Showing posts with label பாலியர் பாக்கள். Show all posts
Showing posts with label பாலியர் பாக்கள். Show all posts

Friday, October 14, 2022

பாமாலை 245 - பாலரே ஓர் நேசர் உண்டு (Sweet Home)

பாமாலை 245 - பாலரே ஓர் நேசர் உண்டு 
There's a friend for little Children
Tune : Sweet Home


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            பாலரே ஓர் நேசர் உண்டு
விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு
ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும்
நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம்
மாறாமல் நிலைக்கும்.

2.    பாலரே, ஓர் வீடு உண்டு
விண் மோட்ச நாட்டிலே
பேர் வாழ்வுண்டாக இயேசு
அங்கரசாள்வாரே;
ஒப்பற்ற அந்த வீட்டை
நாம் நாட வேண்டாமோ?
அங்குள்ளோர் இன்ப வாழ்வில்
ஓர் தாழ்ச்சிதானுண்டோ?

3.    பாலரே ஓர் கிரீடம் உண்டு
விண் மோட்ச வீட்டில் நீர்
நல் மீட்பரின் பேரன்பால்
பொற் கிரீடம் அணிவீர்;
இப்போது மீட்பைப் பெற்று
மா நேசர் பின்சென்றார்,
இவ்வாடா ஜீவ கிரீடம்
அப்போது சூடுவார்.

4.    பாலரே, ஓர் கீதம் உண்டு
விண் மோட்ச வீட்டிலே;
மா ஜெய கீதம் பாட
ஓர் வீணையும் உண்டே;
அந்நாட்டின் இன்பம் எல்லாம்
நம் மீட்பர்க்குரிமை,
நீர் அவரிடம் வாரும்,
ஈவார் அவ்வின்பத்தை.

Post Comment

Friday, May 22, 2020

பாமாலை 240 - என்னிடத்தில் பாலர் யாரும் (Alleluya)

பாமாலை 240 – என்னிடத்தில் பாலர் யாரும்
Tune: Alleluya

Meter: 8, 7, 8, 7, D

Samuel Sebastian Wesley
இப்பாடலை எழுதியவர் யார் என்ற தகவல் இல்லை.  பாடலுக்கான Alleluya எனும் இந்த ராகத்தை இயற்றியவர் சாமுவேல் வெஸ்லி (Samuel Wesley). இவரது காலை 1810-1876.  இங்கிலாந்தில் பிறந்த இவர் Chapel Royal பாடகர் குழுவில் இருந்து பின்னர் ஆர்கன் இசைப்பதில் தேர்ச்சி பெற்று இசைக்கத் துவங்கினார்.  சாமுவேல் தனது தந்தை Charles Wesley அவர்களிடமிருந்து ஆர்கன் இசைக்கப் பயின்று அவரிடமிருந்தே பாடல்கள் இயற்றவும் கற்றுக்கொண்டார்.  இங்கிலாந்தின் பல்வேறு தேவாலயங்களில் ஆரகினிஸ்டாகப் பணிபுரிந்த சாமுவேல், ஆலயப் பாடகர் குழுவின் பாடும் திறனையும், பாடல்களின் தரத்தையும் மேம்படுத்தும் ஊழியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அதைக் குறித்த தனது ஆய்வு முடிவுகளை ”A Few Words on Cathedral Music and the Music System of the Church” என்ற புத்தகமாக வெளியிட்டார். இது தவிர இன்னும் பல்வேறு பாடல் தொகுப்புகளில் ஈடுபட்ட சாமுவேல் தன் வாழ்நாளில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. “என்னிடத்தில் பாலர் யாரும்
வரவேண்டும்” என்கிறார்;
“இப்பேர்ப்பட்டவர் எல்லாரும்
வான ராஜ்யம் அடைவார்”,
என்று சொல்லி, நேசக் கையில்
இயேசு ஏந்தி அணைத்தார்;
பாலர் அவரை உள்ளத்தில்
அன்பாய் எண்ணிப் போற்றுவார்

2. “தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா! மா ஸ்தோத்திரம்”!
என்று பாடி, சீயோனுக்கு
நேரே சென்ற சமயம்
வாழ்த்தல் செய்தவண்ணம் நாமும்
வாழ்த்திப் பாடி, பக்தியாய்
இயேசுவை வணங்கி, என்றும்
ஸ்தோத்தரிப்போம் ஏகமாய்.

