Tuesday, June 27, 2023

பாமாலை 32 - நாம் நித்திரை செய்து (Hursley)

பாமாலை 32 - நாம் நித்திரை செய்து
New every morning is the love
Tune : Hursley

SATB with Descant

SATB

Descant

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    நாம் நித்திரை செய்து விழித்தோம்
நற்சுகம் பலம் அடைந்தோம்
நாள்தோறும் தெய்வ அன்பையே
உணர்ந்து ஸ்துதி செய்வோமே.

2.    தீங்கை விலக்கிப் பாவத்தை
மன்னித்து, மோட்ச நம்பிக்கை
மென்மேலும் ஓங்க நாதனார்
கடாட்சம் செய்து காக்கிறார்.

3.    அன்றன்று வரும் வேலையை
நாம் செய்கின்ற பணிவிடை
என்றெண்ணியே, ஒவ்வொன்றையும்
படைப்போம் பலியாகவும்.

4.    நம்மை வெறுத்து, கர்த்தரின்
சமீபம் சேர விரும்பின்,
அன்றாடக கடமையும்
ஓர் ஏதுவாக விளங்கும்.

5.    ஜெபிக்கும் வண்ணம் உய்யவும்,
கர்த்தாவே, பலம் ஈந்திடும்;
உம்மண்டை நாங்கள் வாழவும்
தகுந்தோர் ஆக்கியருளும்.


Post Comment

Monday, June 26, 2023

நான் பிரமித்து நின்று பேரன்பின்

நான் பிரமித்து நின்று பேரன்பின்
I stand all bewildered with wonder

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1. நான் பிரமித்து நின்று பேரன்பின்
ப்ரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்

மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன் 

2. முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் ப்ரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன் 

3. தம் கரத்தை என் மீதில் வைத்து
‘நீ சொஸ்தமாவாய்‘ என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினர் 

4. எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் ப்ரகாசம்
என் பேரிலே வீச செய்வார் 



Post Comment

பாமாலை 189 - என் மீட்பர் (Hesperus)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
உம் பாதத்தண்டை நிற்கிறேன்
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன்.
 
2.  என் கிரியைகள் எம்மாத்திரம்?
பிரயாசை எல்லாம் விருதா
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா.
 
3.  உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன்
உட்கொண்டன்பாய் அருந்தவும்
நான் பரவசமாகுவேன்.
 
4.  மாசற்ற திரு ரத்தத்தை
கொண்டென்னைச் சுத்திகரியும்
மா திவ்விய ஜீவ அப்பத்தை
என் நெஞ்சத்தில் தந்தருளும்.
 
5.  என் நாதா உம் சரீரமே
மேலான திவ்விய போஜனம்
மாசற்ற உந்தன் ரத்தமே
மெய்யான பான பாக்கியம்.

Post Comment

Sunday, June 18, 2023

பாமாலை 250 - யாரினும் மேலான அன்பர் (Ar Hyd Y Nos)

பாமாலை 250 - யாரினும் மேலான அன்பர் 
One there is above all others
Tune : Ar Hyd Y Nos

John Newton
இப்பாடலை எழுதியவர் ஜான் நியூட்டன் (John Newton).  இவரது காலம் 1725-1807. ஜான் ஏழு வயதாய் இருக்கும்போது அவரின் தாயார் மரித்துப்போக, தன் தந்தையுடன் கப்பல் பணியாளனாகத் தன் வாழ்வைத் தொடர்ந்து வந்தார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைகள் விற்கும் கப்பல்களில் மாலுமியாகவும், கப்பற் தலைவனாகவும் பணியாற்றிய நியூட்டன், பின்னர் இறைப்பணிக்கென்று தம்மை ஒப்புவித்து, இங்கிலாந்தின் Anglican திருச்சபையின் போதகராக அபிஷேகம் பெற்றார்.  

பாடல்கள் எழுதுவதில் மிகுந்த புலமை பெற்றிருந்த ஜான் நியூட்டன் தம் இறைப்பணிக்காலத்தில் ”One there is, above all others” உள்ளிட்ட ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.  அவற்றுள் ‘Amazing Grace’ எனும் மிகப் பிரபலமான ஆங்கிலப்பாடலும் ஒன்றாகும்.  “யாரினும் மேலான அன்பர்’ எனும் இப்பாடல் நம் பாமாலை புத்தகத்தில் ‘வாலிபர் பாக்கள்’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. யாரிலும் மேலான அன்பர்
மா நேசரே;
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்,
நேசித்தாலுங் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார்,
மா நேசரே!

2. என்னைத் தேடிச் சுத்தஞ் செய்தார்
மா நேசரே!
பற்றிக் கொண்ட என்னை விடார்,
மா நேசரே;
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக் கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார்,
மா நேசரே!

3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு
மா நேசரை;
என்றுமே விடாமல் எண்ணு
மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும், நில்லு;
நேரே மோட்ச பாதை செல்லு
இயேசுவாலே யாவும் வெல்லு,
மா நேசரே!

4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்,
மா நேசரே!
சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம்;
மா நேசரே!
கொண்ட நோக்கம் சித்தி செய்வார்,
நம்மை அவர் சேர்த்துக் கொள்வார்
மோட்ச நன்மை யாவும் ஈவார்;
மா நேசரே!

Post Comment