Showing posts with label மோட்சம். Show all posts
Showing posts with label மோட்சம். Show all posts

Wednesday, February 4, 2015

பாமாலை 407 - விண் வாசஸ்தலமாம் (The Blessed Home)

பாமாலை 407 - விண் வாசஸ்தலமாம் 
There is a Blessed Home
Tune : The Blessed Home

 SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1.    விண் வாசஸ்தலமாம்
பேரின்ப வீடுண்டே;
கிலேசம் பாடெல்லாம்
இல்லாமல் போகுமே
விஸ்வாசம் காட்சி ஆம்
நம்பிக்கை சித்திக்கும்
மா ஜோதியால் எல்லாம்
என்றும் பிரகாசிக்கும்.

2.    தூதர் ஆராதிக்கும்
மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம்
அங்கே ஒலித்திடும்
சந்தோஷக் கீர்த்தனம்
தெய்வாசனம் முன்னே
பல்லாயிரம் பக்தர்
திரியேக நாதரை
வணங்கிப் போற்றுவர்

3.    தெய்வாட்டுக்குட்டியின்
கை கால், விலாவிலே
ஐங்காயம் நோக்கிடின்
ஒப்பற்ற இன்பமே!
சீர் வெற்றி ஈந்ததால்
அன்போடு சேவிப்போம்!
பேரருள் பெற்றதால்
என்றைக்கும் போற்றுவோம்

4.    துன்புற்ற பக்தரே
விண் வீட்டை நாடுங்கள்
தொய்யாமல் நித்தமே
முன் சென்று ஏகுங்கள்
இத்துன்பம் மாறுமே
மேலோக நாதனார்
நல் வார்த்தை சொல்லியே
பேரின்பம் ஈகுவார்.

Post Comment

பாமாலை 406 - மின்னும் வெள்ளங்கி பூண்டு

பாமாலை 406 – மின்னும் வெள்ளங்கி பூண்டு
(Ten thousand times ten thousand)

’அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது’ வெளி 5 : 11

புதிய எருசலேமில் ஆட்டுக்குட்டியானவருடைய சிங்காசனத்தைச் சூழ்ந்து, ஆயிரக்கணக்கான தெய்வதூதரும், பரிசுத்தவான்களும் ஓயாமல் பாடிக்கொண்டிருப்பதாக வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டிருக்கிறது (வெளி 5).  இக்காட்சியை மனக்கண்களினால் கண்ட மேல்நாட்டு சங்கீத நிபுணர்கள் அதைக்குறித்து மிகச்சிறந்த பாடல்கள் எழுதியுள்ளார்கள்.  உலகப்புகழ்பெற்ற, ‘Hallelujah Chorus’ என்னும் பாடலை ஜியார்ஜ் ப்ரெட்ரிக் ஹான்டல் என்னும் சங்கீதநிபுணர் எழுதும்போது ‘மோட்சமண்டலம்’ என் கண்முன்னால் திறந்திருப்பதையும், சகல மகிமையுடன் மகத்துவமுள்ள தேவன் சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும் காண்பதாக எனக்குத் தோன்றியது’ எனக்கூறியுள்ளார்.  ஹான்டல் எழுதிய இப்பாடல், சிங்காசனத்தில் ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாக கிறிஸ்து வீற்றிருக்கும்போது தெய்வதூதர் சூழ நின்று பாடிய பாடலாக எழுதப்பட்டது.