3. பாலனாய்ப் பிறந்த மீட்பர்
ராஜாவாக வருவார்
கூட வரும் தெய்வ தூதர்
மேகமீது தோன்றுவார்;
நல்லோர், தீயோர் இயேசுவாலே
தீர்ப்படையும் நேரத்தில்
பாலர் போன்ற குணத்தாரே
வாழ்வடைவார் மோட்சத்தில்.

Post Comment

Saturday, January 21, 2017

பாமாலை 244 - பார் முன்னணை (Away in a Manger - Cradle Song)

பாமாலை 244 – பார் முன்னணை ஒன்றில்
(Away in a Manger)

அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2 : 7

William James Kirkpatrick
(Thanks : cyberhymnal) 
இந்தப் பாடல் அமெரிக்க தேசத்தில் உருவானதாகக் கூறப்படுகிறது.  பாடலை இயற்றியவர் யார் என்ற குறிப்புகள் எங்கும் இல்லை. பாடலை இயற்றியவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்று ஒரு சில புத்தகங்களில் குறிப்புகள் உள்ளபோதும், அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பல ஆய்வுகள் இக்கூற்றை மறுக்கின்றன. இப்பாடல் முதன்முதலில் 1885ம் ஆண்டு, வட அமெரிக்காவில் உள்ள Evangelical Lutheran ஆலயத்தின் வெளியீடான Little Children’s Book for Schools and Families என்ற பாடல் புத்தகத்தில் முதல் இரண்டு கவிகளை மாத்திரம் கொண்டு வெளியிடப்பட்டது.  இவ்விரு கவிகளையும் இயற்றியவர் யாரென்ற குறிப்பு அப்புத்தகத்திலும் இல்லை.  இருப்பினும், இப்பாடலின் மூன்றாவது கவியை John Thomas McFarland என்பவர் எழுதியுள்ளதாக பல்வேறு பாடல்புத்தகங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.  இப்பாடல் இரு வேறு ராகங்களில் பாடப்படுகின்றன.  இப்பதிவில் உள்ள ராகத்தை William James Kirkpatrick (1838-1921) என்பவர் மெட்டமைத்தார்.
 Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள் தாம்.

2.            மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவே மாட்டார்;
நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

3.            என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.

Away in a Manger

Post Comment

Sunday, July 31, 2016

பாமாலை 244 - பார் முன்னணை (Mueller)

பாமாலை 244 – பார் முன்னணை ஒன்றில்
(Away in a Manger)

அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2 : 7


James R Murray
இந்தப் பாடல் அமெரிக்க தேசத்தில் உருவானதாகக் கூறப்படுகிறது.  பாடலை இயற்றியவர் யார் என்ற குறிப்புகள் எங்கும் இல்லை. பாடலை இயற்றியவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்று ஒரு சில புத்தகங்களில் குறிப்புகள் உள்ளபோதும், அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பல ஆய்வுகள் இக்கூற்றை மறுக்கின்றன. இப்பாடல் முதன்முதலில் 1885ம் ஆண்டு, வட அமெரிக்காவில் உள்ள Evangelical Lutheran ஆலயத்தின் வெளியீடான Little Children’s Book for Schools and Families என்ற பாடல் புத்தகத்தில் முதல் இரண்டு கவிகளை மாத்திரம் கொண்டு வெளியிடப்பட்டது.  இவ்விரு கவிகளையும் இயற்றியவர் யாரென்ற குறிப்பு அப்புத்தகத்திலும் இல்லை.  இருப்பினும், இப்பாடலின் மூன்றாவது கவியை John Thomas McFarland என்பவர் எழுதியுள்ளதாக பல்வேறு பாடல்புத்தகங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.  இப்பாடல் இரு வேறு ராகங்களில் பாடப்படுகின்றன.  இப்பதிவில் உள்ள ராகத்தை (Tune : Mueller) James R Murray (1841-1905) என்பவர் மெட்டமைத்தார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள் தாம்.

