Showing posts with label கடவுள்-பிதா. Show all posts
Showing posts with label கடவுள்-பிதா. Show all posts

Wednesday, June 4, 2014

பாமாலை 254 - களிப்புடன் கூடுவோம் (Monkland)

பாமாலை 254 – களிப்புடன் கூடுவோம்
(Let us with a gladsome mind)
Tune : Monkland

‘கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது’. சங் 36:1

பழைய ஏற்பாட்டுக்காலத்தில், யூத ஜனங்களின் தெய்வ வழிபாடுகளில் சங்கீதங்களே பாடல்களாக உபயோகிக்கப்பட்டுவந்தன.  ஒவ்வொரு வசனமும் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சபையாரின் ஒரு பகுதியினர் முதல் பாகத்தையும் மற்ற பகுதியினர் இரண்டாம் பாகத்தையும் வாத்தியக் கருவிகளுடன் பாடிவந்தனர்.  120ம் சங்கீதம் முதல் பல சங்கீதங்கள் ‘ஆரோகண சங்கீதம்’ என்னும் தலைப்பைக் கொண்டவை. இவை யூத ஜனங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பிவரும்போதும், தேவாலயப் பிரகாரங்களில் செல்லும்போதும், பண்டிகைக்காலங்களில் எருசலேமுக்குச் செல்லும்போதும் பாடிக்கொண்டுபோவதற்காக எழுதப்பட்டவை.  கிறிஸ்தவ வழிபாடுகளிலும் முதலில் சங்கீதங்களே பாடப்பட்டுவந்தன. நமது பாட்டுப்புத்தகங்களிலும், சங்கீதங்களைத் தழுவி எழுதப்பட்ட அனேக பாடல்களைக் காணலாம்.  136ம் சங்கீதமானது, கடவுள் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, பார்வோனுடைய சேனைகளை சிவந்த சமுத்திரத்தில் அழித்து, கானான் தேசத்திலுள்ள பல ராஜாக்களை அழித்து, அத்தேசத்தை அவர்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்ததற்காகவும் அவரைத் துதித்துப் பாடப்பட்டிருக்கிறது.

John Milton
1623ம் ஆண்டு, ஜான் மில்ட்டன் (John Milton) என்னும் பிரபல ஆங்கிலக்கவிஞர் தனது திருமறையைப் படித்துக்கொண்டிருக்கையில், சங்கீத புத்தகத்திலுள்ள பல சங்கீதங்கள் பாடல் ரூபத்தில் அமையக்கூடியதாக இருப்பதைக் கண்டார்.  அவற்றில் 136ம் சங்கீதத்தில் ஒவ்வொரு வசனமும் ‘அவர் கிருபை என்றுமுள்ளது’ என்னும் பல்லவியோடு முடிவடைவதைப் பார்த்தவுடன், அதேவிதமான பல்லவியோடு முடிவடையும் ஒரு பாடல் எழுத ஆவல் கொண்டார். ஆகவே, 26 வசனங்கள் கொண்ட அந்த சங்கீதத்தை 24 கவிகள் கொண்ட ஒரு பாடலாக எழுதி முடித்தார். இப்பாடலே ‘களிப்புடன் கூடுவோம்’ என்னும் பாடலாகும்.  இதிலுள்ள எல்லா கவிகளும் மிகச் சிறந்ததாயிருப்பினும், பாட்டுப்புத்தகத் தொகுப்பாளர்கள் நான்கு அல்லது ஐந்து கவிகளை மட்டும் சேர்த்துக்கொண்டனர். இப்பாடல் கிறிஸ்தவ மாநாடுகளில் ஒரு துதிப்பாடலாகவும், அன்பின் விருந்துகளில் நன்றிகூறும் பாடலாகவும் பாடப்பட்டு வருகின்றது.

