Tuesday, April 18, 2023

பாமாலை 78 - ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் (Nettleton)

பாமாலை 78 - ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் 
Tune : Nettleton

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்,
அடியேனைக் காத்தீரே;
மீண்டும் என்னை உமக்கேற்ற
சேவை செய்யக் கொள்வீரே;
என் இதயம் மனம் செயல்
யாவும் உம்மைத் துதிக்கும்;
ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்!
அடியேனை ஆட்கொள்ளும்.
 
2.    இவ்வுலக வாழ்நாள் எல்லாம்
நான் உமக்காய் வாழவும்,
அன்பு, தியாகம், அருள், பக்தி
அனைத்தும் பெற்றோங்கவும்,
பாவ அழுக்கெல்லாம் நீக்கி
தூய பாதை செல்லவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும்,
அடியேனை ஆட்கொள்ளும்.
 
3.    வியாதி, துக்கம், தொல்லை வந்தால்
உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்;
உம் ப்ரசன்னம் எனக்கின்பம்
சாவுக்கும் நான் அஞ்சிடேன்;
துன்பத்தில் என் நண்பர் நீரே
இன்பம் ஈபவர் நீரே;
ஆண்டவா, நீர்தாம் என் தஞ்சம்,
அடியேனை ஆட்கொள்ளும்.
 
4.    மூவராம் திரியேகர்க்கென்றும்,
மாட்சி மேன்மை மகிமை;
விண்ணில் தூதர் தூயர் கூட்டம்
அவர் நாமம் துதிக்கும்;
மண்ணில் மாந்தர் கூட்டம் யாவும்
அவர் பாதம் போற்றவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும்,
அடியாரை ஆட்கொள்ளும்.

Post Comment

பாமாலை 91 - இஸ்திரீயின் வித்தவர்க்கு (Melton)

பாமாலை 91 - இஸ்திரீயின் வித்தவர்க்கு
Tune : Melton


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.  இஸ்திரீயின் வித்தவர்க்கு
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
கர்த்தராம் இம்மானுவேலே
ஓசன்னா.

2.    அதிசயமானவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்
ஆலோசனைக் கர்த்தாவுக்கு
ஓசன்னா.

3.    வல்ல ஆண்டவருக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
நித்திய பிதாவுக்கென்றும்
ஓசன்னா.

4.    சாந்த பிரபு ஆண்டவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்
சாலேம் ராஜா இயேசுவுக்கு
ஓசன்னா.

5.    விடி வெள்ளி, ஈசாய் வேரே,
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா.

6.    தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா முழக்குவோம்
உன்னதம் முழங்குமெங்கள்
ஓசன்னா.

7.    அல்பா ஒமேகாவுக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
ஆதியந்தமில்லாதோர்க்கு
ஓசன்னா.

8.    தூதர், தூயர், மாசில்லாத
பாலர் யாரும் பாடிடும்
ஓசன்னாவோடெங்கள் நித்திய
ஓசன்னா.

Post Comment

Tuesday, April 11, 2023

பாமாலை 94 - தயாள இயேசு தேவரீர் (Truro)

பாமாலை 94 - தயாள இயேசு தேவரீர் 
Ride on ! ride on in Majesty!
Tune : Truro

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  தயாள இயேசு தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்
ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.

2.    தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
மரணம் வெல்லும் வீரரே
உம் வெற்றி தோன்றுகின்றதே.

3.    விண்ணோர்கள் நோக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வியப்புற்றே அம்மோக்ஷத்தார்
அடுக்கும் பலி பார்க்கிறார்.

4.    வெம் போர் முடிக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
தம் ஆசனத்தில் ராயனார்
சுதனை எதிர்பார்க்கிறார்.

5.    தாழ்வாய் மரிக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
நோ தாங்கத் தலை சாயுமே!
பின் மேன்மை பெற்று ஆளுமே.


