Thursday, January 23, 2014

பாமாலை 258 - இயேசுவே உம்மை (St. Agnes)

பாமாலை 258 – இயேசுவே உம்மை தியானித்தால்
(Jesus, the very thought of Thee)


நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்’. சங்கீதம் 104:34

1125ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் க்ரீநோபிள் மலைப்பகுதியில், ‘லாகிராண்டி சாட்ரூஸ்என்னும் ஒரு கிறிஸ்தவத் துறவிகள் மடம் (Monastery) இருந்ததுஅந்த மடம் இருந்த இடம் இயற்கை அழகும், காட்சிகளும் நிறைந்ததுஅந்த மடத்திலிருந்த துறவிகளில் ஒருவர், பெர்னார்டு க்ளெர்வோ (Bernard of Clairvaux) என்பவர்அவர் மடத்துக்குச் செல்லும்போது ஓர் அழகிய குதிரையில் சவாரி செய்வது வழக்கம்ஆயினும் அவர் செல்லும் பாதையிலுள்ள இயற்கைக் காட்சிகளை அவர் கண்டு களிக்கவில்லைஏனெனில் அவர் மனதில் எப்போதும் ஆவிக்குரியவைகளே நிரம்பியிருந்தனஒருமுறை அவர் ஜெனீவா ஏரிக்கரை வழியாக சவாரி செய்து தனது இருப்பிடத்தைச் சேர்ந்தவுடன், நண்பர் ஒருவர், ‘ஏரியின் காட்சி எப்படியிருந்தது?’ என அவரைக் கேட்க, அவர், ‘எந்த ஏரியைப் பற்றிக் கேட்கிறீர்கள்? நான் ஏரி ஒன்றையும் காணவில்லையேஎனப் பதிலளித்தார்ஏனெனில் அவர் எப்போதும் பரலோக ராஜ்ஜியத்தைக் குறித்தே தியானம் செய்துகொண்டிருந்தார்இவ்விதமாக, அவர் ஆண்டவரின் அன்பைக் குறித்துத் தியானம் செய்துகொண்டிருக்கும்போது, ‘இயேசுவே உம்மைத் தியானித்தால்என்னும் பாடல் அவர் மனதில் உருவாயிற்றுசங்கீதம் 104:34ல் தாவீது பாடினதுபோல, ஆண்டவரைத் தியானிக்கும் தியானம் அவரது உள்ளத்திற்கு இனிதாயிருந்து அதைக் கனியச் செய்ததுஇப்பாடல் முதலில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டு, எட்வர்டு காஸ்வால் என்பவரால் 1850ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

Bernard of Clairvaux
இப்பாடலை எழுதிய பரி. பெர்னார்டு க்ளெர்வோ என்பவர் 1091ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில், பர்கண்டி மாகாணத்தில் பாண்டேயின் என்னும் கிராமத்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்தார்இருபத்திரண்டு வயதாயிருக்கையில், ‘லாகிராண்டி சாட்ரூஸ்என்னும் துறவி மடத்தைச் சேர்ந்து தமது திருப்பணியை ஆரம்பித்தார்அவர் மடத்தைச் சேர்ந்த மூன்றாண்டுகளுக்குள் அவரது ஊக்கமான உழைப்பினாலும், முன்மாதிரியான வாழ்க்கையினாலும், ஏராளமானபேர் மடத்தில் சேர்ந்து, மடம் மிக முன்னேற்றமடைந்ததுஅவருக்குப் பல உயர் பதவிகளும் பரிசுகளும் வழங்கப்பட்டனஆனால் அவற்றையெல்லாம் அவர் மறுத்து, தம் வாழ்க்கை முழுவதையும் ஆசிரமத்திலேயே கழித்தார்ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டு மன்னர்களும், ரோமாபுரியிலுள்ள பாப்பரசரும் இவரது ஆலோசனையை அடிக்கடி நாடினர்பல நூற்றாண்டுகளுக்குப்பின் மார்ட்டின் லூத்தர் என்னும் சீர்திருத்தவாதி, பரி. பெர்னாடைக் குறித்துநான் கேட்டறிந்த கிறிஸ்தவ துறவிகள் எல்லாரையும் விட இவரே மிகச்சிறந்த பக்திமான்எனப்போற்றியுள்ளார்.

இயேசுவே உம்மை தியானித்தால்என்னும் பாடலைக் குறித்து, டேவிட் லிவிங்ஸ்டன் என்னும் புகழ்பெற்ற மிஷனெரி எழுதியதாவது. ‘பரி. பெர்னார்டு எழுதிய இப்பாடலானது ஆப்பிரிக்காவின் அகன்ற காடுகளில் நான் சுற்றித் திரியும்போது என் காதுகளில் தொனித்துக்கொண்டேயிருக்கிறதுநான் மிகப்பிரியமாகப் பாடும் பாடல்களில் இது ஒன்றாகும்’.

பரி. பெர்னர்டு எழுதிய பாடல்களில் முக்கியமானவை:

‘இரத்தம் காயம் குத்தும்’ – பாமாலை 102
‘ஜீவாதிபதி ஜோதியே’ – பாமாலை 263

பரி. பெர்னார்டு  1153ம் ஆண்டு, தமது 62ம் வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1.    இயேசுவே உம்மை தியானித்தால்
உள்ளம் கனியுமே
கண்ணார உம்மைக் காணுங்கால்
பரமானந்தமே.

2.    மானிட மீட்பர் இயேசுவின்
சீர் நாமம் போலவே
இன் கீத நாதம் ஆய்ந்திடின்
உண்டோ இப்பாரிலே?

3.    நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு
நம்பிக்கை ஆகுவீர்
நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு
சந்தோஷம் ஈகுவீர்.

4.    கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர்
ஈவீர் எந்நன்மையும்
கண்டடைந்தோரின் பாக்கியசீர்
யார் சொல்ல முடியும்?

5.    இயேசுவின் அன்பை உணர்ந்து
மெய் பக்தர் அறிவார்
அவ்வன்பின் ஆழம் அளந்து
மற்றோர் அறிந்திடார்

6.    இயேசுவே, எங்கள் முக்தியும்
பேரின்பமும் நீரே
இப்போதும் நித்திய காலமும்
நீர் எங்கள் மாட்சியே.


Post Comment

No comments:

Post a Comment