2.            மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவே மாட்டார்;
நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

3.            என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.

Away in a Manger (Tune : Mueller)

Post Comment

Monday, August 18, 2014

பாமாலை 242 - நான் தூதனாக வேண்டும் (Ellacombe)

பாமாலை 242 – நான் தூதனாக வேண்டும்
(I want to be an angel)

“அக்கா.. நானும் ஆண்டவருக்குப் பணி செய்யும் தூதனாக மாறவேண்டும்!” என உற்சாகத்துடன் கூச்சலிட்டாள் ஒரு அழகிய சிறுபெண்.  ஞாயிறு பள்ளியின் வகுப்பு நேரத்தில், தேவதூதர்களைப் பற்றி வேதபாடம் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த ஆசிரியை சிட்னி.பி.கில் (Sidney P. Gill) மகிழ்வுடன் சத்தமிட்ட மாணவியைப் பார்த்துப் புன்னகை செய்தாள். அவள் அமெரிக்காவிலுள்ள ஃபிலடெல்ஃபியாவிலுள்ள டாக்டர் ஜோயல் பார்க்கர் ஆலய ஞாயிறு பள்ளி ஆசிரியையாக உத்தமமாய் ஊழியம் செய்து வந்தாள்.

சில நாட்கள் சென்றபின், தேவதூதனாக மாற விரும்பிய அச்சிறுமி, வியாதிப்பட்டு மரித்துப்போனாள்.  இதைச் சற்றும் எதிர்பாராத சிட்னியின் உள்ளத்தில் அன்று அந்த மாணவி உற்சாகமாய்க் கூறிய வார்த்தைகள், மறக்க முடியாமல் தொனித்துக்கொண்டேஇருந்தன.  அச்சிறுமியின் வாஞ்சை, சிட்னியின் உள்ளத்தில் பாடலாக உருவெடுத்தது.


இப்பாடலைத் தன் ஞாயிறு பள்ளி பிள்ளைகள் பாடுவதற்கென்றே, சிட்னி எழுதினாள்.  ஆனால், நாளடைவில், பெரியவர்களும் கூட விரும்பிப் பாடும் பாடலாக அது மாறியது.  பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பல நாடுகளில் இன்றும் இப்பாடல் பாடப்பட்டு வருகிறது.

நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’ அமைதி நேர ஊழிய வெளியீடு.

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano






































1.    நான் தூதனாக வேண்டும்
விண் தூதரோடேயும்
பொற் கிரீடம் தலை மேலும்
நல் வீணை கையிலும்
நான் வைத்துப் பேரானந்தம்
அடைந்து வாழுவேன்;
என் மீட்பரின் சமுகம்
நான் கண்டு களிப்பேன்.

2.    அப்போது சோர்வதில்லை
கண்ணீரும் சொரியேன்
நோய், துக்கம், பாவம், தொல்லை
பயமும் அறியேன்
மாசற்ற சுத்தத்தோடும்
விண் வீட்டில் தங்குவேன்
துதிக்கும் தூதரோடும்
நான் என்றும் பாடுவேன்.

3.    பிரகாசமுள்ள தூதர்
நான் சாகும் நேரத்தில்
என்னைச் சுமந்து போவார்
என் இயேசுவண்டையில்
நான் பாவியாயிருந்தும்
என் மீட்பர் மன்னித்தார்
எண்ணில்லாச் சிறியோரும்
என்னோடு வாழுவார்.

