Showing posts with label SS. Show all posts
Showing posts with label SS. Show all posts

Monday, September 18, 2023

பாமாலை 357 - தெய்வ சமாதான (SS 652)

பாமாலை 357 - தெய்வ சமாதான
Like a river glorious

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1. தெய்வ சமாதான
இன்ப நதியே
மா பிரவாகமான
வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும்
ஓய்வில்லாமலும்
ஓட ஆழமாயும்
நித்தம் பெருகும்

அருள்நாதர் மீதில்
சார்ந்து சுகிப்பேன்
நித்தம் இளைப்பாறல்
பெற்று வாழுவேன்

2. கையின் நிழலாலே
என்னை மறைத்தார்
சத்துரு பயத்தாலே
கலங்க விடார்
சஞ்சலம் வராமல்
அங்கே காக்கிறார்
ஏங்கித் தியங்காமல்
தங்கச் செய்கிறார்

3. சூரிய ஜோதியாலே
நிழல் சாயையும்
காணப்பட்டாற் போலே
துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம்
சூரிய சாயையே
அதால் வாழ்நாள் எல்லாம்
சோரமாட்டேனே

Post Comment

Wednesday, August 2, 2023

வேதத்தை நேசி (Cling to the Bible)

வேதத்தை நேசி 
Cling to the Bible
SS 263

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


*******************************************************



1. வேதத்தை நேசி அது பெலன் தரும்
விலையுள்ள அது புனிதமாம்
தூங்கும் ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கும்
மரித்தோர் ஜீவன் பெறல் நிச்சயம்

வேதத்தை நேசி வேதத்தை நேசி 
        வேதத்தை நேசி மீட்பர் தாங்குவார்

2. வேதத்தை நேசி விலைபெற்ற செல்வம்
மானிடர்க்கு நித்ய ஜீவன் தரும்
உலகோர் அளவிட இயலாது
ஆத்மா அருள் பெற வேதம் நேசி

3. கால்களுக்குத் தீபம் பாதைக்கு ஒளி
விழும் வாலிபர்க்கு அது வழி
கெட்டுப்போன மாந்தர்க்கு நம்பிக்கையாம்
முதியவர் தாங்கும் கோல் வேதமே

4. வேதத்தை நேசி அது உன் மகிழ்ச்சி
வேதம் ஆத்மாவைப் பெலப்படுத்தும்
ஆவியில் தேறவும் சாவை வெல்லவும்
சத்திய வேதம் வழி காட்டிடும்

Post Comment

Monday, March 6, 2023

கெட்டுப்போன மாந்தரை (GB 192)

கெட்டுப்போன மாந்தரை 
Sinners Jesus will receive
Golden Bells 192

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. கெட்டுப்போன மாந்தரை
இயேசு ஏற்றுக் கொள்ளுவார்
பாவ ஆத்துமாக்களை
குணமாக்கி இரட்சிப்பார்

    நல்ல செய்தி கேளுமேன்
    இயேசு ஏற்றுக் கொள்ளுவார்
    நம்பி வாரும் வாருமேன்
    தள்ளிப் போடவே மாட்டார்

2. “இளைப்பாறல் தருவேன்
நம்பி வாரும்” என்கிறார்
யாரானாலும் வாருமேன்
பாவ பாரம் நீக்குவார் 

3. மாசில்லாத ரத்தத்தால்
சர்வ சுத்தம் ஆக்குவார்
தூய வல்ல ஆவியால்
தீய குணம் மாற்றுவார் 

4.  இந்த ஏற்ற நேரத்தில்
வந்து சேரக்கடவீர்
புண்ய நாதர் பாதத்தில்
மீட்பும் வாழ்வும் பெறுவீர்

Post Comment

Wednesday, February 22, 2023

நல்ல செய்தி இயேசுவை (SS 1079)

