Showing posts with label 139. Show all posts
Showing posts with label 139. Show all posts

Monday, June 10, 2013

பாமாலை 139 - தெய்வாவி மனவாசராய்

பாமாலை 139 – தெய்வாவி மனவாசராய்
(Spirit Divine attend our Prayers)
Author : Andrew Reed
SS 187 C.M.


‘தெய்வாவி மனவாசராய்’ எனும் இப்பாடல் ‘பரிசுத்தாவி பண்டிகை” எனும் தலைப்பில் நம் கிறிஸ்து சபை பாமாலை புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலை எழுதியவர் Andrew Reed.  இவர் 1787ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து, அமெரிக்காவின் Yule கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துப் பின்னர் லண்டன் Hackney கல்லூரியில் தம் ஆயர் படிப்பை முடித்தார்.  தம் வாழ்நாளில் ஏராளமான பாடல்களை எழுதிய இவர், அப்பாடல்களை பல்வேறு தொகுப்புகளாகவும் வெளியிட்டார்.  Andrew Reed எழுதிய பல்வேறு பாடல்கள் இன்றளவும் திருச்சபைகளில் பாடப்பட்டு வருகின்றன. 

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

1.    தெய்வாவி, மனவாசராய்,
வந்தனல் மூட்டுவீர்;
உம் அடியாரின் உள்ளத்தில்
மா கிரியை செய்குவீர்.

2.    நீர் சோதிபோல் பிரகாசித்து,
நிர்ப்பந்த ஸ்திதியும்
என் கேடும் காட்டி, ஜீவனாம்
மெய்ப் பாதை காண்பியும்.

3.    நீர் வான அக்னிபோலவே,
துர் ஆசை சிந்தையும்
தீக் குணமும் சுட்டெரிப்பீர்,
பொல்லாத செய்கையும்.

4.    நற் பனிபோலும் இறங்கும்
இவ்வேற்ற நேரத்தில்;
செழிப்புண்டாகச் செய்திடும்
பாழான நிலத்தில்.

5.    புறாவைப்போல சாந்தமாய்
நீர் செட்டை விரிப்பீர்;
மெய்ச் சமாதானம் ஆறுதல்
நற் சீரும் அருள்வீர்.

6.    நீர் பெரும் காற்றைப் போலவும்
வந்தசைத்தருளும்
கல் நெஞ்சை மாற்றிப் பேரன்பை
நன்குணரச் செய்யும்.

Post Comment