இப்பாடலை எழுதிய ஜான் மில்ட்டன் 1608ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தார். இவரது தந்தை ஓர் எழுத்தாளர். இளம் வயதிலேயே மகனுடைய சிறந்த திறமையையுணர்ந்து, நல்ல கல்வி பயில வசதியளித்தார்.  முதலில் தூய பவுல் பள்ளியிலும், பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.  அவரது சிறந்த ஒழுக்கத்தையும், நேர்மையான நடத்தையையும் கவனித்த அவரது உடன் மாணவர் அவரை, ‘கிறிஸ்துவின் மனையாட்டி’ (Lady of Christ’s) என அழைத்தனர். தமது வாழ்க்கையில் அவர் கவிஞராகவும், கட்டுரையாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார்.  சிறிது காலம் அவர் அரசாங்கத் துறையில் லத்தீன் மொழி மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார்.  மில்ட்டன் 1652 முதல் கண்பார்வையை இழந்தபோதிலும், கவிகள் எழுதுவதைக் கைவிடவில்லை.  அவர் கவிகளைச் சொல்லும்போது, அவரது மகள்கள் அவற்றை எழுதி வைத்தனர்.  அவர் எழுதிய கவிகளில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது 1667ல் அவர் வெளியிட்ட, ‘Paradise Lost’ என்னும் ஆங்கிலக் காவியமாகும்.  ஆங்கிலக் கவிஞர்களில் ஷேக்ஸ்பியர் என்பவருக்கு அடுத்தபடியாக ஜான் மில்ட்டன் வைக்கப்பட்டுள்ளார்.


Milton Memorial
ஜான் மில்ட்டன் 1674ம் ஆண்டு, நவம்பர் மாதம், 8ம் தேதி தமது 66வது வயதில் மறுமைக்குட்பட்டார். அவரது உடல் தூய ஜைல்ஸ் (St. Giles) ஆலயத்தில் அடக்கம் பண்ணப்பட்டது.  அவரது ஞாபகார்த்தமாக லண்டன் மாநகரிலுள்ள, ‘வெஸ்ட் மின்ஸ்டர் அபே (Westminster Abbey)’ என்னும் பேராலயத்தில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            களிப்புடன் கூடுவோம்
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்.

2.    ஆதிமுதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர்மேலே சொரியும்.

3.    இஸ்ரவேலைப் போஷித்தார்
நித்தம் வழி காட்டினார்;
அவர் தயை என்றைக்கும்
மன்னாபோலே சொரியும்.

4.    வானம் பூமி புதிதாய்
சிஷ்டிப்பாரோ ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்.
Let us with a Gladsome mind

Post Comment

Sunday, May 25, 2014

பாமாலை 256 - விண்ணோர்கள் போற்றும் (Westminster)

பாமாலை 256 - விண்ணோர்கள் போற்றும் 
My God how wonderful Thou art
Tune : Westminster

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா
உம் மேன்மை அற்புதம்;
பளிங்கு போலத் தோன்றுமே
உம் கிருபாசனம்!

2. நித்தியானந்த தயாபரா
அல்பா ஒமேகாவே
மா தூயர் போற்றும் ஆண்டவா,
ராஜாதி ராஜாவே!

3. உம் ஞானம் தூய்மை வல்லமை
அளவிறந்ததே!
நீர் தூயர் தூயர் உந்தனை
துதித்தல் இன்பமே!

4. அன்பின் சொரூபி தேவரீர்,
நான் பாவியாயினும்,
என் நீச நெஞ்சைக் கேட்கிறீர்
உம் சொந்தமாகவும்.

5. உம்மைப் போல் தயை மிகுந்த
ஓர் தந்தையும் உண்டோ?
உம்மைப்போல் அன்பு நிறைந்த
தாய்தானும் ஈண்டுண்டோ?

6. என் பாவமெல்லாம் மன்னித்தீர்
சுத்தாங்கம் நல்கினீர்;
என் குற்றமெல்லாம் தாங்கினீர்;
அன்பின் பிரவாகம் நீர்!

