Tuesday, April 7, 2020

பாமாலை 162 - இயேசு ஸ்வாமி, சீமோன் யூதா (Oriel)

பாமாலை 162 – இயேசு ஸ்வாமி சீமோன்
(Thou who sentest Thine apostles)
Words: John Ellerton
Tune : Oriel
Tune composed by : Caspar Ett

Rev. John Ellerton
இப்பாடலை எழுதியுள்ள அருள்திரு. ஜான் எலர்ட்டன் (Rev. John Ellerton) 16 டிசம்பர் 1826ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார்.  தன் கல்லூரிப் படிப்பை முடித்து, 1850ம் ஆண்டு ஜான் இறைப்பணிக்கென்று தன்னை அர்ப்பணித்து, இங்கிலாந்தின் பல்வேறு திருச்சபைகளில் ஆயராகப் பணிபுரிந்தார்.  ஆயராகப் பணிபுரிந்தபோதும் ஒரு தலைசிறந்த பாடலாசிரியராக அறியப்பட்ட ஜான், பாடல்களை மொழிபெயர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.  சற்றேறக்குறைய 80 பாடல்களை எழுதிய, மொழிபெயர்த்த ஜானின் படைப்புகள், அக்காலத்தில் பல்வேறு பாடல் புத்தகங்களின் பதிப்புகளில் இடம்பெற்றன.  இவற்றுள் “Thou who sentest Thine Apostles” பாடல் முக்கியமான ஒரு பாடலாகும். இப்பாடல் 1874ம் ஆண்டு ஜூன் மாதத்தில் Ancient & Modern பாடல் புத்தகத்தின் revised edition’க்காக ஜான் எழுதி, 1875ம் ஆண்டின் பதிப்பில் வெளியிடப்பட்டது. ’பரி. சீமோன் மற்றும் பரி. யூதா’ திருநாட்களுக்கென ஜான் எழுதிய இப்பாடலில் ஆறு சரணங்கள் இடம்பெற்றன. பின்னர் வந்த பதிப்புகளில் நான்கு சரணங்கள் மட்டும் எஞ்சின.  ஜான் 15 ஜூன் 1893ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.


Caspar Ett.
நம் கிறிஸ்து சபை பாமாலை புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் “Oriel” என்ற இப்பாடலுக்கான ராகத்தை இயற்றியவர் ஜெர்மானிய இசையமைப்பாளரான Caspar Ett.  இவரது காலம் கி.பி. 1788-1847.  தனது ஒன்பதாவது வயதில் Benedictine Abbey’யின் பாடகர் குழுவில் இணைந்த இவர், 1816ம் ஆண்டு Munich நகரத்தில் உள்ள St. Michael’s ஆலயத்தில் ஆர்கனிஸ்ட் ஆக பணிபுரிந்தார்.  கத்தோலிக்கத் திருச்சபையின் அநேக பாடல்களுக்கு இசையமைத்த காஸ்பரின் படைப்புகளுள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபல இசைவடிவங்களான Cantica Sacra (1840), Ave maris stella, Stabat Mater, Attollite portas, Haec Dies, Laudate Dominum, Pange lingua, Tantum Ergo Sacramentum, Requiem in C minor ஆகியவையும் அடங்கும்.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. இயேசு ஸ்வாமி, சீமோன் யூதா
என்னும் உம் அப்போஸ்தலர்,
ஒன்று சேர்ந்து உமக்காக
உழைத்த சகோதரர்,
தங்கள் வேலை ஓய்ந்த போது
வெற்றிக் கிரீடம் பெற்றனர்.

2. அவர்கள் உம் அருளாலே
நேசத்தோடு போதித்தார்;
சபையில் முற்காலம் பல
அற்புதங்கள் காண்பித்தார்;
மார்க்கக் கேடுண்டான வேளை
எச்சரித்துக் கண்டித்தார்.

3. சீமோன் யூதா போன்ற உந்தன்
பக்தர் பல்லோருடனும்,
பளிங்காழி முன்னே நாங்கள்
உம்மைப் போற்றும் அளவும்,
சாவுக்கும் அஞ்சாமல் உம்மை
பற்ற ஏவி அருளும்.

4. அற்புதங்கள் செய்யும் வல்ல
மா பிதாவே, ஸ்தோத்திரம்;
நீதி சத்தியமும் நிறைந்த
மாந்தர் வேந்தே, ஸ்தோத்திரம்;
தூய ஆவியே, என்றைக்கும்
உமக்கெங்கள் ஸ்தோத்திரம்.


1        Thou Who sentest Thine apostles
Two by two before Thy face,
Partners in the night of toiling,
Heirs together of Thy grace,
Throned at length, their labors ended,
Each in his appointed place;

2        Praise to Thee for those Thy champions
Whom our hymns to-day proclaim;
One, whose zeal by Thee enlightened
Burned anew with nobler flame;
One, the kinsman of Thy childhood,
Brought at last to know Thy Name.

3        Praise to Thee! Thy fire within them
Spake in love, and wrought in power;
Seen in mighty stars and wonders
In Thy Church's mourning hour;
Heard in tones of sternest warning
When the storms began to lower.

4        Once again those storms are breaking;
Hearts are failing, love grows cold;
Faith is darkened, sin abounding;
Grievous wolves assail Thy fold:
Save us, Lord, our one Salvation;
Save the faith revealed of old.

5        Call the erring by Thy pity;
Warn the tempted by Thy fear;
Keep us true to Thine allegiance,
Counting life itself less dear;
Standing firmer, holding faster,
As we see the end draw near:

6        Till with holy Jude and Simon
And the thousand faithful more,
We, the good confession witnessed
And the lifelong conflict o'er,
On the sea of fire and crystal
Stand, and wonder, and adore. 

Post Comment

No comments:

Post a Comment