Thursday, January 5, 2023

மங்களம் மங்கள மங்களமே

SATB 

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







மங்களம் மங்களம் மங்களமே (2)
மணமக்கள் மாண்புறவே
மணவாழ்வு இன்புறவே
மணவாளன் இயேசுவின்
மாசில்லா ஆசியால்
மணமக்கள் இணைந்திடவே
ஆ..ஆ..ஆ..

1. ஆதாமும் ஏவாளோடு
ஆபிராம் சாராளோடு
ஆதியில் ஆண்டவன்
அனாதி திட்டம்போல்
மணமக்கள் சேர்ந்திடவே
ஆ..ஆ..ஆ..

2. இல்லறம் இலங்கிடவே
நல்லறம்  துலங்கிடவே
வல்லவன் வான்பரன்
வழிகாட்டும் வாழ்க்கையில்
பல்லாண்டு வாழ்ந்திடவே
ஆ..ஆ..ஆ..

Post Comment

No comments:

Post a Comment