Rev. Henry Alford
ஆங்கிலச்சபை ஆலயங்களில், ஆராதனையின் ஆரம்பத்தில் பாடகர் வெண்ணுடை தரித்து, வாசலிலிருந்து பாடிக்கொண்டு பவனியாக பீடத்தண்டையிலிருக்கும் பாடகர் இருப்பிடத்துக்கு செல்லுவது வழக்கம்.  ஆங்கிலத்திருச்சபையின் தலைமையிடமாகக் கருதப்படுவது, இங்கிலாந்தில் உள்ள கன்டர்பரி நகரம் (City of Canterbury).  இங்குள்ள பேராலயம் (Cathedral) மிகவும் அழகு வாய்ந்தது.  இவ்வாலயத்தில் 1867ம் ஆண்டு, ஹென்றி ஆல்ஃபொர்ட் (Rev. Henry Alford) என்பவர் பிரதம குருவாகப் பணியாற்றினார்.   ஓர் ஓய்வுநாள் காலை ஆராதனை சமயத்தில், சபையார் எழுந்து நிற்க, பாடகர்களும், குருவானவர்களும் பாடிக்கொண்டு பவனியாக செல்லும்போது, பவனியின் பின்னணியில் சென்ற ஆல்ஃப்ரெட் போதகர், அவ்வழகிய பேராலயத்தினுள் வெண்ணுடை தரித்துப் பாடகர் பவனி செல்வதைக் கண்டு பரவசமடைந்து, மோட்ச மண்டலத்தில் ஆட்டுக்குட்டியானவரின் சிங்காசனத்தைச் சூழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் தெய்வதூதர் பாடகர் குழுவை மனக்கண்களில் கண்டார்.  ஆராதனைக்குப்பின், வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறியபடி, ஆயிரக்கணக்கான தெய்வதூதர் சிங்காசனத்தை சூழ்ந்து பாடிக்கொண்டிருப்பதை ஆதாரமாகக்கொண்டு ஒரு பவனி கீதம் (Processional Hymn) எழுத எண்ணங்கொண்டார். 
இதன் விளைவாக கிறிஸ்தவ உலகம் பெற்றது ‘மின்னும் வெள்ளங்கி பூண்டு மீட்புற்ற கூட்டத்தார்’ என்னும் மோட்ச மகிமையைக் குறித்த பாடல்.  இதை அவர் ஒரு பவனிகீதமாகவே எழுதினார்.  இப்பாடலுக்கு, ஜான் பாக்கஸ் டைக்ஸ் (John Bacchus Dykes) என்னும் சங்கீத நிபுணர் ஓர் அழகிய ராகத்தை அமைத்து அதற்கு, ‘Alford’ எனப்பெயரிட்டார்.  இதுவே நாம் இப்பாடலுக்கு உபயோகிக்கும் ராகம்.  இப்பாடல் முதன்முதலாகக் கன்டர்பரி பேராலயத்தில்தான் பாடப்பட்டது.

இப்பாடலை எழுதிய ஹென்றி ஆல்ஃபொர்ட் என்பவர் 1810ம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஏழாம் தேதி, இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் பிறந்தார்.  ஆரம்பக்கல்வி முடிந்தவுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், திரித்துவக்கல்லூரியில் திறமையுடன் பயின்று, உயர்பட்டங்கள் பெற்றார்.  ஆங்கிலத்திருச்சபையில் பல இடங்களில் திருப்பணியாற்றியபின், 1857 முதல் 1871 வரை கன்டர்பரி பேராலயத்தின் பிரதமகுரு (Dean) ஆகப் பணியாற்றினார்.  இச்சமயத்தில்தான் அவர், ‘மின்னும் வெள்ளங்கி பூண்டு’ முதலிய பல பாடல்கள் எழுதினார்.  மேலும், ஐம்பது கிறிஸ்தவ நூல்களும், கிரேக்கமொழியில் புதிய ஏற்பாட்டைக்குறித்த நான்கு நூல்களும் எழுதியுள்ளார்.  சிறந்த கவித்திறனும், சங்கீதத்திறனும் ஓவியத்திறனும் பெற்றவர்.  திருமறையின் ஆழ்ந்த கருத்துகளை நன்றாகப் புரிந்துகொள்ளுவதற்கான பல விளக்க நூல்களும் எழுதினார்.  அவரது கடுமையான உழைப்பின் விளைவாக, 1870ல் அவர் உடல்நிலை மிகக்குன்றி, 1871ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12ம் தேதி காலமானார்.

அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ‘நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை’ (பாமாலை 180)


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    மின்னும் வெள்ளங்கி பூண்டு
மீட்புற்ற கூட்டத்தார்
பொன்னகர் செல்லும் பாதையில்
பல் கோடியாய்ச் செல்வார்
வெம் பாவம் சாவை இவர்
வென்றார் போர் ஓய்ந்ததே
செம்பொன்னாம் வாசல் திறவும்
செல்வார் இவர் உள்ளே.

2.    முழங்கும் அல்லேலூயா
மண் விண்ணை நிரப்பும்
விளங்கும் கோடி வீணைகள்
விஜயம் சாற்றிடும்,
சராசரங்கள் யாவும்
சுகிக்கும் நாள் இதே;
இராவின் துன்பம் நோவுக்கு
ஈடாம் பேரின்பமே.

3.    அன்பான நண்பர் கூடி
ஆனந்தம் அடைவார்;
மாண்பான நேசம் நீங்காதே
ஒன்றாக வாழுவார்;
கண்ணீர் வடித்த கண்கள்
களித்திலங்கிடும்
மண்ணில் பிரிந்த உயிர்கள்
மீளவும் சேர்ந்திடும்

4.    சிறந்த உந்தன் மீட்பை
சமீபமாக்குமே
தெரிந்து கொள்ளப்பட்டவர்
தொகை நிரப்புமே;
உரைத்த உந்தன் காட்சி
உம்பரில் காட்டுவீர்
இறைவா, ஏங்கும் தாசர்க்கு
இறங்கி வருவீர்.
Ten Thousand Times Ten Thousand

Post Comment

Sunday, February 1, 2015

பாமாலை 405 - மா சாலேம் சொர்ண (Ewing)

பாமாலை 405 - மா சாலேம் சொர்ண 
Jerusalem the Golden
Tune : Ewing

 SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. மா சாலேம் சொர்ண நாடு
பால் தேனாய் ஓடிடும்
உன் மேல் தவித்தே ஏங்கி
என் உள்ளம் வாடிடும்
ஆ என்ன என்ன மாட்சி
பூரிப்பும் ஆங்குண்டே
யார்தானும் கூற வல்லோர்
உன் திவ்விய ஜோதியே?

2. சீயோன் நகரில் எங்கும்
பூரிப்பின் கீதமாம்
நல் ரத்தச் சாட்சி சேனை
தூதரின் ஸ்தானமாம்
கர்த்தராம் கிறிஸ்து ஆங்கு
மா ஜோதி வீசுவார்
விண் மாட்சி மேய்ச்சல் காட்டி
பக்தரைப் போஷிப்பார்.

3. கவலை தீர்ந்து காண்போம்
தாவீதின் ஆசனம்
விருந்தர் ஆர்ப்பரிப்பார்
மா வெற்றி கீர்த்தனம்
தம் மீட்பரைப் பின்சென்று
போராடி வென்றனர்
என்றென்றும் மாட்சியோடு
வெண்ணங்கி பூண்டனர்.

4. ஆ, பாக்கிய திவ்விய நாடே
என்றைக்கும் சேருவேன்!
ஆ, பாக்கிய திவ்விய நாடே
உன் அருள் பெறுவேன்
ஆ, சாம்பல் மண்ணாம் மாந்தர்
கர்த்தாவைப் பெறுவார்
ஆ, இன்றும் என்றும் மாந்தர்
கர்த்தாவின் அடியார்!
************************************************
Jerusalem the Golden
பாமாலை 405 - மா சாலேம் சொர்ண
**************************************************************

Post Comment

Friday, January 30, 2015

பாமாலை 404 - பொன்னகர் இன்பத்தை

பாமாலை 404 - பொன்னகர் இன்பத்தை
When all my labours and trials are o'er

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்
துன்பமும் துக்கமும் மாறியே போம்
நன்மைச் சொரூபியை தரிசிப்போம்
நீடுழி காலம் பேரின்பமுண்டாம்.

