Wednesday, September 18, 2019

பாமாலை 132 - வைகறை இருக்கையில் (St. George (Elvey))

பாமாலை 132 – வைகறை இருக்கையில்

Sir George Job Elvey
இப்பாடலுக்கான St. George (Elvey) எனும் ராகத்தை இயற்றியவர் Sir George Job Elvey எனும் ஆங்கிலேய இசையறிஞர் ஆவார். ஜார்ஜ் 1816 ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கேன்டர்பரியில் பிறந்தார், பல தலைமுறைகளாக, அவரது குடும்பம் கதீட்ரல் நகரத்தின் இசை வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டிருந்தது. சிறு வயதிலேயே, கேன்டர்பரி கதீட்ரலின் பாடகர் குழுவில் அவர் அனுமதிக்கப்பட்டார், 1830 ஆம் ஆண்டில், ஜார்ஜின் சகோதரர் ஸ்டீபன், New College, Oxford ன் ஆர்கனிஸ்ட் ஆக நியமிக்கப்பட்ட பின்னர், ஜார்ஜ் அவருடன் வசிக்கச் சென்றார், மேலும் அவரது சகோதரரின் வழிகாட்டுதலின் கீழ் தனது இசைக் கல்வியை முடித்தார். பதினேழு வயதிற்குள்ளாகவே ஜார்ஜ் ஆர்கன் இசைப்பதில் நிபுணத்துவம் பெற்று Christ Churchன் தற்காலிக ஆர்கனிஸ்ட்டாகப் பணிபுரியத் துவங்கினார்.  1834 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த “Bow Down Thine ear, Lord’ என்ற பாடலுக்காக இவருக்கு Gresham Gold Medal வழங்கப்பட்டது.

1856-1860க்கு இடைப்பட்ட காலத்தில் St. George’s Chapel’ல் நடந்த பல்வேறு சிறப்பு ஆராதனைகளுக்கென George’ன் மிகச்சிறந்த படைப்புகள் உருவாகி பாடல் வடிவம் பெற்றன. 'The Souls of the Righteous' மற்றும் 'Blessed are the Dead' ஆகிய கீதங்கள் Prince Consortன் Funeral ஆராதனைகளுக்கென இயற்றப்பட்டவை. மேலும் ஜார்ஜ், Prince of Walesன் திருமணத்திற்கென 1863ம் ஆண்டு ‘Sing Unto God’ என்ற பாடலுக்கு இசையமைத்தார்.

ஜார்ஜ் ஆலய ஆராதனைக்கென்று ஏராளமான பாடல்களுக்கான இசையை இயற்றினார். ஏற்கனவே குறிப்பிட்டுள்ள கீதங்களைத் தவிர, 'Cantate Domino,'  'Deus misereatur', போன்ற புகழ்பெற்ற கீதங்களுக்கான இசையையும் எழுதியது மட்டுமல்லாமல், பியானோ மற்றும் வயலினுக்கான இசைக்குறிப்புகள், 15 Part பாடல்களையும் இயற்றியுள்ளார்.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1.வைகறை இருக்கையில்
ஓடி வந்த மரியாள்
கல்லறையின் அருகில்
கண்ணீர் விட்டு அழுதாள்
’எந்தன் நாதர் எங்கேயோ?
அவர் தேகம் இல்லையே!
கொண்டுபோனவர் யாரோ?’
என்று ஏங்கி நின்றாளே.

2. இவ்வாறேங்கி நிற்கையில்
இயேசு ’மரியாள்’ என்றார்
துக்கம் கொண்ட நெஞ்சத்தில்
பூரிப்பை உண்டாக்கினார்
தெய்வ வாக்கு ஜீவனாம்
தெய்வ நேசம் மோட்சமே
தூய சிந்தையோர் எல்லாம்
காட்சி பெற்று வாழ்வாரே.

Post Comment

No comments:

Post a Comment