4.    மேலான தூதரோடும்
நான் தூதன் ஆகுவேன்
பொற் கிரீடம் தலைமேலும்
தரித்து வாழுவேன்
என் மீட்பர்முன் ஆனந்தம்
நான் பெற்று வாழ்வதே
வாக்குக் கெட்டாத இன்பம்
அநந்த பாக்கியமே.

Post Comment

Thursday, May 29, 2014

பாமாலை 245 - பாலரே ஓர் நேசர் (In Memoriam)

பாமாலை 245 - பாலரே ஓர் நேசர் 
There's a friend for Little Children
Tune : In Memoriam


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            பாலரே ஓர் நேசர் உண்டு
விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு
ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும்
நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம்
மாறாமல் நிலைக்கும்.

2.    பாலரே, ஓர் வீடு உண்டு
விண் மோட்ச நாட்டிலே
பேர் வாழ்வுண்டாக இயேசு
அங்கரசாள்வாரே;
ஒப்பற்ற அந்த வீட்டை
நாம் நாட வேண்டாமோ?
அங்குள்ளோர் இன்ப வாழ்வில்
ஓர் தாழ்ச்சிதானுண்டோ?

3.    பாலரே ஓர் கிரீடம் உண்டு
விண் மோட்ச வீட்டில் நீர்
நல் மீட்பரின் பேரன்பால்
பொற் கிரீடம் அணிவீர்;
இப்போது மீட்பைப் பெற்று
மா நேசர் பின்சென்றார்,
இவ்வாடா ஜீவ கிரீடம்
அப்போது சூடுவார்.

4.    பாலரே, ஓர் கீதம் உண்டு
விண் மோட்ச வீட்டிலே;
மா ஜெய கீதம் பாட
ஓர் வீணையும் உண்டே;
அந்நாட்டின் இன்பம் எல்லாம்
நம் மீட்பர்க்குரிமை,
நீர் அவரிடம் வாரும்,
ஈவார் அவ்வின்பத்தை.


Post Comment

Wednesday, May 28, 2014

பாமாலை 238 - இயேசு எந்தன்

பாமாலை 238 – இயேசு எந்தன் நேசரே
(Jesus loves me this I know)


சிறுவர்களை இயேசுவின் அன்பை நோக்கி இழுத்த பாடல்களில் இப்பாடல் மிகவும் சிறப்புப் பெற்றது.  இப்பாடலை அன்னா பார்ட்லெட் வார்னர் (Anna Bartlett Warner) 1860ம் ஆண்டு, தன் 40வது வயதில் எழுதினார்.

Anna Bartlett Warner
அன்னாவின் சகோதரி சூசன் (Susan Warner) ஒரு சிறந்த எழுத்தாளர்.  அந்நாட்களில் மிகவும் புகழ்பெற்ற ‘சொல்லி முத்திரையிடு’ (Say and Seal) என்ற நாவல் புத்தகத்தை அவர் எழுதினார்.  அதின் கதாபாத்திரங்களான லிண்டன், மரணத்துடன் போராடும் சிறுவன் ஜானி பாக்ஸை ஆறுதல்படுத்த இப்பாடலைப் பாடுவதாக சூசன் எழுதி, அப்பாடலை இயற்றும் பொறுப்பைத் தன் சகோதரியிடம் கொடுத்தார்.  இவ்வாறு உருவான இப்பாடல், இன்றும் உலகின் பல்வேறு சிறுவர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக விளங்குகிறது.

கல்வியில் சிறந்த வார்னர் சகோதரிகள் பக்தி நிறைந்த வாழ்க்கை நடத்தி வந்தனர்.  சிறந்த வழக்கறிஞரான இவர்கள் தந்தையின் மரணத்திற்குப்பின், தங்களது இலக்கியப் பணிகளின் மூலம் சமூக சேவையையும் நற்செய்திப்பணியையும் செய்து வந்தனர்.  நியூயார்க்கின் ஹட்சன் நதிக்கரையில் இருந்த இவர்களின் இல்லத்துக்கருகில் அமைக்கப்பட்ட அமெரிக்க படை அதிகாரிகளின் பயிற்சிப்பள்ளியில் படிக்கும் வாலிப வீரர்களுக்குத் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஞாயிறு பள்ளி நடத்தி, அவர்களின் ஆவிக்குரிய தேவைகளை சந்தித்து வந்தார்கள்.