Post Comment

Monday, April 10, 2023

பாமாலை 93 - சிலுவைக் கொடி முன்செல்ல (Winchester New)

பாமாலை 93 – சிலுவைக் கொடி முன்செல்ல
(The royal banners forward go)
Tune : Winchester New


இப்பாடல் முதலில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது.  
எழுதியவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. 1851ல் ஜான் மேசன் நீல் (John Mason Neale) என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் தமிழ் உட்பட ஏராளமான பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகமெங்கும் குருத்தோலை ஞாயிறன்று பாடப்பட்டு வருகிறது.  நம் தமிழ் திருச்சபைகளில் ’இஸ்திரீயின் வித்தவர்க்கு’ (பாமாலை 91), ஓசன்னா பாலர் பாடும்’ (பாமாலை 92), ‘தயாள இயேசு தேவரீர்” (பாமாலை 94), ஆகிய மூன்று பாமாலைகளும் குருத்தோலை ஞாயிறன்று பரவலாகப் பாடப்படும் நிலையில், ‘சிலுவைக்கொடி முன்செல்ல’ எனும் இப்பாடல், மிக அரிதாகவே பாடப்படுகிறது.

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    சிலுவைக் கொடி முன்செல்ல
செல்வார் நம் வேந்தர் போர் செய்ய;
நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்;
தம் சாவால் ஜீவன் தந்தனர்.

2.    மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார்,
நல் வாலிபத்தில் மரித்தார்;
நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே,
நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.

3.    முன்னுரை நிறைவேறிற்றே;
மன்னர்தம் கொடி ஏற்றுமே;
பலக்கும் அன்பின் வல்லமை
சிலுவை வேந்தர் ஆளுகை.

4.    வென்றிடும் அன்பின் மரமே!
வெல் வேந்தர் செங்கோல் சின்னமே!
உன் நிந்தை மாட்சி ஆயிற்றே,
மன்னர் உம்மீது ஆண்டாரே.

5.    உன்னில் ஓர் நாளில் ஆண்டவர்
மன்னுயிர் சாபம் போக்கினர்;
ஒப்பற்ற செல்வம் தம்மையே
ஒப்பித்து மீட்டார் எம்மையே.


Post Comment

Sunday, April 9, 2023

பாமாலை 95 - மாட்சி போரை (Regent Square)

பாமாலை 95 - மாட்சி போரை  போரின் ஓய்வை
Sing my tongue the glorious battle
Tune :  Regent Square

பாடலின் மூலம் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப்பாடலின் மூல வடிவத்தை, ஃபோர்துனாதஸ் [Venantius Honorius Fortunatus Clementianus (c.530-609)] என்ற பேராயர் எழுதினார். தனது இளவயதிலேயே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஃபோர்துனாதஸ், அச்சிறுவயதில் பார்வைத்திறன் குறைந்தவராய் இருந்தார். St Martin of Tours என்ற ஆலயத்திலுள்ள விளக்கிலிருந்த எண்ணெயை இவர் கண்களில் பூசியதன் மூலம் இவர் பார்வை தெளிவுபெற்றது’ என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஃபோர்துனாதஸ் இப்பாடலை 10 சரணங்கள் கொண்டதாக எழுதினார். அதன் முதல் 5 சரணங்கள் லெந்து காலத்திலும், அடுத்த 5 சரணங்கள் புனித வெள்ளி ஆராதனையிலும் பாடப்பட்டன என்று கருதப்படுகிறது.


6ம் நூற்றாண்டில் ஃபோர்துனாதஸ் எழுதிய இப்பாடல் 12ம் நூற்றாண்டில் தாமஸ் [Saint Thomas Aquinas (1225-1274)] என்ற போதகரால் ” “Pange Lingua Gloriosi Corporis Mysterium” என்ற கவிதை வடிவம் பெற்றது.  பின்னர் 19ம் நூற்றாண்டில் இப்பாடலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜான் (John Mason Neale) என்பவர் எழுதி வெளியானது.

Rev Fr John Mason Neale
ஜான் மேசன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர்.  அவரது தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர்.  ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார்.  திருச்சபை மறையில் ‘ஆக்ஸ்வர்டு குழு’வை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.  உடல்நிலை குன்றியதால், இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது.  அவர் ஒரு சிறந்த கல்விமான்.  ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார்.  திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார்.  மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார்.  அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.

