Friday, March 27, 2020

பாமாலை 153 - ஓர்முறை விட்டு மும்முறை (Derry)

பாமாலை 153 – ஓர் முறை விட்டு மும்முறை
(Forsaken once, and thrice denied)
Tune : Derry
Composer : John Bacchus Dykes
Words: Cecil Frances Alexander

Rev John Bacchus Dykes
இப்பாடலின் இசையை இயற்றியவர் அருள்திரு. ஜான் டைக்ஸ் (John Bacchus Dykes).  1823ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த ஜான் தன் சிறு வயதில் பியானோ மற்றும் வயலின் வகுப்புகளுக்கு சென்று இசை பயின்று தனது பத்தாவது வயதில் St. Johns ஆலயத்தில் ஆர்கனிஸ்ட்’ஆக தன் இசைப்பணியைத் துவக்கினார். இங்கிலாந்தின் St. Catherine College’ல் தனது பட்டப்படிப்பை முடித்து, 1847ம் ஆண்டு குருத்துவப் படிப்பையும் முடித்தார்.  தொடர்ந்து 1849ல் Durham Cathedral’ல் Choir Director’ஆக அமர்த்தப்பட்ட இவர், கவனமான பாடல் பயிற்சி, இசை விழாக்கள் என்று பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை பாடகர் குழுவில் கொண்டு வந்தார். தன் வாழ்வில் முந்நூறுக்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்த இவரின் பாடல்கள் 1857ம் ஆண்டு “Congregational Hymn and Tune Book” என்ற புத்தகத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து “Ancient and Modern” புத்தகத்திலும் இவரது பாடல்கள் பதிப்பிக்கப்பட்டன.  ஜான் 1876ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.

இப்பாடலை எழுதியவர் சிஸில் அலெக்ஸாண்டர் (Cecil Frances Alexander) அம்மையார். இவரது காலம் 1818-1895.  தன் வாழ்நாளில் ஏராளமான பாடல்களை எழுதிய இவர் ‘All things Bright and Beautiful”, “There is a Green Hill Far Away” போன்ற பாடல்களை எழுதியவர்.  “Once in Royal David’s City” என்ற புகழ்பெற்ற கிறிஸ்மஸ் பாடலையும் இவரே எழுதினார்.

சிஸில் தமது சிறுவயது முதற்கொண்டே பாடல்களை எழுதத் துவங்கினார்.  தமது 22வது வயதிலேயே அயர்லாந்தில் இவர் மிகப் புகழ்பெற்ற ஒரு கவிஞராக அறியப்பட்டு, அநேகம் பாடல் புத்தகங்களில் இவர் படைப்புகள் இடம்பெறத் துவங்கின.  சிஸில் அம்மையார் 1848ம் ஆண்டு, சிறுவர்களுக்கென்று Hymns for Little Children என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டார்.

பாடல்கள் எழுதுவதன் மூலம், புத்தகங்கள் வெளியிடுவதன் மூலம் கிடைத்த பணத்தை சிஸில் நிறைய சமூகப் பணிகளுக்கென செலவிட்டார்.  தனது முதலாவது பதிப்பிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு “Derry and Raphoe Dioceson Institution for the Deaf and Dumb” என்ற அமைப்பைக் கட்டியெழுப்பி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.

எத்தனையோ நற்காரியங்களுக்கென தமது வாழ்நாளை செலவிட்ட சிஸில் அம்மையார், அவர் எழுதிய ‘All Things Bright and Beautiful” பாடலின் மூன்றாவது சரணத்தில்,

The rich man in his castle,
The poor man at his gate,
God made them high and lowly,
And ordered their estate.

என்ற வரிகளை எழுதியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.  மனிதருள் ஏற்றதாழ்வுகளை கற்பிக்கிறது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த சரணம், பிந்தைய பதிப்புகளில் நீக்கப்பட்டு பாடல் வெளியிடப்பட்டது.