7. மேலோக நித்திய பாக்கியத்தை
நான் பெற்று வாழுவேன்;
உம் திவ்விய இன்ப முகத்தை
கண்ணுற்றுப் பூரிப்பேன்.


Post Comment

Saturday, May 24, 2014

பாமாலை 253 - கர்த்தாவே யுகயுகமாய் (St. Anne)

பாமாலை 253 – கர்த்தாவே யுகயுகமாய்
(O God, our help in ages past)


’ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்’ சங்கீதம் 90:1

சங்கீதப் புத்தகத்திலுள்ள சங்கீதங்களில், 90ம் சங்கீதம் தனிச்சிறப்பு வாய்ந்தது.  இச்சங்கீதம் மிக நெருக்கடியான காலங்களில் வாசிக்கப்படுகிறது. யுத்த காலங்களிலும், பெருவாரியான வியாதி காலங்களிலும், பஞ்ச காலங்களிலும் இது வாசிக்கப்படுகிறது.  மேலும், ஆண்டு இறுதி ஆராதனைகளிலும், அடக்க ஆராதனைகளிலும், இதை வாசிக்கிறோம். மோசே இஸ்ரவேலைரை எகிப்து நாட்டிலிருந்து கானான் நாட்டுக்கு வழி நடத்தும்போது அவர்கள் செய்த பாவத்தினால் வெள்ளம்போல வாரிக்கொண்டு போகப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் இச்சங்கீதம் மோசேயால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இங்கிலாந்தில் ஆன் மகாராணி (Queen Anne) ஆட்சி செய்து வந்தார். இவர் இரக்க சிந்தை உள்ளவராதலால் மக்களால் வெகுவாக நேசிக்கப்பட்டார் அக்காலங்களில், ஒவ்வொரு அரசன் அல்லது அரசியின் ஆட்சியில் நாட்டின் நிலைமை எவ்வாறிருக்குமெனத் திட்டமாகச் சொல்வதற்கில்லை.  ஆன் மகாராணிக்குக் குழந்தைகள் இல்லை.  இவரது ஆட்சியின் இறுதியில், இவருக்குப்பின் ஜெர்மன் நாட்டிலுள்ள ஹானோவர் பிரபு (Elector of Hanover) ஆட்சிக்கு வருவதாக இருந்தது.  இவர் அயல் நாட்டவராதலால், இங்கிலாந்து மக்களிடம் எவ்வாறு நடந்துகொள்வாரோ என்ற அச்சமும், மத சம்பந்தமாகப் பல பிரிவுகள் இருந்தமையால், புதிய அரசர் எவ்வாறு நடந்துகொள்வாரோ என்ற சந்தேகமும் மக்களை வெகுவாகக் கலங்கச்செய்தன. இக்காலத்தில் 90ம் சங்கீதம் ஆலய ஆராதனைகளிலும், மற்றும் வழிபாடுகளிலும் அதிகமாக வாசிக்கப்பட்டது. அக்காலத்தில் பாடல்கள் பல எழுதிக்கொண்டிருந்த ஐசக் வாட்ஸ் (Isaac Watts) என்னும் சுய ஆளுகைச் சபைப் போதகர், இச்சங்கீதத்தை மக்கள் அதிகமாகப் பாடும்படி ஒரு பாடலாக எழுதினார். இப்பாடலே ‘கர்த்தாவே யுகயுகமாய்’ என்னும் பாடலாகும்.

