Sunday, March 24, 2013

பாமாலை 117 - சிலுவையைப் பற்றி நின்று (Stabat Mater)

பாமாலை 117 - சிலுவையைப் பற்றி நின்று 
Tune : Stabat Mater


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.  பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.  யோவான் 19: 26,27

1.    சிலுவையைப் பற்றி நின்று
துஞ்சும் மகனைக் கண்ணுற்று,
விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;
தெய்வ மாதா மயங்கினார்;
சஞ்சலத்தால் கலங்கினார்;
பாய்ந்ததாத்துமாவில் வாள்.

2.    பாக்கியவதி மாதா உற்றார்
சிலுவையை நோக்கிப் பார்த்தார்;
அந்தோ, என்ன வேதனை!
ஏக புத்திரனிழந்து,
துக்க சாகரத்தில் ஆழ்ந்து,
சோகமுற்றனர் அன்னை.

3.    இணையிலா இடருற்ற
அன்னை அருந்துயருற
யாவரும் உருகாரோ?
தெய்வ மைந்தன் தாயார் இந்த
துக்க பாத்திரம் அருந்த,
மாதாவோடழார் யாரோ?

4.    தம் குமாரன் காயப்பட,
முள்ளால் கிரீடம் சூட்டப்பட,
இந்த நிந்தை நோக்கினார்;
நீதியற்ற தீர்ப்புப்பெற,
அன்பர், சீஷர் கைவிட்டோட
அவர் சாகவும் கண்டார்.

5.    அன்பின் ஊற்றாம், இயேசு ஸ்வாமீ
உமதன்னைக்குள்ள பக்தி
எந்தன் நெஞ்சில் ஊற்றிடும்!
அன்பினால் என் உள்ளம் பொங்க
அனல் கொண்டகம் உருக
அருளைக் கடாட்சியும். ஆமென்.

At the Cross her station keeping

Post Comment

No comments:

Post a Comment