Sunday, January 16, 2022

பாமாலை 312 - சிலுவை தாங்கு மீட்பர் (Breslau)

பாமாலை 312 - சிலுவை தாங்கு மீட்பர் 
Take up thy cross the Saviour said
Tune : Breslau


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. சிலுவை தாங்கு மீட்பர் பின்
அவரின் சீஷனாகவே;
வெறுப்பாய் உன்னை லோகத்தை
பின் செல்வாய் தாழ்மையாகவே.

2. சிலுவை தாங்கு, பாரத்தால்
கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்;
விண் பலம் உன்னைத் தாங்கிடும்,
வல்லமை வீரம் பெறுவாய்.

3. சிலுவை தாங்கு, மேட்டிமை
கொள்ளாய், எந்நிந்தை எண்ணிடாய்;
நீ பாவம் சாவை மேற்கொள்ள
உன் மீட்பர் மாண்டார் ஈனமாய்.

4. சிலுவை தாங்கி நின்றிடு,
தீரமாய் மோசம் யாவிலும்;
சிலுவை சேர்க்கும் மோட்சத்தில்
சாவின் மேல் வெற்றி தந்திடும்.

5. சிலுவை தாங்கிக் கிறிஸ்துவை
பின் செல்வாய் ஆயுள் முற்றுமே;
மகிமை கிரீடம் சூடுவாய்
சிலுவை தாங்கின் மட்டுமே.

6. திரியேகரான மா கர்த்தா,
என்றென்றும் போற்றப்படுவீர்;
மேலோக நித்திய வாழ்வுக்கே
அடியாரை நடத்துவீர்.

Post Comment

No comments:

Post a Comment