நல்ல செய்தி இயேசுவை (SS 1079)
We Have Heard the Joyful Sound

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



************************


1. நல்ல செய்தி இயேசுவை!
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
நம்பி வந்து அவரை
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
எந்த பாவியாயினும்
தள்ளமாட்டேன் என்கிறார்
துரோகம் செய்த போதிலும்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்

2. எங்கும் செய்தி சொல்லுவோம்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
தேசா தேசம் கூறுவோம்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
எந்த நாடு தீவிலும்
இயேசு காத்து நிற்கிறார்
மூடன் நீசன் ஆயினும்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்

3. இன்னும் கேள்! மா நேசராம்
இயேசுவே காக்கிறார்!
நம்பும் பக்தரையெல்லாம்
இயேசுவே காக்கிறார்!
சற்றும் தவறாமலும்
கையில் ஏந்திக் கொள்ளுவார்
கேடுபாடில்லாமலும்
இயேசுவே காக்கிறார்!

4. சுவிசேஷம் இதுவே!
காக்கிறார்! காக்கிறார்!
பாவம் நீக்கிப் பின்னுமே
காக்கிறார்! காக்கிறார்!
மோட்சம் சேருமளவும்
தாங்கிக் கொண்டே இருப்பார்
தீமையைச் செய்யாமலும்
காக்கிறார்! காக்கிறார்

Post Comment

Wednesday, February 2, 2022

சுவிசேஷ செய்தி கேட்டாய் (Come Believing)

சுவிசேஷ செய்தி கேட்டாய் 
Come Believing
Songs & Solos 381

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. சுவிசேஷ செய்தி கேட்டாய்.
சுதன் யேசு மீட்பரால்
அழைப்பைக் கவனிப்பாயா?
மீட்பரைத் தேடுவாயா?


நம்பி வா நீ, நம்பி வா நீ,
மீட்பர் யேசுவைப் பார் நீ
நம்பி வா நீ, நம்பி வா நீ
மீட்பர் இயேசுவைப் பார் நீ.

2.  காலங்கள் பல கடந்தாய்
அறுப்புப் பல கண்டாய்
கோடை மழைக்காலம் கண்டாய்
இன்னும் பாவம் விடாயோ?

3.  யேசு இன்னும் காக்கிறாரே
தடையின்றித் தீர்மானி
ஆவி போராடும் பொழுதே,
தாழ்த்தி சிலுவையைப் பார்!

4.  தகுதியா என்றெண்ணாதே
வேண்டாப் பயம் கொள்ளாதே
உணர்வல்ல நம்பிக்கையே,
ஆவியின் முத்ரை தரும்.

5.  தேவ சித்தம் செய்திடவே,
யேசுவின் ரத்தம் நம்பு
பரலோக யேசுவைப் பார்
மாறாத வசனம் சேர்.

1.  Once again the Gospel message
From the Savior you have heard;
Will you heed the invitation?
Will you turn and seek the Lord?

Refrain:

Come believing! come believing!
Come to Jesus! look and live!
Come believing! come believing!
Come to Jesus! look and live!

2.  Many summers you have wasted,
Ripened harvests you have seen;
Winter snows by spring have melted,
Yet you linger in your sin. 

3.  Jesus for your choice is waiting;
Tarry not: at once decide!
While the Spirit now is striving,
Yield, and seek the Savior’s side. 

4.  Cease of fitness to be thinking;
Do not longer try to feel;
It is trusting, and not feeling,
That will give the Spirit’s seal. 

5.  Let your will to God be given,
Trust in Christ’s atoning blood;
Look to Jesus now in Heaven,
Rest on His unchanging Word. 



Post Comment

Sunday, January 23, 2022

தீவினை செய்யாதே (Yield not to Temptation)

தீவினை செய்யாதே 
Yield not to Temptation
SS 698


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. தீவினை செய்யாதே மா சோதனையில்
பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்,
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்,
இயேசையரை நம்பி வென்றேகிப் போவாய்.

ஆற்றித் தேற்றியே காப்பார்,
நித்தம் உதவி செய்வார்,
மீட்பர் பெலனை ஈவார்.
ஜெயம் தந்திடுவார்.

