cross


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    துக்கம் கொண்டாட வாருமே,
பாரும்! நம் மீட்பர் மரித்தார்;
திகில் கலக்கம் கொள்ளுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

2.    போர் வீரர், யூதர் நிந்தித்தும்,
மா பொறுமையாய்ச் சகித்தார்
நாமோ புலம்பி அழுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

3.    கை காலை ஆணி பீறிற்றே,
தவனத்தால் நா வறண்டார்;
கண் ரத்தத்தாலே மங்கிற்றே;
இயேசு சிலுவையில் மாண்டார்.

4.    மும்மணி நேரம் மாந்தர்க்காய்,
தம் மெளனத்தாலே கெஞ்சினார்;
நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
இயேசு சிலுவையில் மாண்டார்.

5.    சிலுவையண்டை வந்துசேர்,
நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

6.    உருகும் நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும் தாரும், இயேசுவே;
மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
நீர் சிலுவையில் மாண்டீரே!

Post Comment