சிஸில் அம்மையாரின் கணவர், அயர்லாந்தின் பேராயர் வில்லியம் (Most Rev. William Alexander) ஆவார்.  1911ம் ஆண்டு பேராயர் வில்லியம் மறைவிற்குப் பின்னர் அயர்லாந்தின் St Columb's Cathedral பேராலயத்தின் உள்ளே சிஸில் அம்மையாரின் நினைவாக, ஒரு பெரிய கண்ணாடியிலான ஜன்னல் அமைக்கப்பட்டது.  இந்த சாளரத்தில் சிஸில் எழுதிய "Once in Royal David's City", "There Is a Green Hill Far Away", மற்றும் "The Golden Gates Are Lifted Up" ஆகிய மூன்று பாடல்களைக் குறிக்கும் மூன்று விதமான விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன (Photo : Stained glass window in memory of Cecil Frances Alexander, in St Columb's Cathedral, Derry, Northern Ireland. Credits : Wikipedia).

கிறிஸ்தவச் செய்யுள்களும், பாடல்களும் எழுதுவதில் அதிகத் திறமையுள்ள இவர், மொத்தத்தில் நானூற்றுக்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்இப்பாடல்களில் அதிகமானவை சிறுவர் பாடல்களேஅவர் எழுதிய இதர பாடல்களில் நமது பாமாலை புத்தகத்தில் இருப்பவை:

·         பாமாலை 73 – ராஜன் தாவீதூரிலுள்ள
·         பாமாலை 89 – என் நெஞ்சம் நொந்து காயத்தால்
·         பாமாலை 115 – கூர் ஆணி தேகம் பாய
·         பாமாலை 119 – அருவிகள் ஆயிரமாய்
·         பாமாலை 114 - கொந்தளிக்கும் லோக வாழ்வில்
·         பாமாலை 153 – ஓர் முறை விட்டு மும்முறை
·         பாமாலை 155 – இளமை முதுமையிலும்
·         பாமாலை 202 – நான் மூவரான ஏகரை
·         பாமாலை 150 காரிருள் பாவம்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. ஓர் முறை விட்டு மும்முறை
சீமோன் மறுத்தும் ஆண்டவர்
என்னிலே அன்புண்டா? என்றே
உயிர்த்தபின் கேட்டனர்.

2. விஸ்வாசமின்றிக் கர்த்தரை
பன்முறை நாமும் மறுத்தோம்;
பயத்தினால் பலமுறை
நம் நேசரை விட்டோம்.

3. சீமோனோ சேவல் கூவுங்கால்
மனம் கசந்து அழுதான்
பாறை போல் நின்று பாசத்தால்
கர்த்தாவைச் சேவித்தான்.

4. அவன் போல் அச்சங் கொள்ளினும்,
நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்;
பாவத்தால் வெட்கம் அடைந்தும்
கண்ணீர் சொரிந்திலோம்.

5. நாங்களும் உம்மை விட்டுமே
பன்முறை மறுதலித்தும்
நீர் எம்மைப் பார்த்து இயேசுவே
நெஞ்சுருகச் செய்யும்.

6. இடறும் வேளை தாங்கிடும்;
உம்மைச் சேவிக்கும் கைகளும்
உம்மை நேசிக்கும் நெஞ்சமும்
அடியார்க்கருளும்.

1.       Forsaken once, and thrice denied,
The risen Lord gave pardon free,
Stood once again at Peter's side,
And asked him, "Lov'st thou Me?"

2.       How many times with faithless word
Have we denied His holy Name,
How oft forsaken our dear Lord,
And shrunk when trial came!

3.       Saint Peter, when the cock crew clear,
Went out and wept his broken faith;
Strong as a rock through strife and fear,
He served his Lord till death.

4.       How oft his cowardice of heart
We have without his love sincere,
The sin without the sorrow's smart,
The shame without the tear!

5.       O oft forsaken, oft denied,
Forgive our shame, wash out our sin;
Look on us from Thy Father's side,
And let that sweet look win.

Post Comment

No comments:

Post a Comment