     பேரின்பமாம், பூரிப்புண்டாம்
     பேரின்பமாம், பூரிப்புண்டாம்
     மேலுலகில் அவர் சந்நிதியில்
     மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்

2.    மாட்சிமையான காருணியத்தால்
மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்
சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.

3.    அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்,
இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்
என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்
நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.

Post Comment

Sunday, January 25, 2015

பாமாலை 403 - பரமண்டலத்திலுள்ள

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    பரமண்டலத்திலுள்ள
மகிமை என் ரம்மியம்
இயேசு என்கிற அன்புள்ள
ரட்சகர் என் பொக்கிஷம்
பரலோக நன்மைகள்
என்னுடைய ஆறுதல்.

2.    வேறே பேர் மண்ணாஸ்தியாலே
தங்களைத் தேற்றட்டுமேன்
நான் என் நெஞ்சை இயேசுவாலே
தேற்றி விண்ணை நோக்குவேன்
மண் அழியும், இயேசுவோ
என்றும் நிற்கிறார் அல்லோ

3.    எனக்கவரில் மிகுந்த
ஆஸ்தி அகப்பட்டது
விக்கினங்களால் சூழுண்ட
லோக ஆஸ்தி ஏதுக்கு?
இயேசுதான் என் ஆத்துமம்
தேடிய நற்பொக்கிஷம்

4.    லோக இன்பத்தை ருசிக்கும்
நூறு வருஷத்திலும்,
இயேசுவோடு சஞ்சரிக்கும்
ஒரு நாளே இங்கேயும்
மேன்மையே; அங்கவரை
சேர்ந்தாலோ வாழ்வெத்தனை!

5.    எனக்கு மோட்சானந்தத்தில்
பங்குண்டாக, இயேசுவே,
நீர்தான் இவ்வனாந்தரத்தில்
எனக்குத் துணையாமே
ஆ, நான் இன்றும் என்றைக்கும்
உம்முடன் இருக்கவும்.

Post Comment

Thursday, January 22, 2015

பாமாலை 402 - ஓய்வுநாள் விண்ணில் (O quanta qualia)

பாமாலை 402 - ஓய்வுநாள் விண்ணில் 
O what the Joy and the glory must be
(O quanta qualia)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்
பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?
வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்
ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்.

2.    ராஜ சிங்காசன மாட்சிமையும்
ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்
இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்
அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்?

3.    மெய் சமாதானத் தரிசனமாம்
அக்கரை எருசலேம் என்போம் நாம்
ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே
வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே.

4.    சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்
தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?
பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்
பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்.

5.    ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்,
விடிதல் முடிதல் இல்லாததாம்
தூதரும் பக்தரும் ஓயாமலே
ஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே

6.    பாபிலோன் போன்ற இப்பாரின் சிறை
மீண்டு, நம் தேசம் போய்ச்சேரும்வரை,
எருசலேமை நாம் இப்பொழுதும்
வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்.

7.    தந்தையினாலும், குமாரனிலும்
ஆவியின் மூலமும் யாவும் ஆகும்;
திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்
சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்.
 

