Showing posts with label நற்கருணை. Show all posts
Showing posts with label நற்கருணை. Show all posts

Tuesday, April 9, 2013

பாமாலை 186 - ஆத்துமாவே உன்னை ஜோடி

பாமாலை 186 - ஆத்துமாவே உன்னை ஜோடி
Schmücke dich, o liebe Seele

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. ஆத்துமாவே உன்னை ஜோடி
தோஷம் யாவையும் விடு
மீட்பரண்டை சேர ஓடி
நன்றாய் ஜாக்கிரதைப்படு
கர்த்தர் உன்னை
பந்திக்கு அழைக்கிறார்
 
2. இந்தப் போஜனத்தின் மேலே
வாஞ்சையாய் இருக்கிறேன்
உம்மையே இம்மானுவேலே
பக்தியாய் உட்கொள்ளுவேன்
தேவரீரே
ஜீவ அப்பமானவர்
 
3. மாசில்லாத ரத்தத்தாலே
என்னை அன்பாய் ரட்சித்தீர்
அதை நீர் இரக்கத்தாலே
எனக்கென்றும் ஈகிறீர்
இந்தப் பானம்
என்னை நித்தம் காக்கவே
 
4. உம்முடைய சாவின் லாபம்
மாட்சிமை மிகுந்தது
என்னிடத்திலுள்ள சாபம்
உம்மால்தானே நீங்கிற்று
அப்பமாக
உம்மை நான் அருந்தவே.

Post Comment

Thursday, February 14, 2013

பாமாலை 197-பிதாவே எங்களை (Unde et Memores)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.  பிதாவே, எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,
நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்
பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே
ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டுவோம்.
 
2.  , எங்கள் குற்றம் குறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே
விஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்
உம் பேரருளைப் போக்கடித்தோமே
என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை.
 
3.  இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;
சிறந்த நன்மை யாவும் அளியும்;
உம் மார்பினில் அணைத்துக் காருமே;
எத்தீங்கும் அணுகாமல் விலக்கும்;
உம்மில் நிலைக்கப் பெலன் அருளும்.
 
4.  இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மா சாந்தமுள்ள மீட்பரான நீர்
பேரின்பம் தருந் திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.

Post Comment

Wednesday, February 6, 2013

பாமாலை 281-சிலுவை மரத்திலே (Toplady)

பாமாலை 281-சிலுவை மரத்திலே (Toplady)

From the Cross uplifted high
Tune : Toplady

Unison

Soprano

Alto


Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. சிலுவை மரத்திலே
இயேசுவை நான் நோக்கவே
என்னைப் பார்த்தழைக்கிறார்
காயம் காட்டிச் சொல்கின்றார்
மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.
 
2. பாவ பலியானதால்
குத்தப்பட்டேன் ஈட்டியால்
ரத்தம் பூசப்பட்டு நீ
எனக்குன்னை ஒப்புவி
மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.
 
3. பான போஜனம் நானே
விருந்துண்டு வாழ்வாயே
பிதாவண்டை சேரலாம்
நேச பிள்ளை ஆகலாம்
மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.
 
4. சீக்கிரத்தில் வருவேன்
உன்னைச் சேர்ந்து வாழ்விப்பேன்
நித்தியானந்தம் மோட்சத்தில்
உண்டு வா என்னண்டையில்
மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.

Post Comment

Friday, January 18, 2013

பாமாலை 196-பயத்தோடும் பக்தியோடும் (Picardy)

பாமாலை 196-பயத்தோடும் பக்தியோடும் 
Let all mortal flesh keep silence
Tune: Picardy

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  பயத்தோடும் பக்தியோடும்
தூய சிந்தையுள்ளோராய்
சபையார் அமர்ந்து நிற்க,
ஆசீர்வாத வள்ளலாம்
தெய்வ சுதன் கிறிஸ்து நாதர்
ராஜனாய் விளங்குவார்.
 
2.  வேந்தர்க்கெல்லாம் வேந்தர்
முன்னே கன்னிமரி மைந்தனாய்
பாரில் வந்து நின்றார்; இதோ,
சர்வ வல்ல கர்த்தராய்
வானாகாரமான தம்மால்
பக்தரைப் போஷிப்பிப்பார்.
 
3.  தூத கணங்கள் முன்சென்று
பாதை செவ்வை பண்ணவே
விண்ணினின்று அவர் தோன்ற
ஜோதியில் மா ஜோதியாய்,
வெய்யோன் கண்ட இருள் எனத்
தீயோன் ராஜ்யம் மாயுமே.
 
4.  ஆறு செட்டையுள்ள சேராப்,
கண்வளரா கேரூபின்
செட்டையால் வதனம் மூடி,
என்றும் ஆரவாரித்து
அல்லேலூயா, அல்லேலூயா,
கர்த்தா, என்று போற்றுவார்.

Post Comment

Saturday, August 11, 2012

பாமாலை 186 - ஆத்துமாவே உன்னை ஜோடி (BRYN CALFARIA)

 SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    ஆத்துமாவே உன்னை ஜோடி
தோஷம் யாவையும் விடு
மீட்பரண்டை சேர ஓடி
நன்றாய் ஜாக்கிரதைப்படு
கர்த்தர் உன்னை
பந்திக்கு அழைக்கிறார்
 
2.    இந்தப் போஜனத்தின் மேலே
வாஞ்சையாய் இருக்கிறேன்
உம்மையே இம்மானுவேலே
பக்தியாய் உட்கொள்ளுவேன்
தேவரீரே
ஜீவ அப்பமானவர்
 
3.    மாசில்லாத ரத்தத்தாலே
என்னை அன்பாய் ரட்சித்தீர்
அதை நீர் இரக்கத்தாலே
எனக்கென்றும் ஈகிறீர்
இந்தப் பானம்
என்னை நித்தம் காக்கவே
 
4.    உம்முடைய சாவின் லாபம்
மாட்சிமை மிகுந்தது
என்னிடத்திலுள்ள சாபம்
உம்மால்தானே நீங்கிற்று
அப்பமாக
உம்மை நான் அருந்தவே.

Post Comment