ஜான் மேசன் நீல் பண்டிதர் 1866ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 6ம் தேதி ஈஸ்ட்டு கிரின்ஸ்டெட் என்னுமிடத்தில் தமது 48ம் வயதில் மறுமைக்குட்பட்டார்.


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    மாட்சி போரை போரின் ஓய்வை
பாடு என்தன் உள்ளமே;
மாட்சி வெற்றி சின்னம் போற்றி
பாடு வெற்றி கீதமே;
மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்
மாண்டு பெற்றார் வெற்றியே.

2.    காலம் நிறைவேற, வந்தார்
தந்தை வார்த்தை மைந்தனாய்;
ஞாலம் வந்தார், வானம் நீத்தே
கன்னித் தாயார் மைந்தனாய்;
வாழ்ந்தார் தெய்வ மாந்தனாக
இருள் நீக்கும் ஜோதியாய்.

3.    மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்
விட்டார் வீடு சேவைக்காய்!
தந்தை சித்தம் நிறைவேற்றி
வாழ்ந்தார்; தந்தை சித்தமாய்
சிலுவையில் தம்மை ஈந்தார்
தூய ஏக பலியாய்.

4.    வெற்றி சின்ன சிலுவையே,
இலை மலர் கனியில்
ஒப்புயர்வு அற்றாய் நீயே!
மேலாம் தரு பாரினில்!
மீட்பின் சின்னம் ஆனாய்; மீட்பர்
தொங்கி மாண்டனர் உன்னில்.

5.    பிதா சுதன் ஆவியான
தூயராம் திரியேகரே,
இன்றும் என்றும் சதாகாலம்
மாட்சி ஸ்தோத்ரம் ஏற்பீரே;
மாட்சி ஸ்தோத்ரம் நித்திய காலம்
உன்னதத்தில் உமக்கே.

Post Comment

பாமாலை 103 - என் அருள் நாதா (Hamburg)

பாமாலை 103 - என் அருள் நாதா 
When I survey the wondrous Cross
Tune : Hamburg

‘நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக. கலாத்தியர் 6 : 14


இப்பாடலின் இரண்டாவது வரியாகிய, ‘சிலுவைக் காட்சி பார்க்கையில்’ என்பதில், ‘பார்க்கையில்’ என்பது ஆங்கிலத்தில், Survey என்றிருக்கிறது.  இப்பதம் நிலத்தை அளப்பதைக் குறிக்கும்.  நிலத்தை அளப்பவன், நிலத்தின் இருப்பிடம், வடிவம், பரப்பு, எல்கைகள் முதலியவற்றைத் தன் கண்களினாலும், அளக்கும் கருவிகளினாலும் தன் மனதில் திட்டவட்டமாகக் கணிக்கவேண்டும்.  இதையே இப்பாடலை எழுதியவர் தன் மனதில் எண்ணியிருக்கலாம்.  கிறிஸ்தவர்களாகிய நாம், அருள்நாதர் உயிர்துறந்த கல்வாரிச் சிலுவைக் காட்சியை இவ்விதமாகவே ஆராயவேண்டும்.
சிலுவைக் காட்சியை நாம் நுட்பமாக ஆராயும்போது, நமது வாழ்க்கையிலுள்ள குறைகள் தென்படும்.  நமது சாதனைகளைக் குறித்து பெருமைபாராட்ட இடமிராது.  மேலும், சிலுவைக்காட்சி வேதனை கொடுக்கும் ஒரு சின்னமாகத் தோற்றமளிக்கும்.  ஆண்டவரின் முகத்தில் முள்முடியினால் வடிந்த இரத்தம் பாய்ந்தோடுவதையும், கைகளிலும், கால்களிலும், ஆணிகளினால் பாய்ந்த இரத்தத்தையும் காண்கிறோம்.  கல்வாரிச் சிலுவை, ‘பேரன்பும், துன்பும் கலந்தே பாய்ந்தோடும்’ காட்சியையும் அளிக்கிறது.  நாம் இன்னும் பாவிகளாயிருக்கையில், அவர் நம்மை நேசித்தார்.  