Post Comment

Sunday, January 18, 2015

பாமாலை 401 - என்றும் கர்த்தாவுடன் (Nearer Home)

பாமாலை 401 - என்றும் கர்த்தாவுடன் 
Forever with the Lord
Tune : Nearer Home

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.    என்றும் கர்த்தாவுடன்
நான் கூடி வாழுவேன்
இவ்வாக்கினால் சாகா வரன்
செத்தாலும் ஜீவிப்பேன்
பற்றாசையால் உம்மை
விட்டே நான் அலைந்தேன்
நாடோறும் வழி நடந்தே
விண் வீட்டைக் கிட்டுவேன்

2.    அதோ சமீபமே
பிதாவின் வீடுதான்
என் ஞானக்கண்கள் காணுமே
மின்னும் பொன்னகர் வான்
தூயோர் சுதந்தரம்
நான் நேசிக்கும் நாடே
என் ஆவி மேலெருசலேம்
சேரத் தவிக்குமே

3.    கர்த்தாவுடன் என்றும்
பிதாவே இங்கும் நீர்
இவ்வாக்கை நிறைவேற்றவும்
சித்தம் கொண்டருள்வீர்
என் பக்கம் தங்கிடின்
தப்பாமலே நிற்பேன்
கைதூக்கி என்னைத் தாங்கிடின்
போராடி வெல்லுவேன்

4.    என் ஜீவன் போகும் நாள்
கிழியும் இத்திரை
சாவை அழிப்பேன் சாவினால்
சாகா உயிர் பெற்றே
என் நாதரைக் காண்பேன்
நின்று களிப்புடன்
சிம்மாசனத்தின் முன் சொல்வேன்
”என்றும் கர்த்தாவுடன்”.






Post Comment

பாமாலை 400 - எருசலேம் என் ஆலயம்

பாமாலை 400 – எருசலேம் என் ஆலயம்
(Jerusalem my happy home)

ஒரு புதிய வருடத்தைத் துவக்கும்போது நம் ஆலயங்களில் கண்டிப்பாக ‘இன்னோர் ஆண்டு முற்றுமாய்’ பாமாலை இடம்பெறும்.  அதன் மூன்றாவது சரணத்தில்,

“யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே”.

என்று பாடியே நாம் வருடத்தைத் துவக்குகிறோம்.  நித்திய வாழ்வின் நம்பிக்கை மனதில் வேரூன்றப்பட்டு இருந்ததன் காரணமாகவே நம் முற்பிதாக்களால் மரணத்தைப் பற்றிய எந்த அச்சமுமின்றி, ஒரு வருடத்துவக்கத்திற்கான பாடலிலும் கூட, இத்தனை அழகிய வரிகளை உறுதியுடனும் மகிழ்வுடனும் எழுதமுடிந்தது.

‘திருமணம்’ எனும் பந்தம் இவ்வுலகவாழ்வில் ஒரு மகிழ்விற்குரிய, ‘மங்கல’ நிகழ்வாகவே கருதப்படுகிறது.  கிறிஸ்துவைப் பற்றி அறிந்திராத நம் பிற சமய சகோதரரின் திருமணங்களில் யாரேனும் ‘தும்மல்’ போட்டுவிட்டால் கூட அது ஒரு ‘அமங்கல’க் குறியீடாகவே கருதப்பட்டு வருகிறது. இப்படியிருக்க, நம் கிறிஸ்தவ திருமண ஆராதனை ஒழுங்கில், மணமக்கள் தங்கள் வாக்குறுதிகளை ஆண்டவர் சந்நிதியில் பரிமாறிக்கொள்ளும்போது, ‘வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், ‘மரணம் நம்மைப் பிரிக்கும்வரை’ என்று கூறித் தம் இல்லற வாழ்வைத் துவக்குகின்றனர்.  திருமணம் போன்ற ஒரு ‘மங்கல’ நிகழ்வின் ஆராதனை ஒழுங்கில், மணமக்கள் தங்கள் இல்லற வாழ்க்கையைத் துவக்கும் தருணத்தில் ‘மரணம் நம்மைப் பிரிக்கும்வரை’ என்று வாக்குறுதி அமைக்கப்பட்டிருப்பது, கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு ’மரணம்’ என்ற சொல் எவ்வித அச்சத்தையும் தருவதில்லை என்பதை எத்தனை அழகாய்க் காட்டுகிறது!