எளிமையான வார்த்தைகளுடன் இயேசுவின் அன்பைத் தெளிவாய் விளக்கும் இப்பாடலை, பல மிஷனரிகள் தங்கள் பணித்தளங்களின் புது விசுவாசிகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் முதல் பாடலாக உபயோகித்தனர்.  எனவே, இப்பாடல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

William Batchelder Bradbury
இப்பாடலுக்கு டாக்டர் வில்லியம் பிராட்பரி (William Batchelder Bradbury) இனிமையான ராகம் அமைத்து அதின் பல்லவியையும் (Chorus) (Yes, Jesus loves me, Yes, Jesus Loves me) 1861ம் ஆண்டு சேர்த்தார்.  பல பாடல் புத்தகங்களை வெளியிட்டுள்ள இவர், இப்பாடலை, 1862ம் ஆண்டு தனது ‘தங்க மழை’ என்ற பாடல் புத்தகத்தில் அறிமுகம் செய்தார்.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒரேவித சீருடை அணிந்து, இணைந்து அழகாகப் பாடும் இன்னிசை நிகழ்ச்சிகளை வருடந்தோறும் நடத்திய பெருமை இவரைச் சேரும்.

தகவல்கள் நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’, அமைதி நேர ஊழியங்கள், சென்னை 42.

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1.            இயேசு எந்தன் நேசரே
கண்டேன் வேத நூலிலே
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.

     இயேசு என் நேசர்,
     இயேசு என் நேசர்,
     இயேசு என் நேசர்,
     மெய் வேத வாக்கிதே.

2.    என்னை மீட்க மரித்தார்,
மோட்ச வாசல் திறந்தார்,
எந்தன் பாவம் நீக்குவார்,
பாலன் என்னை ரட்சிப்பார்.

3.    பலவீனம் நோவிலும்
என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்,
பாதுகாக்க வருவார்.

4.    எந்தன் மீட்பர் இயேசுவே,
தங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால்
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.
Jesus Loves me this I know

Post Comment

Monday, May 5, 2014

பாமாலை 239 - இயேசு கற்பித்தார்

 Unison

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.            இயேசு கற்பித்தார்
ஒளி வீசவே
சிறு தீபம் போல
இருள் நீக்கவே;
அந்தகார லோகில்
ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.
 
2.    முதல் அவர்க்காய்
ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல்
காத்துக்கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்க்க
ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.
 
3.    பிறர் நன்மைக்கும்
ஒளி வீசுவோம்;
உலகின் மா இருள்
நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும்
பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்.
 

Post Comment

Wednesday, November 20, 2013

பாமாலை 237 - இயேசு எங்கள் மேய்ப்பர் (Goshen)

பாமாலை 237 - இயேசு எங்கள் மேய்ப்பர் 
Jesus is our Shepherd
Tune : Goshen

Unison 

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  இயேசு எங்கள் மேய்ப்பர்,
கண்ணீர் துடைப்பார்;
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார்;
துன்பம் நேரிட்டாலும்,
இன்பம் ஆயினும்,
இயேசுவின் பின் செல்வோம்
பாலர் யாவரும்.
 
2.  நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம்
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம்
கண்டித்தாலும், நேசர்
ஆற்றித் தேற்றுவார்;
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்.
 
3.  ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்;
அதில் மூழ்கினோரே
தூயர் ஆகுவார்;
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார்;
திவ்விய தூய சாயல்
ஆக மாற்றுவார்.
 
4.  இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார்;
ஓநாய்கள் வந்தாலும்
தொடவே ஒட்டார்
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம்
பாதாளத்தின் மேலும்
ஜெயங்கொள்ளுவோம்.

Post Comment