2. வீண் வார்த்தை பேசாமல், வீண் தோழரையும்,
சேராமலே நீங்கி நல்வழியிலும்,
நின்றூக்கமும், அன்பும் சற்றேனும் விடாய்,
இயேசையரை நம்பி வென்றேகிப் போவாய்.

3. மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான்,
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான்;
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்,
இயேசையரை நம்பி வென்றேகிப் போவாய்.

*************************************************
1 Yield not to temptation,
For yielding is sin;
Each vict’ry will help you,
Some other to win;
Fight valiantly onward,
Evil passions subdue;
Look ever to Jesus,
He will carry you through.

Refrain

Ask the Savior to help you,
Comfort, strengthen and keep you;
He is willing to aid you,
He will carry you through.

2 Shun evil companions,
Bad language disdain;
God’s name hold in rev’rence,
Nor take it in vain;
Be thoughtful and earnest,
Kindhearted and true;
Look ever to Jesus,
He will carry you through. 

3 To him that o’er cometh,
God giveth a crown;
Through faith we will conquer,
Though often cast down;
He who is our Savior,
Our strength will renew;
Look ever to Jesus,
He will carry you through. 

Post Comment

Wednesday, May 6, 2020

SS 866 – என் பாவம் தீர்ந்த நாளையே (O Happy Day)

SS 866 – என் பாவம் தீர்ந்த நாளையே

(O Happy Day)

Philip Doddridge
‘என் பாவம் தீர்ந்த நாளையே’ பாடலை எழுதியவர் ஃபிலிப் டாரிட்ஜ் [Philip Doddridge (1702-1751)]. 20 சகோதரர்களுள் ஒருவராக ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த ஃபிலிப், இங்கிலாந்தின் பாரம்பரியத் திருச்சபைகளின்பால் ஈர்ப்பற்று, சுயாதீனத் திருச்சபைகளில் ஊழியம் செய்து வந்தார்.  சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரிடையே ஊழியம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த ஃபிலிப், தம் வாழ்நாளில் சற்றேறக்குறைய 400 பாடல்களையும் எழுதியுள்ளார். தான் சிறுவயதில் கடவுளோடே செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூறும் விதமாக ‘என் பாவம் தீர்ந்த நாளையே’ எனும் இப்பாடலை ஃபிலிப் எழுதியிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.  இப்பாடல் பெரும்பாலும் ஞானஸ்நான ஆராதனைகளிலும், திடப்படுத்தல் ஆராதனைகளிலும், ஆண்டவரோடு நாம் கொள்ளும் உடன்படிக்கையின் அடையாளமாகப் பாடப்படுகிறது. 
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்

இன்பநாள்! இன்பநாள்!
என் பாவம் தீர்ந்துபோன நாள்!
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்பநாள்! இன்பநாள்!
என் பாவம் தீர்ந்துபோன நாள்!

2. இம்மானுவேல் இப்பாவியைத்
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்.
சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய்ச் சேர்த்தனர்.

3. என் உள்ளமே, உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்.
ஆருயிர் தந்த நாதரை
ஓர்காலும் விட்டு நீங்கிடாய்.

4. ஆட்கொண்ட நாதா! எந்தனை
நாடோறும் தத்தஞ் செய்குவேன்
பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்.



1.       O happy day that fixed my choice
On Thee, my Savior and my God!
Well may this glowing heart rejoice,
And tell its raptures all abroad.

Chorus:
Happy day, happy day,
When Jesus washed my sins away!
He taught me how to watch and pray,
And live rejoicing ev'ry day;
Happy day, happy day,
When Jesus washed my sins away.

