Tuesday, August 4, 2020

பாமாலை 255 - நான் தேவரீரை கர்த்தரே

Unison 
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. நான் தேவரீரை, கர்த்தரே,

துதிப்பேன்; அடியேன்

எல்லாரின் முன்னும் உம்மையே

அறிக்கை பண்ணுவேன்.

 

2. ஆ, எந்தப் பாக்கியங்களும்

உம்மால்தான் வருமே,

உண்டான எந்த நன்மைக்கும்

ஊற்றானவர் நீரே.

 

3. உண்டான நன்மை யாவையும்

நீர் தாரீர்; நித்திய கர்த்தரே;

உம்மாலொழிய எதுவும்

உண்டாகக் கூடாதே.

 

4. நீர் வானத்தை உண்டாக்கின

கர்த்தா, புவிக்கு நீர்

கனிகளைக் கொடுக்கிற

பெலனையுந் தந்தீர்.

 

5. குளிர்ச்சிக்கு மறைவையும்

தாரீர்; எங்களுக்குப்

புசிப்பதற்கு அப்பமும்

உம்மால் உண்டாகுது.

 

6. ஆரால் பலமும் புஷ்டியும்,

ஆராலேதான் இப்போ

நற்காலம் சமாதானமும்

வரும்? உம்மால் அல்லோ.

 

7. ஆ, இதெல்லாம், தயாபரா,

நீர் செய்யும் செய்கையே;

நீர் எங்களைத் தற்காக்கிற

அன்புள்ள கர்த்தரே.

 

8. உம்மாலே வருஷாந்திரம்

பிழைத்து வாழ்கிறோம்;

உம்மாலே நாங்கள் விக்கினம்

வந்தாலும் தப்பினோம்.

 

9. ஆ, களிகூர்ந்து பூரித்து

மகிழ், என் மனதே;

பராபரன்தான் உனது

அநந்த பங்காமே.

 

10. அவர் உன் பங்கு, உன் பலன்;

உன் கேடகம், நன்றாய்த்

திடப்படுத்தும் உன் திடன்;

நீ கைவிடப்படாய்.

 

11. உன் நெஞ்சு ராவும் பகலும்

துக்கிப்பதென்ன? நீ

உன் கவலை அனைத்தையும்

கர்த்தாவுக் கொப்புவி.

 

12. உன் சிறு வயதுமுதல்

பராமரித்தாரே;

கர்த்தாவால் வெகு மோசங்கள்

விலக்கப்பட்டதே.

 

13. கர்த்தாவின் ஆளுகை எல்லாம்

தப்பற்றதல்லவோ;

ஆம் அவர் கை செய்கிறதெல்லாம்

நன்றாய் முடியாதோ?

 

14. ஆகையினால் கர்த்தாவுக்கு

நீ பிள்ளைப் பக்தியாய்

எப்போதும் கீழ்ப்படிந்திரு,

அப்போது வாழுவாய்.

Post Comment