Sunday, January 23, 2022

பாமாலை 313 - மா பெரிதாம் நின் (St.Raphael)

பாமாலை 313 - மா பெரிதாம் நின் 
Tune St. Raphael


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. மா பெரிதாம் நின் கிருபை
சாவரை மறவேனே;
மாதாவின் கர்ப்பத்திருந்தே
மா தயவாய் என்னையே
அழைத்தீரே,
மா தவம் நான் செய்தேனோ?

2. அந்தகாரத்தால் நிறைந்து
சொஸ்தமின்றி வாழ்ந்தேனே;
தந்து உம்மைச் சொந்தமாக
என்தனை நீர் மீட்டீரே;
நாதா உம்மை
என்றும் நான் துதிப்பேனே.

3. நான் நினைத்த பாதை வழி
தேன் கசியும் பக்கமே
செல்ல எத்தனித்தபோது,
அல்லவென்று தடுத்தே
ஆட்கொண்டீரே,
ஆண்டாண்டும்மைப் போற்றுவேன்.

4. ஊழியத்தை உண்மையுடன்
வாழ்நாளெல்லாம் செய்யவும்;
நீடும் கிருபை சூடியென்னை
வீடு சேரும்வரையும்
பலவீனம்
தாங்கி தயை செய்வீரே.

Post Comment

No comments:

Post a Comment