2.       'Tis done– the great transaction's done;
I am my Lord's, and He is mine;
He drew me and I followed on,
Rejoicing in the call divine. [Chorus]

3.       Now rest, my long divided heart,
Fixed on this blissful center, rest;
Here have I found a nobler part,
Here heav'nly pleasures fill my breast. [Chorus]

4.       High heav'n that hears the solemn vow,
That vow renewed shall daily hear;
Till in life's latest hour I bow,
And bless, in death, a bond so dear. [Chorus]

Post Comment

Monday, May 28, 2018

SS 657 - Sweet Peace (இனிய சமாதானம்)

இனிய சமாதானம்
(SS 657 - Sweet Peace)

இப்பாடலை எழுதி இசையமைத்தவர் பீட்டர் பில்ஹார்ன் (Peter P. Bilhorn).  இப்பாடல் பிறந்த கதையை அவரே பின்வருமாறு விவரிக்கிறார்.

‘நியூ ஜெர்ஸியிலுள்ள ஓஷன் குரோவ் (Ocean Grove) என்ற இடத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டத்தில் பாடுவதற்கு நான் அழைக்கப்பட்டேன்.  எனவே ஆரம்ப நாட்களில் நான் அடிக்கடி பாடும் “அதிசயக் கதையை நான் பாடுவேன்” (I Will Sing the Wondrous Story) என்ற பாடலைப் பாடினேன்.

கூட்டமுடிவில் என் நண்பரான திருமதி ஐடா ஸ்டாட்டர்ட் டெமெரஸ்ட் (Ida Stoddard Demerast) என்ற சகோதரி என்னிடம் வந்து, ‘பில்ஹார்ன்.. நீங்கள் பாடிய பாடல் உங்கள் குரலுக்கு மிகவும் பொருத்தமாயிருக்கிறது.  அதுபோல என் குரலுக்குப் பொருத்தமான பாடலொன்றை நீங்கள் எழுதமுடியுமா?” என்று கேட்டார்.

‘என்ன தலைப்பில் அப்பாடல் இருக்கவேண்டும்?” என்று நான் கேட்டேன்.  அதற்கு அவர், ‘ஏதேனும் ஓர் இனிய பாடல்! அவ்வளவுதான்’ என்றார்.  ‘இனிய பாடல்’ என்ற அவரின் பதிலை நான் குறித்துக்கொண்டேன்.

இரவில் சகோ S.T. கார்டனின் (S.T. Gordon) இல்லத்தில் நான் பியானோவின் முன் அமர்ந்திருந்த வேளையில், புதிய ராகம் ஒன்று எனக்குள் உருவானது.  எனினும் பாடலோ ‘இனிய பாடல்’ என்ற தலைப்போடு, வேறு வார்த்தைகளின்றி நின்றுகொண்டிருந்தது.

அதன்பின்னர், பனிக்காலத்தில் D.L. மூடி (D. L. Moody) என்னிடம் தொடர்பு கொண்டு, அயோவாவில் (Iowa) நடைபெறும் மேஜர் விட்டிலின் (Major Whittle) நற்செய்திக் கூட்டங்களில் பங்கேற்குமாறு அழைத்தார்.  அதை ஏற்று நானும், மேஜர் விட்டிலும் சிக்காகோவிலிருந்து புறப்பட்டோம்.

Peter P. Bilhorn
இல்லினாஸிலுள்ள வீட்டன் (Wheaton, Illinois) என்ற நகரை நெருங்கும் நேரத்தில், திடீரென நாங்கள் சென்ற புகைவண்டியின் எஞ்சின் உச்ச தொனியில் எச்சரிக்கைக் குரலெழுப்பி நின்றது.  நாங்கள் இருவரும் இறங்கிச் சென்று பார்த்தோம்.  எங்கள் ரயிலில் ஒரு வயதான பெண்மணி அடிபட்டு இறந்து போயிருந்தார்.  அவரது சிதைந்து போன உடல் ஒரு குழியில் கிடந்தது.  அச்சடலத்தை அருகிலிருந்த ஒரு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அச்சரீரம் இருந்த குழியில் ரத்தம் மட்டும் சிறு குளம் போலத் தேங்கியிருந்தது.

