Sunday, April 19, 2020

பாமாலை 195 - நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்

பாமாலை 195 – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
(Als Jesus Christus in der Nacht)
Words: Johann Heermann
Meter : 8,7,8,7
Bavarian 84

‘கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தின் 195ம் பாடலான ‘நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்” எனும் இப்பாடல், ‘பரிசுத்த நற்கருணை’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.  ‘Als Jesus Christus’ எனும் இப்பாடலின் ஜெர்மானிய மூல வடிவத்தை எழுதியவர் ஜோஹன் ஹீர்மன் (Johhann Heermann). இவரது காலம் 1585-1647.

சிறுவன் ஜோஹனின் இளவயதில் ஒருமுறை அவர் நோயுற்றிருந்தபோது, அவரது தாயார் செய்த பொருத்தனையின் விளைவாய், ஜோஹன் இறைப்பணிக்கென்று தம்மை அர்ப்பணித்தார்.  குருப்பட்டம் பெற்ற பின்பு ஜோஹன் 1611ம் ஆண்டு Koben எனும் இடத்தில் உள்ள லுத்ரன் திருச்சபையில் ஆயராகத் தமது பணியைத் துவக்கினார்.  1634ம் ஆண்டு தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்றின் காரணமாக இவரால் அருளுரைகள் வழங்கும் பணியைத் தொடர இயலவில்லை.   1638ம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், தமது வாழ்நாளில் அநேகம் பாடல்களை எழுதியுள்ளார்.  அக்காலகட்டத்தில் இவரது பாடல்கள் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்து திருச்சபைகளில் பயன்படுத்தப்பட்டன.  அவற்றுள் ‘நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்’ பாடலும் ஒன்றாகும்.

தென்னிந்தியத் திருச்சபையின் ‘கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தில் 8 சரணங்களுடனும், லுத்ரன் திருச்சபை பாடல் புத்தகத்தில் 9 சரணங்களுடனும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.  லுத்ரன் திருச்சபை புத்தகத்தில்,

**முன்னாள் பலி எல்லாம் நிழல்
நானே கடனைத் தீர்ப்பர்
எம் ரத்தத்தால் ரட்சிக்குதல்
உண்டாகும் நானே மீட்பர்

எனும் சரணம் ஏழாவது சரணமாக இடம்பெற்றுள்ளது.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano






































1. நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
மரிக்க வந்து, சாவில்
கிடந்த நம்மைத் தயவாய்
நினைக்கும் அன்றிராவில்;

2. அன்புள்ள கையில் அப்பத்தை
எடுத்து ஸ்தோத்தரித்து,
அதற்குப் பிறகே அதை
சீஷர்களுக்குப் பிட்டு;

3. "வாங்கிப் புசியுங்கள், இது
உங்களுக்காய்ப் படைத்து
கொடுக்கப்பட்ட எனது
சரீரம்" என்றுரைத்து;

4. பிற்பாடு பாத்திரத்தையும்
எடுத்துத் தந்தன்பாக
உரைத்தது: "அனைவரும்
இதில் குடிப்பீராக;

5. இதாக்கினைக்குள்ளாகிய
அனைவர் ரட்சிப்புக்கும்
சிந்துண்டுபோகும் என்னுட
இரத்தமாயிருக்கும்;

6. புது உடன்படிக்கைக்கு,
இதோ, என் சொந்த ரத்தம்
இறைக்கப்பட்டுப் போகுது,
வேறே பலி அபத்தம்;

7. இதுங்கள் அக்கிரமங்களை
குலைக்கிற ஏற்பாடே;
இதற்குச் சேர்ந்தென் பட்சத்தை
நினையுங்கள்" என்றாரே.

8. , ஸ்வாமீ, உமக்கென்றைக்கும்
துதி உண்டாவதாக;
இப்பந்தியால் அடியேனும்
பிழைத்துக்கொள்வேனாக.

**முன்னாள் பலி எல்லாம் நிழல்
நானே கடனைத் தீர்ப்பர்
எம் ரத்தத்தால் ரட்சிக்குதல்
உண்டாகும் நானே மீட்பர்

**(7th Stanza in Lutheran Hymnal)

Post Comment

No comments:

Post a Comment