Thursday, April 2, 2020

பாமாலை 156 - இவ்வுயர் மலை மீதினில் (Tune - Tallis Lamentation)

பாமாலை 156 – இவ்வுயர் மலை மீதினில்
(O Master, it is Good to be)
Words: Arthur Penrhyn Stanley

Arthur Penrhyn Stanley
Pic Source : Wikipedia
இப்பாடலை எழுதியுள்ள ஆர்த்தர் ஸ்டான்லி (Arthur Penrhyn Stanley) இங்கிலாந்தின் வடமேற்கு மாகாணமான ஷெஷய்ர் (Cheshire) பகுதியில் 13 டிசம்பர் 1815ம் ஆண்டு பிறந்தார்.  ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகக் கல்லூரியில் பத்து வருடங்கள் பேராசிரியராகப் பணிபுரிந்த ஸ்டான்லி, அந்நேரத்தில் இங்கிலாந்து திருச்சபை வரலாறு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு, ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதி தொகுத்து வெளியிட்டார்.  1856 முதல் 1863 வரை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ’Regius Professor of Ecclesiastical History’ ஆக பணிபுரிந்த ஸ்டான்லி, ’யூத திருச்சபையின் வரலாற்றை’ இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டார்.  1863ம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தின் Dean ஆக ஸ்டான்லி நியமிக்கப்பட்டார்.

இங்கிலாந்தின் திருச்சபை வரலாற்றைக் குறித்த ஏராளமான கட்டுரைகளையும், ஆய்வுக் குறிப்புகளையும் எழுதிய ஸ்டான்லி, தன் வாழ்நாளில் சில முக்கிய பாடல்களையும் எழுதி வெளியிட்டார்.  இவற்றுள் “இவ்வுயர்மலை மீதினில்’ பாடலும் ஒன்று.  நம் ‘கிறிஸ்து சபை பாமாலை’யில், மருரூபத் திருநாளுக்கான ஒரே பாடலாக இப்பாடல் கொடுக்கப்பட்டுள்ளது.  ஸ்டான்லி இப்பாடலை 1870ம் ஆண்டு Macmillan’s Magazine’ல் வெளியிட்டார். இப்பாடலைப் பற்றிய குறிப்பு Nutter, Charles S. & Wilbur F. Tillett. வெளியிட்ட ”The Hymns and Hymn Writers of the Church” புத்தகத்தில் காணக் கிடைக்கிறது.  

லூக்கா 9ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ’கிறிஸ்து மறுரூபமான நிகழ்வு’ என்பது இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் மட்டுமல்லாது, ”இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்ற பிதாவின் சத்தம் தொனிக்கும் நிகழ்வாதலால், இது ஒவ்வொரு கிறிஸ்தவரின் நம்பிக்கையின் அச்சாரமாகவும் திகழ்கிறது. 

இயேசுவும் அவருடைய சீஷர்களான பேதுருவும், யோவானும், யாக்கோபும், ஜெபம் செய்வதற்கென்று மறுரூப மலைக்குச் செல்கிறார்கள். லூக்கா 9:29ல் “அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது” என்று நாம் வாசிக்கிறோம்.  அப்போது தீர்க்கதரிசிகளான மோசேயும் எலியாவும் மகிமையோடே காணப்பட்டு இயேசுவுடனே எருசலேமிலே அவர் நிறைவேற்றப்போகிற அவர் மரணத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.  அந்த நேரத்திலே சீஷர்கள் நித்திரை மயக்கமாயிருந்து, பின்னர் விழித்து இயேசுவையும், உடன் நின்ற மோசையையும் எலியாவையும் கண்டு, அவர்கள் பிரிந்து சென்றபின்னர் ‘ஐயரே நாம் இங்கே இருக்கிறது நல்லது. நாம் உமக்கும் மோசேவுக்கும் எலியாவுக்கும் ஒவ்வொரு கூடாரங்களைப் போடுவோம்” என்று பேதுரு கூறும் நிகழ்வையும் வாசிக்கிறோம். ”Master, it is good for us to be here” Luke 9:33


இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்ற பிதாவின் கட்டளை தொனிக்கும் ‘இயேசு மறுரூபமாகுதலின் நிகழ்வு’, கிறிஸ்துவின் ஞானஸ்நானத்துக்கு நிகரான இன்னொரு நிகழ்வாகும்.  இருப்பினும் மறுரூபமாக்குதலைக் குறித்த பாடல்கள் பாடலாசிரியர்களால் எழுதப்படவில்லை.   இதன் காரணமாய்,  ஸ்டான்லி, இயேசு மறுரூபமாகிய நிகழ்வின் முக்கியத்துவத்தை எழுத எண்ணி அதை மிகவும் நேர்த்தியாய் இப்பாடலில் விவரித்து எழுதியுள்ளார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1.       இவ்வுயர் மலைமீதினில்
எம் நாதா, உந்தன் பாதத்தில்
எம் பாவக் கண்ணால் காண்கிறோம்
உம் தாசர் பூர்வ பக்தராம்;
சீனாய் மலைமேல் கற்பனை
வானோரால் பெற்ற மோசேயை;
தீ, காற்று, கம்பம் கண்டோனை
மா மென்மை சத்தம் கேட்டோனை.

2.         இவ்வுயர் மலை மீதிலே
எம் நாதர் சீஷர் மூவரே;
கற்பாறை போன்ற பேதுரு
நிற்பான் எப்பாவம் எதிர்த்து;
இடி முழக்க மக்களாம்;
கடிந்த பேச்சு யாக்கோபாம்
'அன்பே கடவுள்' போதிப்பான்
உன்னத ஞானியாம் யோவான்.

3.         இவ்வுயர் மலைமீதிலும்
உயர்ந்து உள்ளம் பொங்கிடும்;
பரமன் ஜோதி தோன்றிடும்.
பகலோன் ஜோதிமாய்த்திடும்;
மா தூய ஆடை வெண்மையே,
மாந்தர் காணா விந்தையே!
நாம் மேலும் மேலும் ஏறியே
நம் நாதர் ரூபம் காண்போமே.

4.         இவ்வுயர் மலைமீதினில்
எம் நாதர் தூய பாதத்தில்,
மா இருள் மேகம் மூடினும்,
மா ஜோதி பார்வை வாட்டினும்,
காண்போமே தெய்வ மைந்தனை,
கேட்போமே தெய்வ வார்த்தையை.
'இவர் என் நேச மைந்தனார்!
இவர்க்குச் செவிகொடுப்பீர்.'

O Master, it is good to be
High on the mountain here with Thee,
Where stand revealed to mortal gaze
Those glorious saints of other days,
Who once received on Horeb’s height
Th’eternal laws of truth and right,
Or caught the still small whisper, higher
Than storm, than earthquake, or than fire.

O Master, it is good to be
With Thee, and with Thy faithful three;
Here, where the Apostle’s heart of rock
Is nerved against temptation’s shock;
Here, where the Son of Thunder learns
The thought that breathes, and word that burns;
Here, where on eagle wings we move
With him whose last best creed is love.

O Master, it is good to be
Entranced, enwrapt, alone with Thee;
And watch Thy glistening raiment glow
Whiter than Hermon’s whitest snow;
The human lineaments that shine
Irradiant with a light divine;
Till we too change from grace to grace,
Gazing on that transfigured face.

O Master, it is good to be
Here on the holy mount with Thee;
When darkling in the depths of night,
When dazzled with excess of light,
We bow before the heavenly voice
That bids bewildered souls rejoice,
Though love wax cold, and faith be dim,
This is My Son, O hear ye Him.

Post Comment

No comments:

Post a Comment