மேஜர் விட்டில் என் தோளில் தட்டி “இயேசு கிறிஸ்து இவ்வுலகில் இதை மட்டுமே விட்டுச் சென்றார் என்று உனக்குத் தெரியுமா? நம்மை நீதிமான்களாக்க அவருடைய சரீரம் உயிர்த்தெழுந்தது.  ஆனால் அவரது ரத்தமோ நமது பாவங்களை நிவிர்த்தி செய்ய சிந்தப்பட்டது என்றார்.

‘ஆம் மேஜர்.  இயேசுவின் ரத்தம் எனது பாவங்களை நிவிர்த்தி செய்கிறதென்பதே எனக்கு இனியதோர் சமாதானத்தைத் தருகிறது’ என்றேன்.

நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’ அமைதி நேர ஊழிய வெளியீடு.


பாடல் பிறந்த கதையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே செல்லவும்.

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1.  என் உள்ளத்தில் தொனிக்குதே
மகிழ்ச்சியின் கீதமதே
தேவன்பின் ஈவாக வந்ததே
இனிய சமாதானம்.

     சமாதானம்
     உன்னத சமாதானம்
     தேவன்பின் அற்புத ஈவே
     இனிய சமாதானம்

2. கிறிஸ்து சிலுவையிலே
என் கடன் செலுத்தித் தீர்த்தார்
தேவன்பு தான் என் அஸ்திபாரம்
இனிய சமாதானம்.

3. இயேசுவே என் கர்த்தரானார்
என் உள்ளத்தில் சமாதானம்
அளவில்லா ஆசீர்வாதமே
இனிய சமாதானம்.

4. இயேசுவை நான் பற்றிக்கொண்டே
சமாதானத்தில் நிலைப்பேன்
கலக்கமின்றி வாழுவேன்
இனிய சமாதானம்.





























1.      There comes to my heart one sweet strain,
A glad and a joyous refrain;
I sing it again and again--
Sweet peace, the gift of God’s love.

Chorus:

Peace, peace, sweet peace!
Wonderful gift from above!
O wonderful, wonderful peace!
Sweet peace, the gift of God’s love!

2.      Thro' Christ on the cross peace was made,
My debt by His death was all paid;
No other foundation is laid
For peace, the gift of God’s love. (Chorus)

3.      When Jesus as Lord I had crowned,
My heart with this peace did abound;
In Him the rich blessing I found--
Sweet peace, the gift of God’s love. (Chorus)

4.      In Jesus for peace I abide,
And as I keep close to His side,
There’s nothing but peace doth betide--
Sweet peace, the gift of God’s love. (Chorus)



Post Comment

Friday, March 30, 2018

SS 113 - Blessed be the fountain (சீரில்லாத பாபிஷ்டரே)

சீரில்லாத பாபிஷ்டரே
(SS 113 – Blessed be the fountain of blood)

Eden Reeder Latta
”Blessed be the fountain of blood” என்னும் இந்தப் பாடல் உட்பட ஆயிரத்து அறுநூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதிய எடின் ரீடர் லத்தா (Eden Reeder Latta) 1839ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் தேதி இண்டியானா மாகாணத்தில் பிறந்தார்.  இந்தப் பாடலுக்கு ராகம் அமைத்தவர் ஹென்றி பெர்க்கின்ஸ் (Henry Southwick Perkins) என்பவராவார்.  அநேக பாடல் புத்தகங்களில் இப்பாடல் “Whiter than the snow” என்னும் தலைப்புடனும் இடம்பெற்றிருக்கிறது.

Henry Southwick Perkins
ஆண்டவராகிய கிறிஸ்து சிலுவையில் சிந்திய ரத்தத்தையும், அதில் அடங்கியிருக்கும் பாவமன்னிப்பின் நிச்சயத்தையும் குறித்த இப்பாடலை எடின் 1881ம் ஆண்டு எழுதினார். ஆண்டவரின் அன்பைக் குறித்த பாடல்களை எழுதுவது எடினுக்கு அத்தனை கடினமானதாக ஒருபோதும் இருந்ததில்லை.  ஒரே நாளில் 9 பாடல்களை எழுதும் அளவிற்கு ஆற்றல் பெற்றவராக இருந்தார் எடின்.  ”Blessed be the fountain of blood” என்னும் இப்பாடல் எழுதப்பட்டு இசையுடன் வெளியிடப்பட்ட உடனேயே பிரபலம் அடையத் துவங்கியது. இப்பாடலின் ஆழ்ந்த பொருள் நிறைந்த வரிகள் காரணமாக ஏராளமான பாடல் புத்தகங்களில் இடம்பெற்றது இப்பாடல். 

“அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்” (சகரியா 13:1) என்ற தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் இப்பாடலின் பல்லவியை “Blessed be the fountain of blood” என்று எடின் துவங்கியதாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. சீரில்லாத பாபிஷ்டரே
யேசுநாதர் மரித்ததால்
பாவதோஷம் தீர்ந்திடுமே
ஏகபலியின் ரத்தத்தினால்
நெறி தப்பிப் போவதினால்
நிருமூட நேசரானோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்தாகுவோம்
வெண்மையாகுவோம்
வெண்மையாகுவோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்தாகுவோம்


2. மோக்ஷலோக நாயகரே
தாழ்மையோடு மாந்தனானார்
ஒப்பில்லாத மா நேசரே
முட்கிரீடம் சூட்டப்பட்டார்!
ரட்சை செய்தனராதலால்
நன்றி நினைத்தேயிருப்போம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்தாகுவோம்


3. குணசிந்தை தீயதெல்லாம்
பக்தி சுத்த சூனியமே
தீவினை ரத்தாம்பரமாம்
சுத்தி செய்வார் ஈண்டில்லையே
அருள் வாக்கை நம்புவதால்
யேசுவண்டை சேர்ந்திடுவோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்தாகுவோம்.

1. Blessed be the Fountain of blood,
To a world of sinners revealed;
Blessed be the dear Son of God -
Only by His stripes we are healed.
Tho I’ve wandered far from His fold,
Bringing to my heart pain and woe,
Wash me in the blood of the Lamb,
And I shall be whiter than snow.


Chorus
Whiter than the snow,
Whiter than the snow,
Wash me in the blood of the Lamb,
And I shall be whiter than snow.


2. Thorny was the crown that He wore,
And the cross His body o’ercame;
Grievous were the sorrows He bore,
But He suffered thus not in vain.
May I to that Fountain be led,
Made to cleanse my sins here below;
Wash me in the blood that He shed,
And I shall be whiter than snow.


3. Father, I have wandered from Thee,
Often has my heart gone astray;
Crimson do my sins seem to me
Water cannot wash them away.
Jesus, to the Fountain of Thine,
Leaning on Thy promise, I go;
Cleanse me by Thy washing divine,
And I shall be whiter than snow.




Thanks :

1) Sitthers Publications YouTube Channel for the Tamil Lyrics
***************************************************************
Alternate Lyrics (Old Tamil words like பாபிஷ்டர், நிருமூடர், தூய்தாகுவோம், have been replaced)

1.         சீரில்லாத மானிடரே
யேசுநாதர் மரித்ததால்
பாவதோஷம் தீர்ந்திடுமே
ஏகபலியின் ரத்தத்தால்
நெறி தப்பிப் போவதினால்
மதிகெட்டு நீசரானோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்மையாவோம்

வெண்மையாகுவோம்
வெண்மையாகுவோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்மையாவோம்

2.         மோட்சலோக நாயகரே
தாழ்மையோடு மாந்தனானார்
ஒப்பில்லாத மா நேசரே
முட்கிரீடம் சூட்டப்பட்டார்
ரட்சை செய்தனராதலால்
நன்றி நினைத்தேயிருப்போம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்மையாவோம்

3.         குணசிந்தை தீயதெல்லாம்
பக்தி சுத்த சூனியமே
தீவினை ரத்தாம்பரமாம்
சுத்தி செய்வார் ஈண்டில்லையே
அருள் வாக்கை நம்புவதால்
யேசுவண்டை சேர்ந்திடுவோம்
மாசில்லாத ரத்தத்தினால்
வெளேரென்று தூய்மையாவோம்
*********************************************************************