ஆகவே, இச்சிலுவைக் காட்சியின்முன் நாம் தலைகுனிந்து, நம்மை அவருக்கு அர்ப்பணம் செய்ய ஏவப்படுகிறோம்.  சராசரங்கள் அனைத்தும் நமக்குச் சொந்தமாய் இருந்தாலும், அவை ஆண்டவரின் அன்புக்கு ஈடாகமாட்டா.
இப்பாடலை எழுதிய ஐசக் வாட்ஸ் பண்டிதர் (Isaac Watts) 1674ம் ஆண்டு, ஜூலை மாதம் 17ம் தேதி, இங்கிலாந்தில் Southampton நகரில், ஒன்பது குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார்.  அவரது தந்தை ஓர் ஆசிரியர்.  Southampton நகரிலுள்ள சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தின் குருவானவர், ஐசக் வாட்சுக்கு லத்தீன், கிரேக்க, எபிரேய மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்.  


1690ல் அவர் சுய ஆளுகைச் சபையைச் சேர்ந்த ஒரு வேதசாஸ்திரப் பயிற்சி நிலையத்தில் பயின்று, 1697ல் தமது இருபத்துநான்காவது வயதில், லண்டன் மாநகரில் ஒரு சுய ஆளுகைச் சபையின் போதகராகத் திருப்பணியாற்ற ஆரம்பித்தார்.  சில ஆண்டுகள் பணியாற்றியபின், அவரது உடல் நலம் குன்றியதால், திருப்பணியை விட்டு, 1714 முதல், ஹெர்போர்டுஷயரிலிருந்த தமது நண்பர், ஸர் தாமஸ் அபினியுடன் (Sir Thoma Abney) நிரந்தரமாகத் தங்கியிருக்கவேண்டிவந்தது.


அவர் குருவாகப் பணியாற்ற ஆரம்பித்தபோது, அக்காலத்திலிருந்த கிறிஸ்தவப் பாட்டுப் புத்தகங்களில் காணப்பட்ட பாடல்களில் அதிருப்தியடைந்து, தாமே பல பாடல்கள் எழுதினார்.  இரண்டு ஆண்டுகளாக அவர் எழுதிய பாடல்களை, ‘ஆவிக்குரிய பாடல்களும், ஞானப்பாட்டுகளும்’ (Hymns and Spiritual songs) என்னும் பெயருடன் வெளியிட்டார்.  ‘என் அருள்நாதா இயேசுவே’ என்னும் இப்பாடல் கலாத்தியர் 6:14ம் வசனத்தின்பேரில், 1707ம் ஆண்டு எழுதப்பட்டது.  பிரபல ஆங்கிலக்கவிஞரான மேத்யூ அர்னால்டு, இப்பாடலைப் பார்த்து, ‘ஆங்கிலமொழியில் எழுதப்பட்ட பாடல்களில் மிகச்சிறந்த பாடல்’ எனப் போற்றியுள்ளார்.  தனது மரணப் படுக்கையிலும் இதையே கடைசியாகப் பாடி மகிழ்ந்தார்.  


இப்பாடலுக்கு புகள்பெற்ற அமெரிக்க இசை வல்லுநரான லோவல் மேசன் "ஹாம்பர்க்" என்ற  ராகத்தை அமைத்தார். எபிரேய தேவாலையத்தில் பாடும் பாடல் ராகத்தின் அடிப்படையில் இது அமைக்கப்பட்டது. லோவன் மேசன் "உம்மண்டை கர்த்தரே" போன்ற பிரபல பாடல்களுக்கு ராகம் அமைத்தவர்.
🎤🎷🎺🎻🎸🎶🎵🎼🎧🎧🎤

............

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. என் அருள் நாதா இயேசுவே
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்.

2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்?
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

3. கை, தலை, காலிலும், இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே.

4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்!
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்.

5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே,
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே.

Post Comment