Isaac Watts
இப்பாடலை எழுதிய ஐசக் வாட்ஸ் பண்டிதர்1674ம் ஆண்டு ஊலை மாதம் 14ம் தேதி, இங்கிலாந்தில் சௌதாம்டன் (Southampton) நகரில், தமது பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆசிரியர். இவரது பாட்டனார் புகழ்பெற்ற கப்பற்படைத் தலைவரான பிளேக் (Admiral Blake) என்பவரின் கீழ் பணியாற்றிய ஒரு மாலுமியாவார்.  பாட்டனார் பட்டயத்தால் சாதித்ததை விட வாட்ஸ் தமது பேனாவால் கிறிஸ்தவ உலகிற்கு அரிய காரியங்களை சாதித்துள்ளார்.  அவரது பதினாறாம் வயதில் சுய ஆளுகை சபையை சேர்ந்த ஒரு திருமறைப் பயிற்சி நிலையத்தில் பயின்று, தமது இருபத்து நான்காம் வயதில் லண்டன் மாநகரில் ஒரு சுய ஆளுகை சபையின் குருவாகப் பணியாற்ற ஆரம்பித்தார். ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின், தன் உடல்நிலை குன்றியதால், திருப்பணியை விட்டுத் தமது நண்பர் ஸர் தாமஸ் அபினியுடன் ஆயுள் முழுவதும் தங்கியிருந்தார்.

வாட்ஸ் இருபது வயதாயிருக்கையில் சௌதாம்டன் நகரிலுள்ள ஒரு சிற்றாலயத்தில் ஆராதனைக்குச் சென்றார். அச்சபையில் சங்கீதங்களுடன், பார்ட்டன் போதகர் இயற்றிய சில ஞானப்பாடல்களும் பாடப்பட்டு வந்தன.  இப்பாடல்களில் வாட்ஸ் அதிருப்தியடைந்து, வீட்டுக்கு வந்தவுடன் இதைத் தன் தந்தையிடம் கூறினார். அவர், ‘அப்படியானால் வாலிபனே, இதைவிட மேலான பாடல்களை நீ எழுதலாமே?’ எனக்கூறினார். வாட்ஸ் இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, பாடல்கள் எழுத ஆரம்பித்தார்.  அவர் எழுதிய பாடல்களை, “Hymns and Spiritual Songs’ என்னும் பெயருடன் வெளியிட்டார். அவர் நானூற்று ஐம்பத்து நான்கு பாடல்கள் எழுதியுள்ளார். அப்பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பவை:

·         என் அருள் நாதா இயேசுவே – பாமாலை 103
·         வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் – பாமாலை 168
·         பகலோன் கதிர் போலுமே – பாமாலை 212

William Croft
1719ல் எழுதப்பட்ட, ‘கர்த்தாவே யுகயுகமாய்’ என்னும் பாடல், ‘கிறிஸ்தவ சபையின் தேசிய கீதம்’ எனப்போற்றப்படுகிறது. இங்கிலாந்தில் எல்லா தேசிய நிகழ்ச்சிகளிலும், இது பாடப்படுகிறது. மேலும், யுத்த காலங்களிலும், மக்கள் மனக்கலக்கம் அடைந்து தவிக்கும்போதும், ஆண்டு இறுதி ஆராதனைகளிலும் இது தவறாமல் பாடப்படுகிறது.  இப்பாடலுக்கான ராகத்தை வில்லியம் க்ராஃப்ட் (William Croft) என்பவர் அமைத்துள்ளார்.

வாட்ஸ் பண்டிதர் ‘கிறிஸ்தவப் பாடல்களின் பிதா’ என அழைக்கப்படுகிறார். அவர் 1748ம் ஆண்டு, நவம்பர் மாதம் 25ம் தேதி, தமது 75ம் வயதில் காலமானார். அவரது ஞாபகார்த்தமாக, லண்டன் மாநகரிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஆபி என்னும் தேசியப் பேராலயத்தில் ஒரு ஞாபகச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

Descant

Descant with Soprano

Unison with Descant


Sheet music (with Descant)







































******


1.            கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்,
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.

2.    உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.

3.    பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.

4.    ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே,
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே.

5.    சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.

6.    கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்.

O God, our help in Ages past

Post Comment