மரணத்தை ஜெயமாக விழுங்கிய ஜீவனுள்ள தேவனைத் தொழுதுகொள்ளும் நாம், ‘மரணம்’ என்ற சொல்லைக்கண்டு அஞ்சுவதோ, ‘பரம வாழ்வின்’ மகத்துவத்தை தியானிக்கவோ, நித்திய வாழ்வின் உறுதியைப் பாடலாகப் பாடத் தயங்குவதோ எத்தனை பெரிய அறியாமை!

நம் திருச்சபையின் திடப்படுத்தல் ஆராதனை முறைமையிலும் பேராயர் திடப்படுத்தல் பெறுபவரின் தலையில் கைவைத்து ‘கர்த்தாவே, இந்த உம்முடைய பிள்ளை என்றைக்கும் உம்முடையவனா(ளா)ய் இருக்கவும், உமது நித்திய ராஜ்ஜியத்தில் சேருமளவும் நாள்தோறும் உம்முடைய பரிசுத்த ஆவியில் வளர்ந்தேறவும், உமது பரம கிருபைகளால் இவனை(ளை)க் காத்தருளும்” என்றே ஜெபித்து திடப்படுத்தல் செய்து வைக்கிறார்.

நம் ஞானஸ்நான ஆராதனை முறையிலும், ‘… .. பாவத்துக்கு மரித்து, நீதிக்குப் பிழைத்து, கிறிஸ்துவின் மரணத்துக்குள் அவருடனேகூட அடக்கப்பண்ணப்பட்டிருக்கிற இவன், தன்னிலுள்ள பழைய மனுஷனைச் சிலுவையில் அறைந்து, பாவசரீரத்தை முற்றிலும் அழிக்கவும், இவன் உம்முடைய குமாரனின் மரணத்திற்குப் பங்குள்ளவனாய் இருக்கிறதுபோல, அவர் உயிர்த்தெழுதலுக்கும் பங்குள்ளவனாய் இருக்கவும், கடைசியிலே மற்றுமுள்ள உம்முடைய பரிசுத்த சபையார்களோடுகூட உமது நித்திய ராஜ்ஜியத்துக்குச் சுதந்தரவாளியாகவும் தேவரீர் கிருபை செய்யவேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டுத் தாழ்மையாய் வேண்டிக்கொள்ளுகிறோம்” என்ற அர்த்தமுள்ள ஜெபம் கொடுக்கப்பட்டுள்ளது.

‘..மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகுமென்று காத்திருக்கிறேன்’ என்ற வரிகளை உச்சரிக்க ஒவ்வொருமுறை நாம் விசுவாசப்பிரமாணம் சொல்லும்போதும் பயப்படுகிறோமா?

இப்படி ‘மரணம்’ என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் / நிகழ்விலும் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், ‘நித்திய வாழ்வின்’ நிச்சயத்தை உணர்த்தும் அநேக பாமாலைகள்/பாடல்கள், தமிழ் கிறிஸ்தவர்களால் தொடர்ந்து மறுதலிக்கப்படுவது / புறக்கணிக்கப்படுவது, மோட்சத்தைக் குறித்த அப்பாடல்கள் ‘மரணப் பாடல்கள்’ என்று வகைப்படுத்தப்படுவது எத்தனை வேதனைக்குரிய காரியம்?

‘Some Glad Morning’ என்ற Jim Reeves பாடிய Cassette / CD ஒலித்திராத நம் கிறிஸ்தவ இல்லங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். “Some glad morning when this life is o’er, I’ll fly away’ என்று எவ்வளவு மகிழ்வுடன் அவர் பாடுகிறார்! அவ்வளவு உற்சாகத்துடன் அவர் அப்படிப் பாட, பரம வாழ்வைக் குறித்த நிச்சயம் எத்தனை ஆழமாய் அவர் மனதில் பதிந்திருக்க வேண்டும்!