Post Comment

Friday, February 16, 2018

SS 607 - I am thine O Lord (திவ்ய அன்பின் சத்தத்தை)

திவ்ய அன்பின் சத்தத்தை
(SS 607 – I am thine O Lord)

ஃபானி கிராஸ்பி (Fanny Crosby) அம்மையார் 8500க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர்.  கிராஸ்பி எழுதி, வில்லியம் டோன் (William Doane) இசையமைத்த அற்புதமான பல பாடல்களுள் ‘திவ்ய அன்பின் சத்தத்தை’ பாடலும் ஒன்றாகும். 

William Doane
ஒரு மாலை வேளையில் கிராஸ்பியும் அவரது தோழர் வில்லியம் டோன்’ம் ஆண்டவர் தங்கள் வாழ்வில் எவ்வளவு நெருக்கமாக இருந்துவந்திருக்கின்றார் என்பதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.  அவர்களுடைய உரையாடல் முடிந்து, கிராஸ்பி தம் அறைக்குத் திரும்பிய பின்னரும், வில்லியம் டோன்’உடன் அவர் பகிர்ந்துகொண்ட ஆவிக்குரிய கருத்துகள் அவர் மனதில் ஒலித்தவண்ணம் இருந்தன.  அன்றிரவு அவர் உறங்கச் செல்வதற்கு முன்னர் ‘I am thine, O Lord’ என்ற வரி அவர் மனதில் ஆழமாகப் பதிந்துபோய் இருந்தது.  மறுநாள் காலையில் எழுந்ததும், முழுப்பாடலுக்கான வரிகளையும் தனது தோழர் வில்லியம் டோன்’இடம் அவர் வாய்மொழியாகக் கூற, வில்லியம் அதை ஒரு தாளில் எழுதி, அப்பாடலுக்கான ராகத்தையும் அங்கேயே அமைத்தார்.

I am Thine, O Lord, I have heard Thy voice,
And it told Thy love to me;
But I long to rise in the arms of faith
And be closer drawn to Thee.             

Refrain

Draw me nearer, nearer blessèd Lord,
To the cross where Thou hast died.
Draw me nearer, nearer, nearer blessèd Lord,
To Thy precious, bleeding side.

Consecrate me now to Thy service, Lord,
By the power of grace divine;
Let my soul look up with a steadfast hope,
And my will be lost in Thine.                          Refrain

O the pure delight of a single hour
That before Thy throne I spend,
When I kneel in prayer, and with Thee, my God
I commune as friend with friend!                    Refrain

There are depths of love that I cannot know
Till I cross the narrow sea;
There are heights of joy that I may not reach
Till I rest in peace with Thee.                           Refrain

இப்பாடல் வரிகளுக்கான மூலத்தை கிராஸ்பி, “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்” எபிரேயர் 10:22 என்ற வசனத்தின் அடிப்படையில் எழுதியுள்ளார்.  தான் எழுதிய பல்வேறு பாடல்களைப் போலவே, இப்பாடலும் கடவுளுக்கும் தனக்குமான ஒரு தனிப்பட்ட ஆன்மீக உறவைக் குறித்துப் பேசுவதாக எழுதியுள்ளார், கிராஸ்பி அம்மையார்.

