Sunday, May 12, 2013

பாமாலை 387-ஆ என்னில் நூறு (The Spacious Firmament Tune)

பாமாலை 387 – ஆ என்னில் நூறு வாயும்
(O DASS ICH TAUSEND ZUNGEN HÄTTE)

O that I had a thousand voices

Johann Metzner என்பவரால் 1704ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் இப்பாடல் எழுதப்பட்டது.  கேத்ரின் விங்க்வர்த் [Catherine Winkworth, 1827-1878] என்பவர் 1863ம் ஆண்டு இப்பாடலுக்கான ஆங்கில வரிகளை எழுதினார். இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் (Manchester, England) தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த இவர், ஜெர்மனியின் ட்ரெஸ்டன் (Dresden) நகரில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டது. 1854ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் உள்ள பாடல்களினால் கவரப்பட்டு, Lyra Germanica என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை கேத்ரின் அம்மையார் வெளியிட்டார். 1858ம் ஆண்டு இதே போன்றதொரு ஜெர்மன் மொழி பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீண்டும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். 1863ம் ஆண்டு The Chorale Book for England மற்றும் 1869ம் ஆண்டு Christian Singers of Germany ஆகிய புத்தகங்கள் இவர் முயற்சியினால் வெளியாயின.  ஜெர்மன் இசைப் பாரம்பரியத்தில் வெளிவந்த அநேக பாடல்கள் இவரது அயராத உழைப்பினால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலச் சபைகளுக்குள் வந்து சேர்ந்தது. தமிழில் ‘சர்வத்தையும் அன்பாய்’ (பாமாலை 386) கேத்ரின் அம்மையாரின் ஜெர்மன் – ஆங்கில மொழிபெயர்ப்புகளுள் ஒன்றாகும்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  ஆ என்னில் நூறு வாயும் நாவும்
இருந்தால் கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மை யாவும்,
அவைகளால் பிரசங்கித்து
துதிகளோடே சொல்லுவேன்,
ஓயா தொனியாய்ப் பாடுவேன்.

2.  என் சத்தம் வானமளவாக
போய் எட்ட வேண்டும் என்கிறேன்;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.

3.  ஆ, என்னில் சோம்பலாயிராதே,
என் உள்ளமே நன்றாய் விழி;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் இஸ்தோத்திரி;
இஸ்தோத்திரி, என் ஆவியே,
இஸ்தோத்திரி, என் தேகமே.

4.  வனத்திலுள்ள பச்சையான
எல்லா வித இலைகளே,
வெளியில் பூக்கும் அந்தமான
மலர்களின் ஏராளமே,
என்னோடே கூட நீங்களும்
அசைந்திசைந்து போற்றவும்.

5.  கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
கணக்கில்லா உயிர்களே
பணிந்து போற்ற உங்களுக்கும்
எந்நேரமும் அடுக்குமே;
துதியாய் உங்கள் சத்தமும்
ஓர்மித் தெழும்பி ஏறவும்.

Post Comment

No comments:

Post a Comment