Saturday, September 7, 2019

பாமாலை 129 - நல்ல ஜெயம் போர் செய்தின்றே

பாமாலை 129 – நல்ல ஜெயம்! போர் செய்தின்றே
(Triumph, Triumph es kommt mit Pracht)


Prätorius, Benjamin
இப்பாடலை எழுதிய ப்ரத்தோர்யஸ் பெஞ்சமின் (Prätorius, Benjamin) 1636ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி, ஜெர்மனியில் உள்ள Obergreisslau என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் போதகர் Andreas Prätorius என்பவர்.  ஜெர்மனியின் Leipzig நகரத்தில் தனது இறையியல் படிப்பை முடித்த பெஞ்சமின், 1661ம் ஆண்டு அரசவைக் கவியாக நியமிக்கப்பட்டார். தமது ஆயர் பணியினூடே, ஜெர்மன் மொழியில் இவர் எழுதிய பல்வேறு பாடல்கள் பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றன. பெஞ்சமின் 1659ம் ஆண்டு “"Jauchzender Lebanon" எனும் பாடல் தொகுப்பையும், 1664ம் ஆண்டு “"Spielende Myrtenaue" எனும் பாடல் தொகுப்பையும் வெளியிட்டார். இவர் மரித்த சரியான தேதி தெரியவில்லை எனும்போதிலும், 1674ம் ஆண்டு இவர் மறுமைக்குட்பட்டதாக வரலாற்று ஆய்வர்கள் கருதுகின்றனர். இவரைக் குறித்த மேலதிக விபரங்கள் பதிவுசெய்யப்படவில்லை.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano






1. நல்ல ஜெயம், போர் செய்தின்றே
கெலிப்பாய் ராஜா வாராரே:
அவரைச் சேர்ந்தோர் யாவரும்
இந்த ஜெயத்தைப் பாடவும்;

நல்ல ஜெயம்! நல்ல ஜெயம்!
முடிவில்லா பூரிப்புமாம்:
அல்லேலூயா!

2. மீட்பர் அடைந்த வெற்றிக்கு
எச்சிஷ்டியும் களிக்குது;
சீர்கெட்ட பூமிக்குள்ளதாம்
சாபம் அத்தால் நிவிர்த்தியாம்.

3. கர்த்தர் மரித்த நாளிலே
இருண்ட சூரியன் இன்றே
அவர் உயிர்த்த வெற்றிக்கு
பிரகாசமாய் விளங்குது.

4. மா சாந்த ஆட்டுக்குட்டியாய்
இருந்தோர் வல்ல சிங்கமாய்
வாரார், பகைஞரினது
பத்திரக் காவல் விருதா.

5. பாவ விஷத்தின் தோஷமும்
அத்தால் இருந்த தீமையும்
ரட்சகராலே நீங்கிற்று;
மகிமை தேடப்பட்டது.

6. உத்தரவாதமாயிற்று
சபிக்கப்பட்ட ஆவிக்கு
நம்மில் பலமில்லாதேபோம்,
சாவுக்கினிப் பயந்திரோம்.

7. மேட்டிமையான சாத்தானே
தள்ளுண்டு போய் விழுந்ததால்,
அவன் அரண்கள் யாவுக்கும்
நிர்மூலமாகுதல் வரும்.

8. சீஷரின் ஆத்துமங்களை
நீர்தேற்றி, சமாதானத்தை
தந்ததுபோல, இயேசுவே,
நீர் எங்களுக்கும் தாரீரே.

9. நாங்கள் உடந்தையாய் உம்மால்
ஜெயித்து, மோட்ச வாசலால்
உட்பிரவேசித் தென்றைக்கும்
உம்முட அன்பைப் பாடவும்.


Post Comment

No comments:

Post a Comment