ஆண்டவரின் இரண்டாம் வருகையை சந்திக்க எந்நேரத்திலும், எந்நிலையிலும் ஆயத்தமாய் இருக்கும் நிலையை நம்மால் அடைய முடிந்தால்,  ‘மோட்சத்தை / நித்திய வாழ்வைக் குறித்த பாடல்களைப் பாட பயமோ தயக்கமோ எப்படி ஏற்படும்?

இப்படி புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு அழகான பாடலே ‘பாமாலை 400 – எருசலேம் என் ஆலயம்’. அப்பாடலினால் தொடப்பட்ட ஒரு வாலிபனைக் குறித்து சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. ‘131 பாடல் பிறந்த கதை’ புத்தகத்திலிருந்து அது அப்படியே கீழே.

”நியூ இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தாய் தன் ஒரே பாலகனைத் தூங்கவைக்கும் தாலாட்டுப் பாடலாக இதைப் பாடி வந்தாள். வேதனைகளும் பாடுகளும் நிறைந்த அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாள் முடிவிலும் இப்பாடலைப் பாடி, மன அமைதியையும் இளைப்பாறுதலையும் பெறுவது அவளுடைய வழக்கமாயிருந்தது.  அவளுடைய மகன் பெரியவனாகி, தினமும் அந்தி சாயும் நேரத்தில் மாடுகளை ஓட்டிகொண்டு வீடு திரும்பும்போது, வீட்டிலிருந்து அவன் தாய் பாடும் இப்பாடலின் சத்தம் அவனை வரவேற்கும்.

நாளடைவில் அவன் தாய் வியாதிப்பட்டு பெலவீனமடைந்தபோதும் இப்பாடலை மெல்லிய குரலில் அவள் பாட, அவன் கேட்பதுண்டு.  சில நாட்களுக்குப் பின் அவன் தாய் மரித்தாள். தாயின் பாடல் ஒலியும் மறைந்துபோனது.  அன்பற்று கடுமையாய் நடத்திய தன் தகப்பனின் செயலைப் பொறுக்க முடியாமல், அவன் தன் உடைமைகளையும் தன் தாயின் பொக்கிஷமான வேத புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு பட்டணத்திற்கு ஓடிப்போனான்.  அங்கு தீய நண்பர்களோடு பழகி, தன் வாழ்க்கையையும் உடலையும் கெடுத்து வியாதிப்பட்டான்.

ஒரு பொது விடுதியில் மரண அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த அவனைச் சந்திக்க, மிஷினரி ஒருவர் வந்தார். ஆண்டவரின் அன்பைப்பற்றி அவர் பலமுறை எடுத்துக்கூறியும், அவன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். இம்முயற்சியில் தோல்வியுற்று மனமுடைந்த மிஷினரி, மரிக்கும் அந்த வாலிபனை விட்டு சற்றே விலகி, ஜன்னலருகே சென்று, இப்பாடலை சோர்வுடன் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தார். “இது என் தாய் விரும்பிப் பாடும் பாட்டல்லவா?” என்று எண்ணிய அவன் மனக்கண்கள் முன், தாயின் அன்பும், அவளது ஜெபங்களும், பக்தி நிறைந்த வாழ்க்கையும் தோன்றின.  ’என் தந்தையின் கொடூர நடத்தையால் நான் வீட்டைவிட்டு வெளியேறினபோதெல்லாம் என்னை அன்போடு தடுத்தது, என் தாயின் இந்தப் பாடல்தானே? எத்தனை ஆண்டுகள் இதை மறந்துபோனேன்?” என்று கதறினான். 

அந்நிலையில் தாயின் அன்புக்கும் மேலான இயேசுவின் அன்பை மிஷினரி மீண்டும் அவனுக்கு எடுத்துரைத்தார்.  அவன் அந்நேரமே இயேசுவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவருடைய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்று மரித்தான். அமைதியாக விளங்கிய அவன் முகத்தை நோக்கியவண்ணம் மிஷினரி கூறினார்.. “அந்தத் தாயின் பாடல்! தூர இடங்களில் அலைந்து திரிந்த அவளது மகனைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள, ஆண்டவர் இப்பாடலையல்லவா உபயோகித்தார்.”