Fanny Crosby
ஃபானி கிராஸ்பி (Fanny Crosby) அம்மையார் ஆறுவாரக் குழந்தையாயிருக்கும்போது, தவறான மருத்துவ சிகிச்சையால் கண்பார்வையை இழந்தார்.  ஐந்து வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் கொண்டுபோகப்பட்டார்.  ஆனால் கண்பார்வையை சரிப்படுத்த மருத்துவரால் இயலவில்லை.  மிகுந்த அனுதாபத்துடன் அவர் இளம்பெண்ணைப் பார்த்து ‘Poor little blind girl!’ எனக்கூறினார். இவ்வார்த்தைகளைப் ஃபானி கிராஸ்பி ஆயுள் முழுவதிலும் ஞாபகத்தில் வைத்திருந்து, கடவுளின் பார்வையில் தன் நிலை என்ன என்று சிந்திக்கலானார்.  தன்னைச் சுற்றியிருந்த மக்கள் அவ்வூரில் நடந்த பற்பல நிகழ்ச்சிகளிலும் அவரை ஒதுக்கி வைத்தனர்.  அதிக நேரம் தனிமையாக இருக்கவேண்டியிருந்ததால், தன் மனதைக் கிறிஸ்தவச் செய்யுள்கள் எழுதுவதில் திருப்பினார். 

ஃபானி கிராஸ்பி 1820ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் தேதி, அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.  அவரது பெற்றோர் மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர்கள். குழந்தை பிறந்து ஆறு வாரம் ஆனபோது, குழந்தைக்கு ஜலதோஷம் உண்டானதால் அவ்வூரிலுள்ள மருத்துவரிடம் கொண்டுபோகவே, அவர் கடுகுக் களிம்பை இரு கண்களைச் சுற்றிலும் பூசினார்.  இதனால் கண்கள் வெந்து குருடாயிற்று.  பெண் ஐந்து வயதாயிருக்கையில் அதின் இனத்தவர் பலர் பணம் திரட்டி, நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் அனுப்பினார்.  ஆனால் கண்களைச் சரிப்படுத்த அவரால் முடியவில்லை.  எனவே பன்னிரண்டு வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.  அங்கு நன்றாகக் கற்றுத்தேறி, 1847 முதல் பதினொரு ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 1858’ல் இப்பள்ளியிலிருந்து விலகி, தம்மைப் போலக் கண்பார்வையற்ற அலெக்ஸாண்டர் வான் ஆல்ஸ்டைன் என்னும் சங்கீத நிபுணரை மணந்தார்.

ஃபானி கிராஸ்பி அம்மையார் இளவயதிலிருந்தே செய்யுள்கள் எழுதுவதில் அதிகத் திறமை காட்டினார்.  அவர் எட்டு வயதாய் இருக்கையில் தமது முதல் செய்யுளை எழுதினார்.  சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில் அவரே முதல் இடத்தைப் பெற்றார்.  அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்களை, ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப் புத்தகத்தில் காணலாம்.  அவர் எழுதிய இதர பாடல்களில் நாம் பாடி வருபவை:

v  போற்றும் போற்றும், புண்ணிய நாதரை (பாமாலை 267)
v  இயேசுவே கல்வாரியில் என்னை (பாமாலை 333)
v  இயேசுவின் கைகள் காக்க (பாமாலை 353)
v  இயேசுவின் நற்செய்தி சொல்வீர்’ (S.S. 43)
v  பாவி, உன் மீட்பர் கரிசனையாய்’ (S.S. 396)
v  முயல்வோம், முயல்வோம் (S.S. 751)
v  இயேசுவை நம்பிப் பற்றிகொண்டேன் (S.S. 873)


ஃபானி கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 12ம் தேதி தமது 95வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1.    திவ்ய அன்பின் சத்தத்தை, ரட்சகா!
கேட்டு உம்மை அண்டினேன்;
இன்னும் கிட்டி சேர, என் ஆண்டவா!
ஆவல் கொண்டிதோ வந்தேன்.

இன்னும் கிட்ட கிட்டச் சேர்த்துக்கொள்ளுமேன்!
பாடுபட்ட நாயகா!
இன்னும் கிட்டக் கிட்டச் சேர்த்துக்கொள்ளுமேன்!
ஜீவன் தந்த இரட்சகா!

2.    என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடி தேடச் செய்யுமேன்.

3.    திருப்பாதத்தில் தங்கும்போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்;
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய்ச் சந்தோஷமாகிறேன்.

4.    இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன்.


Post Comment