Tuesday, March 28, 2023

ஓசன்னா பாலர் ராயர்க்கே

ஓசன்னா பாலர் ராயர்க்கே
Hosanna be the Children's song

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா!
ஓசன்னா! பாலர் ராயர்க்கே 
நாம் பாடிப் போற்றுவோம் 
நம் ஆத்ம மீட்பர் பேரிலே 
சங்கீதம் பாடுவோம்

ஓசன்னா ராயர்க்கே துதி 
ஓசன்னா பாடுவோம் 
இந்நாளில் பாலர் யூபிலி 
கொண்டாடி பாடுவோம்
இந்நாளில் பாலர் யூபிலி 
யூபிலி யூபிலி
இந்நாளில் பாலர் யூபிலி 
கொண்டாடி பாடுவோம்

2. ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா!
ஓசன்னா பாடும் பாலரின் 
பேரொலி கேட்கட்டும்!
மா பூரிப்போடு தாவீதின் 
மாமைந்தன் துதியும்!

3.  ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா!
ஓசன்னா என்னும் கீதமே
எந்நாடும் சொல்லட்டும்
அவ்வின்ப எதிர் ஒலியே
எங்கெங்கும் கேட்கட்டும்

4.  ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! 
ஓசன்னா விண் மண் கடலும் 
சேர்ந்தொன்றாய்ப் பாடட்டும் 
ராப்பகல் காலை மாலையும் 
இவ்வோசை கேட்கட்டும்

Post Comment

No comments:

Post a Comment