இந்த அருமையான பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை.  “F.B.P” என்ற கையெழுத்தை மட்டும் விட்டுச்சென்றுள்ள இப்பாடலை எழுதியவர் 16 அல்லது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த கத்தோலிக்கப் பாதிரியாராக இருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது.

பரலோகத்தைப் பற்றி, நானூறு வார்த்தைகளடங்கிய கட்டுரையாக இது முதலில் உருவெடுத்தது.  வெளிப்படுத்தின விசேஷம் 21ம் அதிகாரத்தை மையமாகக் கொண்டு, ஆசிரியரின் உணர்வு மிக்க படைப்பாக இப்பாடல் உருவானது. முதலில் அநேக எழுத்துப் பிழைகளுடன் 26 சரணங்களைக் கொண்டிருந்த இப்பாடலில் 7 சரணங்களே இப்போது உபயோகத்திலுள்ளன.  இப்பாடலின் மூலம் ஆவிக்குரிய ஆசீர்வாதம் பெற்றவர் பலர்.


இந்நாட்களில் மரித்தோர் வீடுகளிலும் மற்றும் அடக்க ஆராதனைகளிலும் மட்டுமே இப்பாடல் பாடப்படுகிறது. தன் மரணத்தையோ, ஆண்டவரின் இரண்டாம் வருகையையோ சந்திக்க ஆயத்தமில்லாத, பல கிறிஸ்தவ மக்களுக்கு மரண பயத்தையும், திகிலையும் ஊட்டும் சாவுப்பாடலாக இது மாறியிருப்பது வேதனைக்குரிய காரியம்.  ஆனால் பரலோகத்தை அழகாகச் சித்தரிக்கும் இப்பாடல் இரட்சிப்பின் அனுபவம் பெற்றவர்களுக்கு, நித்திய வாழ்வின் நம்பிக்கையூட்டுவதாக விளங்குகிறது.

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano










































1.    எருசலேம் என் ஆலயம்,
ஆசித்த வீடதே
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடையவேண்டுமே.

2.    பொற்றளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்?

3.    எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்.

4.    நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே.

5.    எருசலேம் என் ஆலயம்,
நான் உன்னில் வாழுவேன்
என் ஆவல், என் அடைக்கலம்,
எப்போது சேருவேன்?

Post Comment

பாமாலை 399 - உன்னத சாலேமே (Christ Church)

பாமாலை 399 - உன்னத சாலேமே 
Jerusalem on High
Tune : Christ Church

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    உன்னத சாலேமே
என் கீதம் நகரம்
நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்.

     விண் ஸ்தானமே!
கர்த்தா, எந்நாள்
உம் திருத் தாள்
     சேவிப்பேனே!

2.    பூவில் தகாரென்றே
தீர்ப்புற்ற நாதனார்
தம் தூதரால் அங்கே
சீர் வாழ்த்தல் பெறுவார்.

3.    அங்கே பிரயாணத்தை
பிதாக்கள் முடிப்பார்
வாஞ்சித்த பிரபுவை
ஞானியர் காணுவார்.

4.    தூய அப்போஸ்தலர்
சந்தோஷமாய்க் காண்பேன்
பொன் வீணை வாசிப்பவர்
இசை பாடக் கேட்பேன்.

5.    சீர் ரத்தச் சாக்ஷிகள்
வெள்ளங்கி பூணுவார்
தங்கள் தழும்புகள்
கொண்டு மாண்படைவார்.

6.    கேதேர் கூடாரத்தில்
இங்கே வசிக்கிறேன்;
நல் மோட்ச பாதையில்
உம்மைப் பின்பற்றுவேன்.

Post Comment